ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் மேம்பட்ட பதிப்பில் காட்சிப்படுத்தப்பட்டது Tata Avinya கான்செப்ட்
published on ஜனவரி 17, 2025 04:28 pm by dipan for டாடா avinya
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அவின்யா 2022 ஆம் ஆண்டில் டாடா நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் மேம்பட்ட பதிப்பாகும். இந்த புதிய கான்செப்ட் உள்ளேயும் வெளியேயும் வித்தியாசமான வடிவமைப்பை கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸின் முதல் தலைமுறை-3 EV கான்செப்ட் ஆன அவின்யா கார் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் மிகவும் மேம்படுத்தப்பட்ட அவதாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவின்யா கான்செப்ட் முதன்முதலில் 2022 ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இப்போது மேம்பட்ட வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உட்புறத்துடன் வருகிறது. அவின்யா கான்செப்ட் உடனடியாக விற்பனைக்கு வராது என்றாலும் கூட டாடா அதன் நவீன EV -களுக்கான காட்டும் முன்னோட்டமாக இது இருக்கும். அவின்யா கான்செப்ட் JLR -ன் EMA தளத்தின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜாகுவார் டைப் 00 கான்செப்ட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அவின்யா கான்செப்ட்டை பற்றி விரிவாகப் பார்ப்போம்:
வெளிப்புறம்
டாடா அவின்யா கான்செப்ட்டின் வெளிப்புற வடிவமைப்பு 2022 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டி-வடிவ LED DRLகள், பிளாங்க்டு-ஆஃப் கிரில் மற்றும் நேர்த்தியான LED ஹெட்லைட்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. மிரட்டலான கட்ஸ்கள் மற்றும் மடிப்புகளுடன் மஸ்குலரான வடிவமைப்பை கொண்டுள்ளது. கேமரா அடிப்படையிலான வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMகள்) மற்றும் முன்பக்க கதவுகளில் 'அவின்யா' பேட்ஜ் ஆகியவை அப்படியே உள்ளன. டெயில் விளக்குகள் LED DRLகளை போன்ற டி வடிவ வடிவமைப்பையும் கொண்டுள்ளன.
இன்ட்டீரியர்
புதிய அவின்யா கான்செப்ட் டூயல்-டோன் கேபின் தீம் மற்றும் இருக்கைகளைக் கொண்டுள்ளது. மேலும், டச்-பேஸ்டு பட்டன்கள் மற்றும் கண்ட்ரோல் பேனல்கள் இருப்பதால் ஒட்டுமொத்த உட்புற வடிவமைப்பு தெளிவாக இருக்கிறது. டிரைவர்ஸ் டிஸ்ப்ளே முந்தைய கான்செப்ட்டை போலவே, ஸ்டீயரிங் வீலிலேயே இடம்பெற்றுள்ளது. இருப்பினும், நவீன கால எலக்ட்ரிக் கான்செப்ட்களில் உள்ளதை போல இல்லாமல் அவின்யாவிற்கு உள்ளே திரைகள் பெரிதாக இல்லை. இது EV -யின் கட்டுப்பாடுகளுக்கு குரல் அடிப்படையிலான தொடர்புகளை நம்பியிருக்கும் என காட்டுகிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
அவின்யா கான்செப்ட்டை பார்க்கும் போது தயாரிப்பு-ஸ்பெக் மாடல்கள், கார் தயாரிப்பாளர்களின் பிற உற்பத்தி-ஸ்பெக் கார்களுடன் பார்க்கும்போது நிறைய வசதிகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளே (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்கு மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு), ஒரு பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பல மண்டல ஆட்டோ ஏசி போன்ற வசதிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஹிகிள் டூ லோடிங் (V2L) மற்றும் வெஹிகிள் டூ வெஹிகிள் (V2V) போன்ற EV-குறிப்பிட்ட வசதிகளும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360-டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) உடன் பாதுகாப்பு மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் 5 நட்சத்திர யூரோ என்சிஏபி கிராஷ் மதிப்பீட்டைப் பெறக்கூடிய தளத்தை உருவாக்கியதாகக் தெரிவித்துள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
அவின்யா கான்செப்ட்டின் அடிப்படையில் டாடா மோட்டார்ஸின் மூன்றாம் தலைமுறை EV களுக்கு EMA தளமானது அடிப்படையாக இருக்கும். குறைந்தபட்சம் 500 கி.மீ தூரம் செல்லக்கூடிய பெரிய பேட்டரி பேக்கை இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயங்குதளம் பல பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கட்டமைக்க முடியும் வகையில் இருக்கும். உற்பத்திக்கு தயாராக உள்ள ஜென்-3 EV -களுடன் அதிநவீன ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் காரில் கொடுக்கப்படும்.
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்
முன்பே குறிப்பிட்டது போலவே டாடா அவின்யா கான்செப்ட் அதன் எதிர்கால EV -களுக்கான கார் தயாரிப்பாளரின் பார்வையை முன்னோட்டமாக இருக்கும். இது உற்பத்தி-ஸ்பெக் அவதாரத்தில் அறிமுகமாகாது. இருப்பினும் டாடா வரும் 2026 ஆண்டு அவின்யா அடிப்படையிலான EV முதல் EV -யை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.