சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டாடா கிராவிடாஸ் சோதனை ஓட்டம். முதன்மை இருக்கைகள் மற்றும் மின்னணு-தடைகருவி நிறுத்தும் அமைப்பைப் பெறுகிறது

published on ஜனவரி 20, 2020 11:35 am by dinesh for டாடா சாஃபாரி 2021-2023

சோதனை ஓட்டத்தின் போது ஹாரியரில் காணப்படும் பழுப்பு நிறத்திற்கு மாறாக ஒரு லேசான வெள்ளை மஞ்சள் நிறம் கலந்த வண்ண அமைப்பைப் பெறுகிறது

  • ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கிராவிடாஸ் அறிமுகப்படுத்தப்படும்.

  • 15 லட்சம் முதல் 19 லட்சம் வரை விலைகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • இது டீசல் தானியங்கி அமைப்புடன் கிடைக்கும்.

  • பெட்ரோல் இயந்திரம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • இது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் 6-இருக்கைகள் கொண்ட ஹெக்டருக்குப் போட்டியாக இருக்கும்.

இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கிராவிடாஸை அறிமுகப்படுத்த டாடா தயாராக இருக்கின்றது. கிராவிடாஸ் ஹாரியரின் 7 இருக்கைகள் கொண்ட மாதிரி இருக்கும்போது, சமீபத்திய சோதனை ஓட்ட காட்சிகள் டாடா 6 இருக்கைகள் கொண்ட அமைப்புடன் அதைக் கொடுக்க கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது.

அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே, சோதனை ஓட்டத்தில் இரண்டாவது வரிசையில் உள்ள இருக்கைகள் நீள் இருக்கைகளை போலில்லாமல் முதன்மை இருக்கைக்கைளை போன்று காணப்பட்டது. இரண்டாவது வரிசையில் கிராவிடாஸின் உயர் வகைகளுக்கு முதன்மை இருக்கைகளும், அதே சமயத்தில் குறைவான வகைகளுக்கு நீள் இருக்கை அமைப்பும் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீள் வகை இருக்கைகளுடன் ஒப்பிடும்போது முதன்மை இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த சோதனை ஓட்டத்தில் மிகவும் தனித்துவமானது மின்னணு தடைக்கருவி நிறுத்தும் அமைப்பு ஆகும், இது உயர் வகைகளில் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. மின்னணு-தடைக்கருவி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக, ஹாரியரில் உள்ள தள்ளும்-வகை கைத்தடைகருவி நெம்புகோலை பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்களின் மீது டாடா கவனம் செலுத்தி வருவதை எடுத்துரைக்கிறது. ஹாரியரில், பொருள் பிடிப்பான் கைத்தடைகருவிக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளதால், தடைக்கருவியை பயன்படுத்தும் போது பொருட்கள் இடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய சோதனை ஓட்ட காட்சிகளும் ஹாரியரில் காணப்படும் பழுப்பு நிறத்திற்கு மாறாக கிராவிடாஸின் அடர் குறைவான வெள்ளை மஞ்சள் கலந்த வண்ண அமைப்பை வெளிப்படுத்துகின்றன. டாடா கிராவிடாஸில் ஒரு அடர் குறைவான வண்ண அமைப்பை அறிமுகப்படுத்தக்கூடும், இது மிகவும் ஆடம்பரமான சிற்றறையின் தோற்றத்தை கொண்டிருக்கும்.

வாகன முகட்டின் கீழ், ஹாரியரின் அதே ஃபியட்-சோர்ஸ் 2.0- லிட்டர் டீசல் இயந்திரம் மூலம் கிராவிடாஸ் இயக்கப்படும். எனினும், இங்கே இது 170பி‌எஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயந்திரம் 6-வேக கைமுறையுடன் தரமாக இணைக்கப்படும், அதே சமயத்தில் 6-வேக ஏடி ஒரு விருப்பத்தேர்வாக வழங்கப்படும்.

பெட்ரோல் எஸ்யூவிகளின் அதிகரித்து வருகின்ற தேவைகளை நிறைவு செய்வதற்காக, டாடா ஹாரியர் மற்றும் கிராவிடாஸ் ஆகிய இரண்டிற்குமான பெட்ரோல் இயந்திரத்தை இயக்கி வருகின்றது. இது 1.6-லிட்டர் நேரடி உட்செலுத்தும் அலகு உடையது, இது இரு-உரசிணைப்பி விசை ஊடிணைப்புடன் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த 1.6-லிட்டர் அலகு கிராவிடாஸை அறிமுகப்படுத்தும் நேரத்தில் வழங்கப்படாது.

ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகம் செய்யவுள்ள கிராவிடாஸின் விலை 15 லட்சத்திலிருந்து 19 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்ததும், இது எக்ஸ்யூவி 500 மற்றும் வரவிருக்கும் 6 இருக்கைகள் கொண்ட எம்ஜி ஹெக்டர் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

Image Source

d
வெளியிட்டவர்

dinesh

  • 18 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா சாஃபாரி 2021-2023

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.67.65 - 71.65 லட்சம்*
Rs.11.39 - 12.49 லட்சம்*
Rs.20.69 - 32.27 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை