டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் முழுமையான புகைப்படத் தொகுப்பு: ஸ்பை ஷாட்களுக்கு இனி இடமில்லை
டொயோட்டா இனோவா கிரிஸ்டா 2016-2020 க்காக பிப்ரவரி 11, 2016 12:05 pm அன்று அபிஜித் ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களில் மத்தியில், ஒரு சில வாகனங்களை மட்டும் பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பேர்ப்பட்ட முக்கிய வாகனங்களின் வரிசையில், முதன்மையான இடத்தில் டொயோட்டா இன்னோவா அல்லது இன்னோவா கிரிஸ்டா இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரபலமான இன்னோவா MPV காரின் அடுத்த தலைமுறை, நமது நாட்டில் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்திய MPV வாகன பிரிவில், சொகுசு வசதிகள், விசாலமான இடவசதி மற்றும் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றிற்கு புதியதொரு அடையாளத்தை இந்த புதிய இன்னோவா கிரிஸ்டா ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. ஒரே மாதிரியான சலிப்பூட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு வெளியாகும் MPV கார்களிடம் இருந்து விலகி, புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தில், புதிய தனிப்பட்ட ஸ்டைலுடன், இன்னோவா கிரிஸ்டா ஒயிலாக நின்று, பார்வையாளர்களை அசத்தியது.
இன்னோவாவின் நேரடி போட்டியாளர்களான ஹோண்டா மொபிலியோ, மாருதி எர்டிகா மற்றும் ரெனால்ட் லாட்ஜி ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது புதிய பரிமாணத்தைக் கொண்ட இதன் பொலிவான தோற்றம், அனைவரையும் வசீகரிக்கும் விதத்தில் உள்ளது. டொயோட்டா நிறுவனம் கம்பீரமான பெரிய கார்களை தயாரிக்கும் கலையை நன்கு அறிந்து வைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் லாண்ட் க்ரூயிஸர், பிராடோ மற்றும் FJ – க்ரூயிஸர் ஆகிய மாடல்கள் உள்ளன.
சமீபத்தில் வெளியான கரோலா ஆல்டிஸ் காரில் பயன்படுத்தப்பட்ட டொயொட்டோவின் நவீன வடிவமைப்பு மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இன்னோவா கிரிஸ்டாவின் உட்புற அலங்கரிப்புகள், இதன் போட்டியாளர்களை விட ஒரு படி அதிகமான நேர்த்தியுடன் உள்ளன. சீராக வடிவமைக்கப்பட்டுள்ள டாஷ் போர்டில், ஒரு சில பட்டன்கள் மற்றும் தேவையான பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பல ஃபோல்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிரைவர் சீட்டிற்கும், சென்ட்ரல் கன்சோலுக்கும் நடுவில் உள்ள பெரிய இடைவெளியில் இன்ஃபோடைன்மெண்ட் ஸ்கிரீன் அழகாகப் பொருத்தப்பட்டுள்ளது.
இன்னோவா கிரிஸ்டாவில் பொருத்தப்பட்டுள்ள, புதிதாக உருவாக்கப்பட்ட 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின், 149 PS சக்தியையும், அதிகபட்சமாக 342 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யவல்லதாக உள்ளது. பாதுகாப்பு அடிப்படையில் பார்க்கும் போது, டாப் எண்ட் இன்னோவா கிரிஸ்டாவில் 7 ஏர் பேக்குகள், ABS மற்றும் EBD வசதிகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆட்டோ எக்ஸ்போவில், டொயோடா இன்னோவா கிரிஸ்டா காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவைக் கண்டு மகிழுங்கள்
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இன்னோவா கிரிஸ்டாவின் புகைப்படத் தொகுப்பு!