“FAME இந்தியா எக்கோ ட்ரைவ்” நிகழ்ச்சியில் டொயொட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பங்கேற்றது
டெல்லியில் நடைபெற்ற “FAME இந்தியா எக்கோ ட்ரைவ்” நிகழ்ச்சியில் டொயொட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பங்கு பெற்றது. 2015 நவம்பர் மாதம் 30 -ஆம் தேதியில் இருந்து பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள ‘2015 யுனைட்டெட் நேஷன்ஸ் கிளைமேட் சேஞ்ச் கான்பரன்ஸ்' நிகழ்ச்சிக்கு இது ஒரு முன்னோடியாக இருக்கும். கனரக தொழில்துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, பொதுமக்களுக்கான ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக இருக்கும். மேலும், “ஃபாஸ்டர் அடாப்சன் அண்ட் மேனுபாக்சரிங் ஆஃப் ஹைபிரிட் அண்ட் எலக்ட்ரிக் வேகிக்ல்ஸ்” (FAME) எனும் திட்டத்தின் மூலம் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகிப்பதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சி எரிபொருள் சேமிப்பின் தேவையை உணர்த்துவதோடு நின்றுவிடாமல், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கு இந்த வாகனங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதையும் எடுத்துரைக்கும்.
“உலகத்தில், எரிபொருள் பயன்படுத்துவத்தில் அமெரிக்க, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா இருக்கிறது. நான்காவது இடத்தைப் பிடித்துள்ள நம் நாடு, உலகின் மொத்த எரிபொருள் நுகர்தலில் 4.4 சதவிகிதம் உபயோகிக்கிறது. இந்தியாவில் முழுமையான ஹைபிரிட் வாகனங்களை உபயோகிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவிக்கும் ‘FAME எக்கோ ட்ரைவ்' நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக செயல்படுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். முதல் முதலாக, உள்நாட்டிலேயே முழுமையான ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் தயாரான வாகனம் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் வாகனமாகும். இது, 48 சதவிகிதம் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரவல்லதாகும். மேலும், இந்த காரின் அளவிலேயே உள்ள பெட்ரோல் மாடலை விட, 25 சதவிகிதத்திற்கும் குறைவான கார்பன் புகையையே இது வெளியிடுகிறது. எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிப்பது முதல் அற்புதமான தொழில்நுட்பத்தைக் கையாள்வது வரை, எங்களது அனைத்து வேலைகளிலும், எங்கள் ஒவ்வொரு வாகனத் தயாரிப்பிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கமாகும். சமீபத்தில், இந்திய அரசாங்கம் சுற்றுசூழலை பலவிதமான மேம்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்கும் வாகனங்களின் கொள்முதல் விலையை அதிரடியாக குறைத்ததும் இந்த திட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவில், ஹைபிரிட் கார்களின் தேவையை மக்கள் உணருவதையும், அவர்கள் ஹைபிரிட் கார்களுக்கு மாறும் வேகத்தையும் இத்தகைய திட்டங்கள் நிச்சயமாக அதிகரிக்கும்,” என்று திரு. T.S. ஜெய்சங்கர் (டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணை நிர்வாக இயக்குனர்) நம்பிக்கை தெரிவித்தார்.
ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான தேவையை வலியுறுத்திய போது, MOHI அமைச்சகத்தின் அடிஷனல் செக்ரட்ரி திரு. அம்புஜ் ஷர்மா, “இந்தியாவின் சுற்றுசூழல் மாசுபாடு, எரிபொருள் அதிகமாக உபயோகிப்பதால் கவலைக்கிடமான விகிதத்தில் அதிகரித்து வருவதால், ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களை உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதன் மூலம், கார்பன் வெளியீடைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் பசுமையான சூழலை எதிர்கால தலைமுறைக்குத் தர முடியும். எரிபொருள் சேமிப்பு மற்றும் ஹைபிரிட்/ எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகிப்பதால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்து, பெருவாரியான மக்களை இந்த வாகனங்களை உபயோகிக்க செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் FAME எக்கோ ட்ரைவ் நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களின் உறுதியான ஆதரவைத் தெரிவிக்கும் அனைவரையும் நாங்கள் மனமார வரவேற்கிறோம். முதல் முறையாக ஹைபிரிட் கார்களை இந்தியாவிலேயே தயாரித்து, ஹைபிரிட் வாகனங்களின் நன்மைகளை உணர்வதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் இந்தியா அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் டொயோட்டா நிறுவனத்தை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம். இந்த வருட நிகழ்ச்சியில், வெவ்வேறு வாகன உற்பத்தியாளர்களின் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் கலந்து கொண்டு, டெல்லி, ஜெய்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய 3 நகரங்களில் பயணம் மேற்கொள்ள இருக்கின்றன. வாகனங்களில் இருந்து வரும் புகையினால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை குறைத்து, எரிபொருளைச் சேமிக்கும் இத்தகைய வாகனங்களின் நன்மைகளை மக்களிடம் சரியான விதத்தில் இந்த ரேலி எடுத்துரைப்பதோடு நின்று விடாமல், இந்த வாகனங்களில் முதலீடு செய்ய மக்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.
3 நகரத்தில் நடக்கவிருக்கும் இந்த ரேலி, நேற்று டெல்லியில் நடந்தது. அடுத்ததாக, நவம்பர் 30 –ஆம் தேதி ஜெய்பூரிலும், டிசம்பர் 7 –ஆம் தேதி சண்டிகரிலும் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்