ஸ்கோடா ராபிட் ஆண்டுவிழா வெளியீடு ரூ.6.99 லட்சத்திற்கு அறிமுகம்
ஸ்கோடா ரேபிட் க்கு published on sep 02, 2015 12:43 pm by bala subramaniam
- 20 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை: ஸ்கோடா ஆட்டோ இந்தியா ரூ. 6.99 லட்சத்திற்கு (எக்ஸ் - ஷோரூம் விலை) புதிய ராபிட் ஆண்டுவிழா வெளியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆண்டுவிழா வெளியீட்டில் பக்கவாட்டு கதவில் பாயில் (foil) உடல் வண்ணத்திற்கு எதிர்மறையான வண்ணங்கள் பூசப்பட்டுள்ள கூரை பகுதி மற்றும் உட்புறத்தில் உயர்ரக மரத்தினால் ஆன வேலைப்பாடுகளும் செய்யப்பட்டு வெளிவந்துள்ளன. கூடவே எலிகன்ஸ் ப்ளஸ் மாடலில் புரட்சிகரமான ட்ரேக்ப்ரோ கார் ட்ரேக்கிங் சாதனமும் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் எல்லா ராபிட் மாடல்களிலும் முன்புற இருக்கை பகுதியில் இரட்டை காற்று பைகள் (ஏயர் பேக்) இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் C - பிரிவு கார்களிலேயே மிகவும் பாதுகாப்பானதாக இந்த ராபிட் கார்கள் மாறியிருக்கின்றன. செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை தான் இந்த சிறப்பு ஆண்டுவிழா வெளியீடாக வந்துள்ள ராபிட் கார்கள் அனைத்து ஸ்கோடா டீலர்ஷிப் மூலமும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த புதிய ஆண்டுவிழா வெளியீடு டிப்ட்ரானிக் கைகளால் மாற்றக்கூடிய 7 – வேக DSG கியர் அமைப்பு பொருத்தப்பட்டு வெளிவந்துள்ளது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய இரட்டை பின்புற கன்சோல் லில் அமைக்கப்பட்டுள்ள AC வென்ட், ஸ்கோடா 2 – டின் ஆடியோ சிஸ்டம், போன் மற்றும் ஆடியோ அமைப்பிற்கான ப்ளுடூத் தொடர்பு வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், ப்ரோஜெக்டார் முகப்பு விளக்குகள், மற்றும் உயரமும் நீளமும் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள கூடிய ஸ்டீரிங் வீல் என ஏராளமான அம்சங்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய அறிமுகத்தைப் பற்றி ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் விற்பனை, சர்வீஸ் மற்றும் மார்க்கெடிங் பிரிவின் இயக்குனர் திரு. அஷுதோஷ் தீட்சித் பின்வருமாறு கூறினார். “ அறிமுகமான நாளில் இருந்தே தன்னுடைய ஸ்டைல் , நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்கோடா ராபிட் கார்கள், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பயனை வாடிக்கையாளருக்கு தருவதில் முதன்மையானதாக விளங்குகிறது. மேலும் அற்புதமான ஒரு அனுபவத்தை வாடிக்கையாளருக்கு தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் ஸ்கோடா நிறுவனத்திற்கு தான் இந்நேரத்தில் நன்றி சொல்ல விழைகிறேன். இந்த புதிய ஆண்டுவிழா சிறப்பு வெளியீடு ராபிட் கார்களை வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்திற்கு இன்னமும் மிக அதிகமான பலனை பெறுவார்கள் என்று நான் உறுதியாக கூறுகிறேன். ஸ்கோடா வின் தொடர்ந்து நிலைத்து நிற்கும் நம்பகத்தன்மை. தன்மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஆதரவு தரும் ஸ்கோடா கார் பிரியர்களுக்கு சாதுரியம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகள் தருவது போன்றவற்றில் ஸ்கோடா நிறுவனத்தினர் எப்போதும் சிறந்தவர்கள் என்பதற்கு சான்றாக இந்த ஆண்டுவிழா ராபிட் கார்கள் அமையும்.”
- Renew Skoda Rapid Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful