டொயோடா நிறுவனம் 2016 ஆம் ஆண்டு முதல் 3% விலை உயர்வை அறிவித்துள்ளது.
published on டிசம்பர் 09, 2015 06:26 pm by sumit
- 21 Views
- ஒ ரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : ஜப்பான் நாட்டு கார் தயாரிப்பாளர்களான டொயோடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2016 ஆம் ஆண்டு முதல் தங்கள் தயாரிப்புகளின் விலையை இந்தியாவில் 3% உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கிர்லோஸ்கர் குழுமத்துடன் கூட்டு சேர்ந்து ( டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் ) என்ற பெயருடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் லிவா முதல் லேண்ட் க்ரூஸர் வரை பல வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
வாகன தயாரிப்புக்கான மூல பொருட்களின் விலை கூடி உள்ளதாலும் , அந்நிய செலாவணியில் ஏற்படும் மாறுதல்களாலும் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது. “ விலை உயர்வு முடிவை நாங்கள் செயல்படுத்தாமல் நீண்ட நாள் நிலுவையில் வைத்திருந்து நடப்பவைகளை உன்னிப்பாக கவனித்து வந்தோம். ஆனால் மூல பொருட்களின் விலையேற்றம் , மின்சாரம் , பராமரிப்பு மற்றும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் ஆகிய காரணிகள் இந்த விலையேற்றத்தை தவிர்க்க முடியாத தாக ஆக்கி உள்ளது . ஆகவே ஜனவரி 2016 முதல் விலை உயர்வை நடைமுறை படுத்த முடிவு செய்துள்ளோம் " என்று PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் டோயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெடிங் பிரிவின் இயக்குனர் மற்றும் துணை தலைவர் N. ராஜா தெரிவித்துள்ளார். தனித் தனியாக ஒவ்வொரு மாடலும் எந்த அளவுக்கு விலை உயர்த்தப்படும் என்பது பற்றி இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை என்றாலும் 3 சதவிகிதத்திற்கு உட்பட்டே இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பாளர்களான மெர்சிடீஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபுள்யூ நிறவனங்கள் முறையே 2% மற்றும் 3% சதவிகித விலை உயர்வை அறிவித்துள்ள இவ்வேளையில் டொயோடா நிறுவனமும் இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த மூன்று நிறுவனங்களுமே ஜனவரி 2016முதல் இந்த விலை உயர்வை அமல் படுத்த உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்து காணப்படும் நிலையில் இந்த விலை உயர்வு கொண்டு வரப்பட உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மேலும் வாசிக்க
டோக்கியோ மோட்டார் ஷோவின் பந்தயத்தில் டொயோட்டாவும் களமிறங்குகிறது