11வது NADA ஆட்டோ ஷோவில் புதிய ஸ்டார்ம் காரை டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்தது
published on செப் 18, 2015 06:40 pm by nabeel for டாடா சாஃபாரி ஸ்டோர்ம்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: நேபாள நாட்டின் காத்மாண்டுவில் நடைபெறும் 11வது NADA ஆட்டோ ஷோவில், புதிய ஸ்டார்ம் காரையும், அதன் மற்ற பிரபல தயாரிப்புகளையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்தது. நேபாள நாட்டில் உள்ள ஆபத்தான நிலப்பகுதிகளையும் சமாளிக்கும் வகையில், இந்த வாகனத்தை முரட்டுத்தனமாக, கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ப வடிவமைத்துள்ளதாக, அந்நிறுவனம் உறுதி அளிக்கிறது. நேபாள நாட்டில், இந்த காரின் LX வகை நேபாள மதிப்பிலான ரூபாயில் 42.25 லட்சமும், VX வகை கார்களுக்கு நேபாள மதிப்பிலான ரூபாயில் 56.85 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்டார்ம் காரை தவிர, அந்நிறுவனத்தின் செஸ்ட் மற்றும் நேபாளின் முதல் மல்டி டிரைவ் ஹாட்ச்சான போல்ட் மற்றும் இஸிட்டா ஆகியவற்றையும் காட்சிக்கு வைத்துள்ளது.
இந்த ஆட்டோ ஷோவில், வாடிக்கையாளர்கள் வாங்கும் முடிவிற்கு வர தேவையான தகவல்களை அளித்து உதவும் வகையில், டாடா நிறுவனத்தின் மூலம் ஒரு புதுமையான, அனுபவபூர்வமான மற்றும் கருத்து பரிமாற்ற (இன்டர்ஆக்டிவ்) தளம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது. இதில் கருத்து பரிமாற்ற பகுதியில், இசை கூடம் (மியூஸிக் பூத்), விளையாட்டு மண்டலம் (கேமிங் ஸோன்) மற்றும் வாடிக்கையாளர் தகவல் பரிமாற்ற பிரிவு ஆகிய 3 பிரிவுகள் இருந்தன. இதில் வாடிக்கையாளர் தகவல் பரிமாற்ற பிரிவு மூலம் பார்வையாளர்களுக்கு, முதல்நிலை அறிமுகம் பெற உதவி அளிக்கப்பட்டது. இசை கூடம் பகுதியில், ஹார்மேன் மூலம் போல்ட் மற்றும் செஸ்ட் கார்களில் அமைக்கப்பட்டுள்ள டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அளிக்கும் அம்சங்களை அனுபவிக்கவும், குதுகலிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மறுபுறம் விளையாட்டு மண்டலத்தில், டாடாவின் ரிவோட்ரான் என்ஜின் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கார் ரேஸ் கேம்களை விளையாடி மகிழ வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய தலைவரான திரு.சுஜன் ராய், புதிய ஸ்டார்ம் காரை திறந்து வைத்து, NADA ஆட்டோ ஷோவை புகழ்ந்து பேசியதாவது, “தயாரிப்பாளர்களின் புதிய மாடல்களை அதன் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் காட்சிக்கு வைக்க, ஒரு அற்புதமான தளமாக NADA உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு, தாங்கள் விரும்பும் வாகனங்களை ஒப்பிட்டு பார்க்கவும் உதவுகிறது. இந்த ஷோவின் மூலம் தயாரிப்பாளர்களின் எதிர்கால தொழில்நுட்பங்களை விளக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில், போல்ட், செஸ்ட் மற்றும் புதிய ஸ்டார்ம் ஆகியவற்றை விளக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. NADA ஆட்டோ ஷோ 15-ல், புதிய ஸ்டார்ம் வாகனத்தை அறிமுகம் செய்வதில் டாடா மோட்டார்ஸ் மகிழ்ச்சி அடைகிறது. இந்த புதிய வாகனத்தின் மூலம், புதிய வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சிறந்த வாகன அனுபவத்தை அளிக்க தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அந்நிறுவனம் செய்துள்ளது” என்றார்.
அறிமுகத்தின் போது பேசிய சிப்ரதி ட்ரேடிங் பிரைவேட் லிமிடேட் CEO திரு.ஷாம்ப் டஹல் கூறுகையில், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேபாளின் ஆட்டோ ஷோவான NADA ஆட்டோ ஷோவில், உண்மையான SUV-யான புதிய ஸ்டார்ம் காரை அறிமுகம் செய்ததில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. நேபாளில் செஸ்ட் மற்றும் போல்ட் கார்களின் வெற்றிகரமான அறிமுகத்திற்கு பிறகு, மூன்றாவதாக இந்த ஹோரிஸோநேக்ஸ்ட் தயாரிப்பை நேபாளத்தில் அறிமுகம் செய்துள்ளனர். போல்ட் மற்றும் செஸ்ட் வாகனங்களுக்கு கிடைத்தது போலவே, இதற்கும் எல்லா பகுதியில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர்கள் மிகவும் உறுதியாக உள்ளார்கள். மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் மாற்றம் கொண்ட வாகன வரிசைகளில் விருப்பம் இருப்பதால், NADA-வின் கருத்து பரிமாற்ற நிலையம் மூலம் சிறந்த அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
11வது NADA ஆட்டோ ஷோ: டாடாவின் வாகன வரிசை
புதிய ஸ்டார்ம்
வாடிக்கையாளர்களை எதிர்நோக்கிய ஹோரிஸோன்நேக்ஸ்ட் செயல்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த டிரைவ்நேக்ஸ்ட் மற்றும் கனெக்ட்நேக்ஸ்ட் போன்ற அம்சங்களை, புதிய ஸ்டார்ம் கார் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்டார்ம் காரில், டாடா மோட்டார்ஸின் மேம்பட்ட 2.2 லிட்டர் வாரிகோர் என்ஜினை கொண்டு, 150 PS கூடுதல் சக்தி மற்றும் 320 NM முடுக்குவிசையை வெளியிடுகிறது. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு, 14 நிமிடங்களில் மணிக்கு 0 – 100 கி.மீ. வேகத்தை எட்ட உதவுகிறது.
இந்த காரில், ஹார்மேன் நிறுவன தயாரிப்பான, முழுவதும் ஒருங்கிணைந்த கனெக்ட்நேக்ஸ்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட், ஒரு LCD ஸ்கிரீன், ப்ளூடூத் இணைப்பு, ஐபோடு-இன், USB-இன் மற்றும் AUX-இன், இதனோடு ஒரு CD மற்றும் AM-FM பிளேயர் மற்றும் ஆறு ஸ்பீக்கர்கள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த 4x4 வகை காரில் காணப்படும் ESOF (எலக்ட்ரிக் ஷிஃப்ட்-ஆன்-ஃப்ளை) டெக்னாலஜி மூலம் 4x4 அல்லது 4X2 முறையிலான நகர்வை அளிப்பதோடு, அதிகபட்ச எரிபொருள் சிக்கனமாக லிட்டருக்கு 14.1 கி.மீ. மைலேஜ் அளிக்கிறது. புதிய ஸ்டார்ம் காருக்கு, முதல் முறையாக 2 ஆண்டு / 75000 கி.மீ. உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
டாடா போல்ட்
டாடாவின் புதிய ஹோரிஸோன்நேக்ஸ்ட் செயல்திட்டத்தின் மூலம் போல்ட் கூட பெருமை அடைகிறது. வெனிடியன் ரேட், பிரிஸ்டையன் வைட், பிளாட்டினம் சில்வர், ஸ்கை க்ரே, டூன் பைஜே ஆகிய 5 நிற வேறுபாடுகளில் இந்த கார் கிடைக்கிறது. மேலும் XE, XM மற்றும் XT ஆகிய 3 வகைகளிலும் போல்ட் கிடைக்கிறது.
செஸ்ட்
போல்ட்டை போலவே, செஸ்ட் காரும் இக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மல்டி டிரைவ் மோடுகளில் கிடைக்கிறது. சப்-4 மீட்டர் சேடனான இந்த கார் XE, XM மற்றும் XT என்ற 3 பெட்ரோல் டிரிம்களிலும், XE, XM, XMA (AMT), XT மற்றும் XTA (AMT) என்ற 5 டீசல் டிரிம்களிலும் கிடைக்கிறது. இது, பஸ் ப்ளூ, வெனிடியன் ரேட், ஸ்கை க்ரே, டூன் பைஜே, பிளாட்டினம் சில்வர் மற்றும் பிரிஸ்டையன் வைட் ஆகிய 6 நிற வேறுபாடுகளில் கிடைக்கிறது. இந்த காரில் 5-இன்ச் கனெக்ட்நேக்ஸ்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மேம்பட்ட வாய்ஸ் கமெண்ட் கண்டறியும் தன்மை, SMS நோட்டிஃபிக்கேஷன் மற்றும் ரீடு அவுட்ஸ் மற்றும் டச்ஸ்கிரீல் உள்ள முழுவதும் தானியங்கி வெப்பநிலை கட்டுப்படுத்தும் அமைப்பு (ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கன்ட்ரோல்) ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
0 out of 0 found this helpful