டொயொட்டோ நிறுவனம்: இரண்டாவது தேசிய விற்பனைத்திறன் போட்டியை நடத்தியது

published on அக்டோபர் 14, 2015 02:42 pm by cardekho

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டொயொட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் (TKM ) நிறுவனம் இரண்டாவது ‘தேசிய விற்பனைத்திறன் போட்டியை” நடத்தியது. இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவில் உள்ளவர்களின் விற்பனை திறனை மேம்படுத்தவும், குறை மற்றும் தனிச்சையாக செயல்பட்டு வெற்றிபெறும் திறனை வெளிப்படுத்தவும், இது ஒரு நல்ல பயிற்சி களமாக இருக்கும். இந்த போட்டியானது மூன்று நிலைகளில் நடைபெற்றது - அவை விநியோகிஸ்தர், பிராந்தியம் மற்றும் தேசிய அளவுகளில் பிரிக்கபட்டது. இந்த போட்டியின் பங்களிப்பாளர்கள், அறிவு, செயல்முறை விளக்கம், மென்திறன்கள் போன்ற பலவித அளவுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிராந்திய மற்றும் தேசிய அளவில் உள்ள டொயொட்டோ நிறுவனத்தின் விநியோகிஸ்தர்களிடம் பணிபுரியும், புதிய மற்றும் பயன்படுத்திய கார்களின்  1680 விற்பனையாளர்கள் உற்சாகத்துடன் இந்த ஆண்டு பங்கேற்றதை இங்கு காணமுடிந்தது. ஆசிய-பசிபிக் டொயோட்டா மோட்டார் பிரதிநிதிகள் மற்றும் TKM –இன்மூத்த நிர்வாக அதிகாரிகள் ஆகியோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முக்கிய விநியோகிஸ்தர்கள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டி மூலம், இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இயங்கிக்கொண்டு இருக்கும் டொயோடா விநியோகிஸ்தார்களின் விற்பனைப் பிரதிநிதிகளின் நிபுணத்துவம் அங்கீகாரம் செய்யப்பட்டது. இவர்கள், சக விற்பனைப் பிரதிநிதிகளுடன் போட்டி போட்டு தங்களின் அறிவு மற்றும் திறமையை நிரூபிக்க, இங்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. போட்டியிட்டவர்களில் இருந்து மொத்தம் 6 பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், 3 பேர் புதிய கார் பிரிவிலும், 3 பேர் பயன்படுத்தப்பட்ட கார் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், பரிசு காசோலை, பதக்கம் மற்றும் கோப்பை ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும், சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஜப்பானில் உள்ள நகோயாவில் நடக்க இருக்கும் நேஷனல் சாம்பியன்ஸ் அசெம்ப்ளியில் கலந்து கொள்வர்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் இயக்குனருமான, திரு. N. ராஜா, போட்டியாளர்களின் ஆர்வத்தையும் திறமையையும் கண்டு மகிழ்ச்சியுற்றதாக தெரிவித்தார். அவர், “விநியோகிஸ்தார்களின் பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது சிறந்த பங்களிப்பை கொடுத்தத்தைக் காண்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இங்கு வந்து, அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்துடன் பங்கேற்ற ஒவ்வொருவரும் பாராட்டை பெரும் தகுதி உடையவர்கள். வாடிக்கையாளர்களின் திருப்தியே டொயோட்டோவின் தலையாய மந்திரம். இதை நிறைவேற்ற, எங்களின் பணியாளர்களில் திறனை மேம்படுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தவும், அவ்வப்போது இத்தகைய நிகழ்ச்சி தேவைப்படுகிறது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) –இல், கடுமையான வேலைப் பயிற்சி திட்டங்களின் மூலம் சாதாரண திறமை உள்ளவர்களின் செயல்திறனையும், உற்சாகத்தையும் மேம்படுத்தி, அவர்களை அசுர சாதனை புரியும் உலக சாதனையாளர்களாக மாற்றுகிறோம். இதற்கென, நாங்கள் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

எங்கள் கனவுகளை நிறைவேற்ற, டொயோட்டா டெக்னிகல் ட்ரைனிங் இன்ஸ்ட்டிட்யூட் (TTTI), டொயோட்டா டெக்னிகல் எஜுகேஷன் ப்ரோக்ராம் (TTEP) போன்றவை தவிர, எங்களது நிறுவனத்திற்குள் செயல்படும் குருகுலம் மற்றும் பிற விரிவான பயிற்சி திட்டங்கள் போன்றவையை வகுத்து, மிகச் சிறந்த திறமை வாய்ந்த, ஆற்றல் மிக்க பணியாளர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். திறமையை சோதிக்கும் போட்டி வழியாக, டொயொட்டோ விநியோகிஸ்தார்களின் பணியாளர்கள் எப்படி வாடிக்கையாளர்களைக் கவர்கிறார்கள், எப்படி அவர்களை திருப்தி படுத்துகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும், எதிர்காலத்தில், எங்கள் கவனம் எதில் இருக்கவேண்டும் என்பது பற்றியும்; எங்களது விற்பனையை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியும்; விற்பனை செய்தபின் வாடிக்கையாளர்களுக்கு எவ்விதம் அதிக திருப்தி தருவதைப் பற்றியும்; எவ்வாறு பயிற்சிகளை மேம்படுத்துவது என்பது பற்றியும் ஆராய்ந்து முடிவு செய்ய, இந்த களம் எங்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்குகிறது,” என்று குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க:

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience