டொயோட்டா ஆக்க்ஷன் மார்ட் அறிமுகம் குறித்து டொயோட்டா அறிவிப்பு
published on செப் 14, 2015 01:40 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
பெங்களூரில் டொயோட்டா ஏல மார்ட் (டொயோட்டா ஆக்க்ஷன் மார்ட்) அறிமுகம் குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) இன்று அறிவித்தது. இதன்மூலம் இந்தியாவில் முதல் முறையாக பயன்படுத்திய கார்களை ஏலமிடும் வியாபாரத்திற்குள் நுழைந்த முதல் வாகன தயாரிப்பாளர் என்ற பெருமையை டொயோட்டா நிறுவனம் பெறுகிறது. பயன்படுத்தப்பட்ட கார்களின் தொழில்துறையில், கார்கள் வாங்குவோரிடம் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் வியாபாரத்தில் ஈடுபட டொயோட்டா நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரு வாகன தயாரிப்பு நிறுவனம் இது போன்ற சேவையை வழங்குவது இதுவே முதல் முறையாகும். கர்நாடக மாநிலம், (பெங்களூர் அருகே) பிடதி பகுதியில் உள்ள அர்ப்பணிப்பு தன்மை கொண்ட ஏல குழுவின் மூலம் தனது பணிகளை துவக்க இந்நிறுவனம் தயாராக உள்ளது.
எல்லா பிராண்டுகளை சேர்ந்த கார்களை விற்பனை செய்ய உள்ள இந்த வாகன தயாரிப்பாளர், அவற்றை தீவிர ஆய்வு மற்றும் விரிவான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவர். இந்த அணுகுமுறையின் மூலம் உலகளாவிய தர நிர்ணயமான QDR-ன் (தரம், ஆயுள் மற்றும் நம்பகத்தன்மை) அடிப்படையில் நுகர்வோருக்கு கார்களை அளிப்பதே நோக்கம் ஆகும்.
இங்கு கார்களுக்கு 203 அலகுகளில் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு, கார்களின் தரத்தை குறிக்கும் மதிப்பீடுகள் அளித்து, அவை தீவிர ஆவணங்களுடன் இணைக்கப்படும்.
இது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிர்வாக இயக்குனர் திரு.நவோமி இஷீ கூறுகையில், “இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை ஆண்டுத்தோறும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே வந்தாலும், அது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளது. டொயோட்டா ஏல மார்ட் அறிமுகம் மூலம் பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையில் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை வளர்க்க, எங்கள் உழைப்பை செலுத்தி, வாடிக்கையாளர்கள் இடையே நம்பகத் தன்மையை அதிகரித்து, இந்திய சமூகத்திற்கு உதவ உள்ளோம். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக ஏலமிடும் பணியில் ஈடுபட்டு வரும் டொயோட்டா நிறுவனமான எங்களின் உலகளாவிய நிபுணர்கள் மற்றும் அனுபவம் கொண்டவர்கள் மூலம் உலமெங்கும் உள்ள சந்தைகளில் சிறந்த தரத்தை உறுதி செய்யும் வகையில் ஏலத்தை நடத்தி வருகிறோம். பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையை வெளிப்படையாகவும், நம்பகத் தன்மை கொண்டதாகவும் உருவாக்கி, சரியான விலை மற்றும் தரம் கொண்ட கார்களை நுகர்வோருக்கு விரைவாக கிடைக்க செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
இது குறித்து, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் இயக்குனர் மற்றும் மூத்த துணை தலைவரான திரு.என்.ராஜா கூறுகையில், “பயன்படுத்தப்பட்ட கார்களின் தொழில்துறையில், வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளோம். இதிலிருந்து இந்தியாவில் பல வாடிக்கையாளர்களுக்கும், இந்த தொழில்துறையின் மீது நம்பகத்தன்மை இல்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
தகுந்த அமைப்பை கொண்ட இந்த சந்தைக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நம்பிக்கை வைக்கும் போது, தகுந்த அமைப்பை கொண்ட பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையை விரிவுப்படுத்த எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். டொயோட்டா ஏல மார்ட் மூலம் OEM டீலர்கள் கூட தங்களின் பயன்படுத்தப்பட்ட கார்களின் சரக்கு தேக்க நிலையை விரைவுப்படுத்தி, புதிய கார்களின் விற்பனையை அதிகப்படுத்த முடியும். எனவே அவர்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதன் மூலம், புதிய கார்களின் விற்பனைக்கு உதவ முடியும். மேலும் ஒரே இடத்தில் தனிப்பட்ட பயன்படுத்தப்பட்ட காரின் டீலர்களால் கூட, பல வகையான பயன்படுத்தப்பட்ட கார்களை அளிக்க முடியும். முழு தொழில்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் பயன்படுத்தப்பட்ட கார்களின் வாடிக்கையாளர்களுடனான உறவு வலுப்படும் என்று டொயோட்டா நிறுவனம் முழு நிச்சயமாக நம்புகிறது. மேலும் இதற்கு டொயோட்டா ஏல மார்ட், பெரும் ஆதரவாக இருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்றார்.
0 out of 0 found this helpful