உண்மையான உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகளை ஆன்லைன் விற்பனையில் அறிமுகப்படுத்துகிறது டொயோட்டா இந்தியா
published on ஆகஸ்ட் 14, 2015 01:57 pm by raunak
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் முதல் முதலாக ஆன்லைனில் உண்மையான உதிரிப்பாகங்களை விற்பனை செய்வதை அறிமுகப்படுத்திய பெருமை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரையே சேரும்.
ஜெய்ப்பூர்:
இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பாளர்களுக்கு இடையே டொயோட்டா நிறுவனம் புது முயற்சியாக, தனது உண்மையான உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக் கருவிகளை ஆன்லைன் விற்பனையில் அறிமுகப்படுத்தி உள்ளது. நுகர்வோரின் வீட்டு வாசலுக்கே, டொயோட்டாவின் உண்மையான உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் சென்று சேர வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும். இந்த சேவையின் முதல் கட்டமாக பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன் பிறகு மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் பிரேக் பேட்ஸ், கிளெச் பிளேட்கள், வைப்பர் பிளேடுகள், ஆயில் ஃபில்டர்கள், ஏர் ஃபில்டர்கள் உட்பட சுமார் 400 உதிரிப்பாகங்களும், 30 டொயோட்டா துணை கருவிகளும் ஆன்லைன் சேனல் கருவிகள் விநியோகஸ்தர்கள் மூலம் விற்கப்படும். இதன் மூலம் ஒரு வாகனப் பாகத்திற்காக, பல்வேறு வகைகளில் தேடுவதை எளிமைப்படுத்துவது, பல்வேறு செக்பாயிண்ட்களை அளித்து தகுந்த வாகன பாகத்தை பெறுதல், உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக் கருவிகளை பெற அருகாமையில் உள்ள டொயோட்டாவின் அங்கீகாரம் பெற்ற டீலர்/ விநியோகஸ்தர்களை தேர்வு செய்தல் ஆகிய சேவைகளை அளிப்பதே இந்த தனித்தன்மை வாய்ந்த போர்ட்டலின் நோக்கம் ஆகும். மேலும் நுகர்வோர் வாங்கும் முக்கிய உதிரிப்பாகங்களை எப்படி வாகனத்தோடு இணைப்பது என்பதை குறித்த எளிய அடிப்படை கையேடு ஒன்றை பயன்படும் வகையில், உதிரிப்பாகங்கள் வாங்கும் போது உடன் அளிக்கப்படுகிறது.
இது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் துணை தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர் சேகர் விஸ்வநாதன் கூறுகையில், “இந்த தொழில்துறையில் முதன் முறையாக தனித்தன்மை மற்றும் முன்னிலை முயற்சியாக எங்கள் நுகர்வோருக்கு டிஜிட்டல் பிளாட்பாமை அறிமுகப்படுத்துவதில் பெரும் ஆர்வமாக உள்ளோம். இந்த கூடுதல் விநியோக சேனல் மூலம் நுகர்வோரின் திருப்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முதன்மை வகிப்பதற்கு எதுவான எங்கள் அர்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து, எங்கள் நுகர்வோரின் மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது. இன்டர்நெட் பயன்பாட்டின் அதிவேக நுழைவின் மூலம் இந்திய டிஜிட்டல் வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அது தற்போது ஸ்மார்ட்போன்கள், டேப்லேட் மற்றும் லேப்டாப்களின் பக்கம் திரும்புவது அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் கருத்துகள் மற்றும் மாறி வரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தனது தயாரிப்புகள் மற்றும் சேவையில் எப்போதும் புதுமையை புகுத்துவதில் டொயோட்டா அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, பெங்களூரை சுற்றிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, டொயோட்டா கார்களின் எல்லா பாகங்களும் எளிதாகவும், வசதியாகவும் டிஜிட்டல் பிளாட்பாம் மூலம் வாங்கி கொள்ள முடியும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, மற்ற நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுப்படுத்த உள்ளோம்” என்றார்.
0 out of 0 found this helpful