டாடா சபாரி ஸ்டோர்ம் வரிகோர் 400: ரூ. 13.25 லட்சம் என்ற விலையில் அதிகாரபூர்வமாக அறிமுகமானது
published on டிசம்பர் 10, 2015 03:21 pm by konark for டாடா சாஃபாரி ஸ்டோர்ம்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா மோட்டார்ஸ், தனது சக்தி வாய்ந்த SUV காரான சபாரி ஸ்டோர்ம் மாடலில், அபரிதமான டார்க்கை உற்பத்தி செய்யும் வேரியண்ட்டை ரூ.13,25,530 என்ற டெல்லி ஷோரூம் விலையில், அறிமுகப்படுத்தி உள்ளது. அதிக சக்தியை உற்பத்தி செய்வதற்காக, 2.2 லிட்டர் VARICOR இஞ்ஜினை மேம்படுத்தி இந்த காரில் பொருத்தி உள்ளனர். தற்போது 156 PS என்ற அளவில் சக்தியையும், 400 Nm என்ற அளவில் டார்க்கையும் இந்த இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது. மேலும், இந்த இஞ்ஜினுடன் செல்ஃப்- அட்ஜுஸ்டிங் கிளட்ச்சுடன் கூடிய புதிய 6-ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
சபாரியின் 4x4 வேரியண்ட்டும் புதுப்பிக்கப்பட்டு, ரூ.14,59,952 என்று டெல்லி ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. புதிய சபாரியில், 4 வீல் ட்ரைவ் ஷிப்ட்-ஆன்-தி-ஃப்ளை அமைப்புடன் சேர்ந்து லிமிடெட் ஸ்லிப் டிஃபரன்ஷியல் (LSD) அமைப்பும் வருவதால், இனிய சாலைப் பயணங்களில் இந்த கார் ஒரு சிறந்த ஆஃப்-ரோடராக பரிமளிக்க முடியும்.
டாடா மோட்டார்ஸில் பயணிகள் வாகன வர்த்தக பிரிவின் பிரெஸிடெண்ட்டான திரு. மாயங்க் பரீக், “சபாரியின் புதிய அதிக சக்தி வாய்ந்த வேரியண்ட்டான சபாரி ஸ்ட்ரோம் VX காரை அறிமுகப்படுத்துவதில் டாடா மோட்டார்ஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்து உள்ளது. டாடா மோட்டார்ஸின் பிரெத்தியேகமான புதிய வரிகோர் 400 இஞ்ஜின் பொருத்தப்பட்ட புதிய VX வேரியண்ட், அதிகமான ரோட் பிரேசென்ஸ் மட்டுமல்லாமல், அதிரடியான ஆன்-ரோட் மற்றும் ஆஃப்-ரோட் திறனால் எப்படிப்பட்ட சாலைகளையும் எளிதாகக் கடக்கும் திறனைப் பெற்றுள்ளதால், இந்தியாவில் அனைவராலும் போற்றப்படும் மிகப் பிரபலமான SUV –யான செயல்திறன் மிக்க சபாரியின் பெருமை மேலும் ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள், எங்களின் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதால், அவர்களை திருப்தி படுத்த புதிய சபாரி ஸ்ட்ரோம் மாடலின் அம்சங்களையும் திறனையும் HORIZONET முறையில் அமைத்துள்ளோம். ஏற்கனவே இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த SUV மேலும் பிரபலமாகி, ஒவ்வொரு பயணத்திலும் உற்ற துணையாக இருக்கும் என்று நிச்சயமாக கூறுகிறோம்,” என்று நம்பிக்கையுடன் எடுத்துரைத்தார்.
டாடாவின் பிரெத்தியேகமான, 6 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்ட ஹார்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய இண்டெக்ரேடெட் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடைன்மெண்ட் சரௌண்ட் சவுண்ட் சிஸ்டம் புதிய சபாரி ஸ்ட்ரோம்மில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீட் டிபெண்டண்ட் வால்யூம் கண்ட்ரோல், ஹாண்ட்ஸ் ப்ரீ புளு டூத், CD/MP3/ரேடியோ/Aux/USB மற்றும் iPod இணைப்பு, ஃபோன் புக் டவுண்லோட், ஆடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் டிஸ்ப்ளே ஆகிய சிறப்பம்ஸங்கள் இந்த சிஸ்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சீரமைக்கப்பட்ட ஜெஸ்ட், போல்ட் மாடல்கள் மற்றும் அடுத்து அறிமுகமாக உள்ள டாடா ஜிக்கா கார்களில் கவனம் செலுத்துவதற்காகவும், மான்ஸா மற்றும் விஸ்டா மாடல்களின் வரிசைகளை புதுபிப்பதற்காகவும், டாடா நிறுவனம் இந்த வார ஆரம்பத்தில், மான்ஸா மற்றும் விஸ்டா மாடல்களின் விற்பனையை நிறுத்தி விட்டது. பொதுவாகவே, ஒவ்வொரு மாடல் அறிமுகத்தின் போதும், டாடா வாகனங்களின் தோற்றம், தொழில்நுட்பம் மற்றும் உட்புற வடிவமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும். அதனால், விரைவில் அறிமுகமாகவுள்ள ஹாட்ச் பேக்கான ஜிக்காவின் மேல்தான் அனைவரின் கவனமும் உள்ளது. எனவே, இதைப் பற்றி மேலும் புதிய செய்திகளை தெரிந்துகொள்ள, எங்களுடன் இணைந்திருங்கள்.
டாடா சபாரி ஸிடோர்ம் VX (வரிCOR 400) விலை (புது டெல்லி எக்ஸ்-ஷோரூம்)
வேரியண்ட் VX 4x2 – ரூ. 13.25 லட்சங்கள்
வேரியண்ட் VX 4x4 – ரூ. 14.59 லட்சங்கள்
விவரக்குறிப்புகள்:
இஞ்ஜின் – 2.2 லிட்டர் வரிCOR 400, 4 சிலிண்டர் டீசல்
ட்ரான்ஸ்மிஷன் – 6 ஸ்பீட் மேனுவல்
அதிகபட்ச சக்தி – 154 bhp
அதிகபட்ச டார்க் – 400 Nm
மேலும் வாசிக்க
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மான்ஸா மற்றும் விஸ்டா கார்களின் தயாரிப்புகளை நிறுத்தி ஸிகா மீது கவனம் செலுத்துகிறது
- அதிக சக்திவாய்ந்த டாடா சஃபாரி ஸ்டார்ம், ரூ.13.52 லட்சத்தில் அறிமுகம்
0 out of 0 found this helpful