டொயோடா உலகம் முழுமையிலும் இருந்து தனது 2.9 மில்லியன் வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது.
சீட் பெல்டில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக டொயோடா நிறுவனம் சுமார் 3 மில்லியன் வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது. பின்புற இருக்கைகளில் உள்ள சீட் பெல்ட், விபத்து நேர்கையில் அறுந்து போவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், விபத்து சமயத்தில் சீட் பெல்ட் அறுந்து போனதன் காரணமாக ஒரு பயணி உயிர் இழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டொயோடா இந்த முடிவை எடுத்துள்ளது. டொயோடா நிறுவனத்தின் தாயகமான ஜப்பான் முதல் அமெரிக்க வரை ஏராளமான டொயோடா வாகனங்கள் இந்த சீட் பெல்ட் குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எந்த ஒரு டொயோடா வாகன மாடலிலும் இந்த சீட் பெல்ட் பிரச்சனை இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த திரும்ப அழைக்கப்பட்டுள்ள டொயோடா கார்களில் RAV4 மற்றும் வேன்கார்ட் ஆகிய மாடல் கார்கள் அதிக அளவில் இடம் பெற்று உள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு கார்களில் RAV4 உலகம் முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வேன்கார்ட் வாகனங்கள் பிரத்தியேகமாக ஜப்பானிய சந்தைக்கு என்றே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் வாகனங்களாகும். ஜூலை 2005 - ஆகஸ்ட் 2014 மற்றும் அக்டோபர் 2005 - ஜனவரி 2016 ஆகிய காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட RAV4 வாகனங்களும், அக்டோபர் 2005 - ஜனவரி 2016 வரை தயாரிக்கப்பட்ட வேன்கார்ட் வாகனங்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. வாடா அமெரிக்காவில் இருந்து 1.3 மில்லியன் வாகனங்களும் , ஐரோப்பாவில் இருந்து 625,000 வாகனங்களும் , சீனாவிலிருந்து 434,000 வாகனங்களும் ஜப்பானில் இருந்து 177,000 வாகனங்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
RAV4 வாகனங்களின் பின்புற இருக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள உலோக சீட் குஷன் பிரேம்களில் பிரச்சனை இருப்பதை இந்நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாக தெரிகிறது. வாகனம் முன்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளாகும் சமயத்தில் , இந்த உலோக பிரேம்கள் பின்புற சீட் பெல்ட்டை கிழித்துக் கொண்டு வெளிவருவதால் பின்புற பயணிக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகிறது. இந்த உலோக சீட் குஷன் ப்ரேம் (frame) மீது ரெசின் கொண்டு மூடுவதன் மூலம் இந்த பிரச்சனையை எளிதாக டீலர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் சரி செய்து விட முடியும் என்று டொயோடா நிறுவனம் கூறியுள்ளது.
மற்ற கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது , டொயோடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் , “ இந்த நிலை மற்ற வாகனங்களில் ஏற்படாது , ஏனெனில், மற்ற வாகனங்களில் உள்ள உலோக சீட் - குஷன் ப்ரேமின் வடிவமைப்பு வேறு வடிவத்தில் உள்ளது " என்று கூறினார். மேலும் இந்த திரும்ப அழைக்கப்பட்ட நிகழ்வு குறித்து தெளிவு படுத்திய டொயோடா நிறுவனம் , இதற்கு முன் குறைபாடுள்ள காற்று பைகளை மாற்ற வேண்டி ஒரு முறை தங்கள் வாகனங்களை திரும்ப அழைத்த நிகழ்வையும் இந்த நிகழ்வையும் ஒன்றாக பார்க்க முடியாது என்று கூறியுள்ளது. மேலும் முன்னர் வாகனங்களை திரும்ப அழைத்தது ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை என்றும் இப்போது திரும்ப அழைப்பதற்கு காரணம் தங்களுடைய சப்ளையர் தகடா செய்த தவறு என்றும் கூறியுள்ளது.
மேலும் வாசிக்க : டொயோட்டா இனோவா கிரைஸ்ட்டாவில், நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை!