2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு, டாடா ஹெக்ஸா கொண்டு வரப்படுகிறது

வெளியிடப்பட்டது மீது Jan 21, 2016 02:42 PM இதனால் Sumit for டாடா ஹேக்ஸா

  • 7 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

கடந்த சில ஆண்டுகளாகவே டாடா நிறுவனம், மிக  கவனமான அடிகளை எடுத்து வைக்கிறது என்பதை, அதன் நவீன தலைமுறையை சேர்ந்த கார்களின் தன்மை பிரதிபலிக்கிறது . இதே தத்துவத்தை தொடரும் வகையில், தனது ஹெக்ஸா SUV-யை, அடுத்து நடைபெறவுள்ள 2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு இந்த கார் தயாரிப்பாளர் கொண்டு வருகிறார். ஏற்கனவே கடந்த 2015 ஜெனீவா மோட்டார் ஷோவில் இதை தொழிற்நுட்ப ரீதியாக காட்சிக்கு வைத்த இந்த இந்திய கார் தயாரிப்பாளரின் திட்டமிட்டபடி எல்லா காரியங்களும் சரியாக நடக்கும்பட்சத்தில், இந்தியன் ஆட்டோமொபைல் கண்காட்சியில் இக்காரின் தயாரிப்பு பதிப்பு வெளியிடப்படும்.
டாடாவின் வாகன வரிசையிலேயே, மிகச்சிறந்த அம்சங்களை கொண்ட காராக, இந்த கிராஸ்ஓவர் விளங்கும். இதில் LED பொஷிசன் லெம்ப்கள் உடன் கூடிய டெயில்லெம்ப்கள், கேப்டன் சீட்களுடன் கூடிய 6-சீட் கட்டமைப்பு, இரட்டை-ஊசி தையல் (ட்வின்-நீடில் ஸ்டிச்சிங்) உடன் கூடிய லேதர் அப்ஹோல்ஸ்டரி, மூடு லைட்டிங், விண்டோ ஷேடுகள், ESP (எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி பிரோகிராம்) பெரிய அலாய் வீல்கள், ஆட்டோ பங்க்ஷன் உடன் கூடிய பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் கார் தயாரிப்பாளரின் மூலம் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.


இயந்திரவியலில், ஹெக்ஸாவிற்கு ஆற்றல் அளிக்கும் ஒரு 2.2 லிட்டர் டீசல் மில் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றலான 154 hp உடன் 400 Nm முடுக்குவிசையும் கிடைக்கிறது. இந்த என்ஜினை ஒரு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இதற்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஒரு தேர்விற்குரிய அம்சமாக இருக்கும். இதை ஒரு லாபகரமான தயாரிப்பாக மாற்றும் வகையில், இந்த காரில் ஒரு டிரைவ்-மோடு செலக்டர் உடன் கூடிய ஒரு 4WD சிஸ்டமும் டாடா நிறுவனம் மூலம் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், அடுத்த மாத மத்தியில் இந்நிறுவனத்தின் மூலம் ஒரு ஹேட்ச்பேக் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸீகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கார், மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்டு i10 ஆகியவற்றுடன் போட்டியிட்டு, நீண்டகாலமாக இந்திய சாலைகளை ஆட்சி செய்து வந்த டாடாவின் உன்னத தயாரிப்பான இன்டிகாவிற்கு மாற்றாகவும் அமையும்.

மேலும் வசிக்க 

வெளியிட்டவர்

Write your Comment மீது டாடா ஹேக்ஸா

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

எக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?