பவர் விண்டோ குறைப்பாடு: 6.5 மில்லியன் வாகனங்களை டொயோட்டா திரும்ப அழைப்பு
published on அக்டோபர் 23, 2015 02:37 pm by bala subramaniam
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை:
ஏர்பேக் பிரச்சனையை தொடர்ந்து டொயோட்டா நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள மற்றொரு குறைபாடான பவர் விண்டோ சுவிட்ச் அமைக்கப்பட்டதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர், தனது ஏறக்குறைய 6.5 மில்லியன் வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக, டிரைவரின் கட்டுப்பாட்டில் உள்ள பக்கவாட்டு பவர் விண்டோ மாஸ்டர் சுவிட்ச்சில் மின்னிணைப்பு குளறுபடி (ஷாட் சர்க்யூட்) ஏற்பட்டு, மற்ற பாகங்களை அதிக வெப்பத்திற்கு உள்ளாக்கும் வாய்ப்புள்ளது. இந்த அதிக வெப்பம் காரணமாக அந்த பாகங்கள் உருகி தீப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் 2016 டொயோட்டா ஃபார்ச்யூனர், ஆஸ்திரேலியாவில் அறிமுகம்
கடந்த 2005 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரையுள்ள இடைப்பட்ட காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட யாரிஸ், கொரோலா, காம்ரி மற்றும் RAV4 ஸ்போர்ட் பயன்பாட்டு வாகனங்கள் ஆகியவை திரும்ப அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மாடல்களில் உட்படுகின்றன. இந்த வகையில் வட அமெரிக்காவில் ஏறக்குறைய 2.7 மில்லியன் வாகனங்களும், ஐரோப்பாவில் 1.2 மில்லியனும், ஜப்பானில் 6,00,000 வாகனங்களும் திரும்ப அழைக்கப்பட்டதில் உட்படுகின்றன. ஆனால் இந்த குறைபாடு காரணமாக இதுவரை எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக டொயோட்டா நிறுவனம் வலம் வரும் நிலையில், அவ்வப்போது இது போன்ற திரும்ப அழைப்பு அறிவிப்புகள் வருவதால், அந்நிறுவன கார்களின் தரத்தின் மீதான நம்பிக்கையை குலைப்பதாக அமையலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
படிக்க தவறாதீர்கள்: 16 டொயோட்டா இனோவா, 2015 நவம்பர் 23 ஆம் தேதி வெளியீடு
முன்னதாக, இந்த பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் வகையில், எதியோஸ் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, இந்த ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், அந்த பிரிவில் உள்ள மற்ற போட்டியாளர்களை போல, எதியோஸ் சீரியஸ் எதிர்பார்த்த அளவிலான விற்பனையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: புதுப்பிக்கப்பட்ட டொயோட்டா எதியோஸ் லிவா அறிமுகம்