• English
  • Login / Register

டாடாவின் புதிய CEO மற்றும் MD –யாக திரு. க்வெண்டெர் பட்ஷெக் நியமனம்

published on ஜனவரி 20, 2016 10:01 am by sumit

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஏர்பஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரியான திரு. க்வெண்டர் பட்ஷெக் அவர்கள், தற்போது டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் உள்நாட்டு வியாபார நடவடிக்கைகளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் திரு. பட்ஷெக் பொறுப்பேற்கிறார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரான திரு. சைரஸ் P. மிஸ்ட்ரி அவர்கள், இந்த புதிய நியமனத்திற்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது, “தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு அற்புதமான கால கட்டத்தில் உள்ளது. அதே நேரம், இங்கு பல சவால்களும் நிறைந்துள்ளன. எனவே, திரு. பட்ஷெக்கின் நியமனம் மிக உகந்த தருணத்தில் நடந்திருக்கிறது. ஒரு நிறுவனத்தை எப்படி விருத்தி செய்ய வேண்டும் மற்றும் புதிய சந்தைகளை எப்படி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில், அவருக்கு அற்புதமான உலக அனுபவம் உண்டு. உயர்ந்த செயல்திறன் மிகுந்த அணியை வழிநடத்திச் செல்லும் திரு. பட்ஷெக் அவர்களின் திறமை, நிச்சயமாக எங்களது நிறுவனத்தை சீரான மற்றும் லாபகரமான வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

அவாண்டியம் அட்வைசர்ஸ் LLP நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான திரு. V. G. ராமகிருஷ்ணன், “சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தான் பெற்ற அனுபவத்தை, பட்ஷெக் அவர்கள் இங்கு பயன்படுத்தி, தற்போது உள்ள கடுமையான சவாலான நிலையைச் சமாளிக்க வேண்டும். மிகப் பெரிய சந்தையில் உள்ள பலதரப்பட்ட நுகர்வோரின் இயல்பை புரிந்து கொள்வது; மற்றும் பல்வேறு கலாசாரம் கொண்ட நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தை, அதன் பண்பாடு மாறாமல் நிர்வகிப்பது, போன்றவை புதிய CEO –விற்கு மிகுந்த சவாலான விஷயமாக இருக்கும். இங்கு வெற்றி பெறுவதற்கு, இந்திய சந்தையின் மாறுபட்ட கலாசாரத்தை உயர்வாக மதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்,” என்று கூறினார்.

55 வயதான இந்த ஜெர்மனியர், ஜெர்மனியின் ஸ்டாட்கார்ட்டில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் கோஆப்பரேட்டிவ் எஜுகேஷன் என்னும் சர்வதேச புகழ் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங் பென்ஸ் ஆட்டோமோட்டிவ் கம்பனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சில வருடங்கள் பொறுப்பெற்றது உட்பட, இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் 25 வருட அனுபவம் உள்ளது. பெய்ஜிங் பென்ஸ் நிறுவனம் என்பது, டெய்ம்ளர் AG மற்றும் பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்டிரியல் ஹோல்டிங்க் நிறுவனமும் இணைந்த ஒரு கூட்டு நிறுவனமாகும். இது சீனாவில் இயங்குகிறது. 2016 பிப்ரவரி மாதம் 15 –ஆம் தேதி முதல், திரு. பட்ஷெக் தனது புதிய பதவியில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience