ஸ்கோடா எடி வேரியன்ட்கள் புனைபெயர் சேர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது.
ஸ்கோடா எட்டி க்காக டிசம்பர் 10, 2015 01:49 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தில் நிலவி வரும் பொருளாதார மற்றும் மக்கள் தொடர்பு பிரச்சனைகள் அதனுடைய துணை ப்ரேன்ட்களின் செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதற்கு ஸ்கோடா நிறுவனத்தை ஒரு சிறந்த உதாரணமாக சொல்லலாம். சமீபத்தில் இந்நிறுவனம் தங்களது இந்திய சந்தையில் விற்பனையாகும் கார்கள் மீது ஏராளமான சலுகைகளை வழங்கி உள்ளது. பல மேம்பாடுகளையும் செய்துள்ளது. உதாரணத்திற்கு ரேபிட் மற்றும் ஆக்டாவியா கார்களின் 'எலிகன்ஸ் ' வேரியான்ட்களை 'ஸ்டைல்' என்று பெயர் மாற்றம் செய்தது. இந்த வரிசையில் அடுத்தப்படியாக தங்களது ப்ரீமியம் க்ராஸ்ஓவர் SUV வாகனமான 'எடி' வாகனங்களின் ஸ்டைல் 4X4 மற்றும் ஸ்டைல் 4X2 என்று இரண்டு வேரியன்ட்களை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்று 4X2 முன் - சக்கர ட்ரைவ் வேரியன்டாகவும் , மற்றொன்று அதிக சக்தி வாய்ந்த 4X4 வேரியன்டாகவும் இருக்கும். இந்த இரண்டு மாடல்களும் முறையே ரூ.20.3 லட்சங்கள் மற்றும் ரூ. 22 லட்சங்கள் ( எக்ஸ் - ஷோரூம், புது டெல்லி) என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
வெறும் பெயர் மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளதே தவிர என்ஜின் அமைப்பில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. பிரபல செக் நாட்டு கார் தயாரிப்பாளரின் இந்த SUV வாகனத்தின் 4X2 வேரியன்ட்கள் 108 பிஎச்பி ஆற்றலை வெளியிடவல்ல 2 - லிட்டர் TDI என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகின்றன. அதே நேரம், 4X4 வேரியன்ட்கள் 138 பிஎச்பி அளவு கூடுதல் ஆற்றலை வெளியிடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள அதே 2 லிட்டர் TDI யூநிட் மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஸ்கோடா தயாரிப்புகளில் தற்போது ஏறக்குறைய அனைத்து மாடல்களிலுமே எலிகன்ஸ் வேரியன்ட்களுக்கு பதிலாக 'ஸ்டைல் ப்ளஸ் ' மற்றும் 'ஸ்டைல்' வேரியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பெயர் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாத ஒரே மாடல் ஸ்கோடா சுபெர்ப் கார்கள் மட்டும் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, ஆனால் வெகு விரைவில் இந்த சுபெர்ப் செடான் கார்களிலும் பல நவீன மேம்பாடுகள் செய்யப்பட்டு அடுத்த தலைமுறை மாடல் ஒன்று வெளியிடப்படும் என்றும் அது ஸ்கோடா நிறுவனத்தின் பெயர் சொல்லும் செடானாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்