• English
  • Login / Register

முதல் முறையாக மறைக்கப்படாத நிலையில் டொயோட்டா இனோவா உளவுப்படத்தில் சிக்கியது

published on நவ 16, 2015 12:25 pm by manish for டொயோட்டா இனோவா

  • 11 Views
  • 6 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

2016 டொயோட்டா இனோவா காரின் அதிகாரபூர்வமான படங்கள், சமீபத்தில் ஆன்லைனில் கசிந்தது. சிற்றேடு ஒன்றில் வெளியான இனோவா காரின் படங்களை எடுத்து ஆட்டோநெட்மேக்ஸ்.நெட் ஆன்லைனில் வெளியிட்டதால், அது இணையத்தளத்திற்கு அறிமுகமாகி பரவியது. இந்நிலையில் வீதிகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, முதல் முறையாக உளவுப்படத்தில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் எந்த மூடுதிரையும் இல்லாமல், காரை முழுமையாக காண முடிகிறது. இந்த புதிய இனோவா காரை, இந்த மாதம் (நவம்பர்) 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2016 டொயோட்டா ஹிலக்ஸ் ரிவோ மற்றும் 2016 டொயோட்டா ஃபார்ச்யூனர் ஆகிய கார்கள் அடிப்படையாக கொண்ட புதிய லேடர் ஃபிரேம் பிளாட்பாமையே, இந்த காரும் அடிப்படையாக கொண்டுள்ளது. அழகியலை பொறுத்த வரை, இந்த காரின் பாடி முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, முந்தைய தலைமுறையை சேர்ந்த டொயோட்டா இனோவா காரில் இருந்து மிகக் குறைவான பாகங்களை மட்டுமே பெற்றுள்ளது. மிக முக்கியமாக, ஒரு இரட்டை-சலாட் கிரோம் கிரில் அம்சத்தை கொண்ட பெரிய அறுங்கோண வடிவிலான ஏர்-டாம் காணப்படுகிறது.

இந்த காரில், LED பிராஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உடன் டேடைம் ரன்னிங் LED-களை பெற்று, அவை கிரில் மற்றும் இன்டிகேட்டர்கள் உடன் சேர்ந்து காணப்படும் பேக்லேம்ப்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. உள்புற அமைப்புகளில், மேம்படுத்தப்பட்ட ஆடம்பர உபகரணங்களான கேபின் ஆம்பியன்ட் லைட்டிக், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆல் ஆட்டோ-டவுன் பவர் விண்டோக்கள் மற்றும் பல அம்சங்களை உட்கொண்டுள்ளது. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, இந்த புதிய இனோவா காரில், ஒரு புதிய 2.4-லிட்டர் டர்போ-இன்டர்கூல்டு டையரெக்ட்-இன்ஜெக்ஷன் டீசல் அமைப்பை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 3,400 rpm-ல் 149 PS ஆற்றலையும், 342 Nm முடுக்குவிசையையும் வெளியிடும் திறனை பெறும். இந்த காரில் ஒரு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் அளிக்கப்பட உள்ளது. இதில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு, 360 Nm என்ற ஒரு அதிகபட்ச முடுக்குவிசை வெளியீட்டை அளிக்க வல்லது.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Toyota இனோவா

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience