சுபாரு தன்னுடைய இம்ப்ரெஸா செடான் கார்களின் கான்செப்டை வெளியிட்டது.
ஜெய்பூர் : இரண்டு கார்களுமே அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள மேம்படுத்தப்பட்ட புதிய இம்ப்ரெஸா கார்களுக்கு அடிப்படையாக அமையும். இந்த கார்கள் தற்போது உள்ள கார்களைக் காட்டிலும் எடை குறைவாகவும், அதே சமயம் அளவில் பெரியதாகவும் இருக்கும். இந்த கார்கள் SGP என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுபாரு க்ளோபல் பிளேட்பார்மை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. வெளியாகி உள்ள டீஸர் படங்களில் காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை அதிகப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள சரிவலான மேற்கூரை பகுதி நன்கு புலப்படுகிறது. ஆனால் முன்புற பகுதியைப் பொறுத்தவரை டோக்கியோவில் வெளியிடப்பட்ட ஹேட்ச்பேக் கான்சப்டை போலவே காட்சியளிக்கிறது .
இந்த செடான் வகை கார்களின் அளவுப் பற்றிய எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில், ஹேட்ச் பேக் கார்களின் 4, 440 மி.மீ நீளம், 1880மி.மீ அகலம், 1440மி.மீ உயரம் மற்றும் 2670மி.மீ அளவுக்கு வீல்பேஸ் ஆகிய அளவுகளுக்கு நெருக்கமாகவே இந்த செடான் கார்களின் அளவும் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.
மேலும் இந்த இதைப் பற்றிய விவரங்கள், சுபாரு நிறுவனம் லாஸ் ஏன்ஜெலிஸ் நகரில் நவம்பர் 19 ஆம் தேதி நடக்க உள்ள ஆட்டோ ஷோவின் போது இந்த செடான் கார்களின் கான்செப்டை வெளியிடும் போது தான் நமக்கு தெரிய வரும். சுபாரு நிறுவனத்தின் அதி நவீன AWD தொழில்நுட்பம் தற்போதய கார்களை எந்த ஒரு பாதையிலும் சர்வசாதாரணமாக பயணிக்கும் ரேலி கார்களின் மன்னன் என்னும் அளவுக்கு பெயர் எடுக்க வைத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க :