டாடா நிறுவனத்தின் தர்வந்த் தொழிற்சாலை 'நியாயமற்ற' வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
published on பிப்ரவரி 11, 2016 11:59 am by sumit
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா மார்கோபோலோ மோட்டார்ஸ் சம்பள பிரச்சனையால் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது. . 2,500 தொழிலாளர்கள் பணிபுரியும் இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 15,000 பேருந்துகள் தயாராகி வருகின்றன. பிப்ரவரி 1, 2016 முதல் இத் தொழிற்சாலை பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றதால் தற்காலிகமாக தொழிற்சாலையை மூடுவதாக இந்நிறுவனம் அறிவித்தது. இப்போது சூழ்நிலை மேலும் மோசமடைந்து உள்ளதால் தொழிற்சாலையை அடைப்பதாக (லாக்அவுட்) டாடா அறிவித்துள்ளது .
இந்த இந்திய நிறுவனம் , வேலை நிறுத்தத்திற்கு காரணம் பணியாளர்கள் தான் என்று கூறியுள்ளது. தங்கள் நிறுவனம் சட்ட விதிகளின் படி வருடம் ஒரு முறை ஊதியத்தை அனைத்து பணியாளர்களுக்கும் உயர்த்தி வருவதாகவும், எந்த விதமான சம்பள பாக்கியோ , பிரச்சனையோ இல்லை என்றும் உறுதி பட தெரிவித்துள்ளது. நிர்வாகத்தின் நற்பெயரை சிதைக்கும் வண்ணம் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாகவும் , பணியாளர்கள் , நிர்வாகத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இது சம்மந்தமாக தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜனவரி 31, 2016 முதல் பெரும்பாலான பணியாளர்கள் வேலைக்கு வராமல் இருந்ததால் , பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிறுத்தி உள்ளோம் " என்று தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி இது பற்றி கருத்து தெரிவிக்கையில் ," தொடர்ந்து சூழ்நிலை மோசமடைந்து வந்ததாலும் , பணியாற்றுவதற்கு சரியான சூழல் இல்லாத காரணத்தாலும் , மக்களின் உயிருக்கும் , தொழிற்சாலை உபகரணங்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் வந்தவண்ணம் இருந்ததாலும் , நிர்வாகம் தொழிற்சாலையை பிப்ரவரி 6, 2016 முதல் மூடிவிட (லாக்அவுட்) முடிவு செய்தது " என்று கூறியுள்ளார் . இது பற்றி மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் , “ டாடா மார்கோபோலோ நிறுவனம் தங்களது நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கைகளிலும், பணியாளர்களுடன் நல்ல இணக்கமான உறவை பேணுவதிலும், பல நல திட்டங்களை பணியாளர்களுக்காக செயல்படுத்துவதிலும் என்றென்றும் உறுதியாக இருந்து வந்துள்ளது. ஆனால் அதே சமயம் நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் எந்த விதமான ஒழுக்கக் கேடான செயலையும் , நியாயமற்ற கோரிக்கைகளையும் நிர்வாகம் ஒரு போதும் ஏற்காது " என்று கூறினார்.
இந்த தொழிற்சாலையில் 16 – இருக்கை வசதி முதல் 54 -இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. . சொகுசு பேருந்துகள் , மற்றும் தாழ்வாக தரை ( லோ - ப்ளோர்) பேருந்துகளும் கூட இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்தன.
மேலும் வாசிக்க டாடா நெக்ஸான்: ஒரு முழுமையான கண்ணோட்டம்
0 out of 0 found this helpful