2016 டொயோட்டா இனோவாவின் பின்புறம், சிற்றேடு மூலம் வெளியானது
modified on நவ 03, 2015 02:02 pm by அபிஜித் for டொயோட்டா இனோவா
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
கடந்த சில நாட்களுக்கு முன் 2016 டொயோட்டா இனோவாவின் படங்கள், சிற்றேடு மூலம் இன்டர்நெட்டிற்கு எட்டிய நிலையில், தற்போது அதே முறையில் பிரபலமான இந்த MPV-யின் பின்புறத்தை காட்டும் படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது உள்ள மாடலில் இருந்து, இனி வரவுள்ள கார் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. எது ஒரு மிதமான தயாரிப்பாக வெளியிடப்பட்டதோ, அதையே தற்போது அதிக ஆக்கிரமிப்பு மிகுந்ததாக மாற்றி, அதே நேரத்தில் நல்ல தயாரிப்பாக வெளியிடப்படுகிறது. மேலும் இது டொயோட்டாவின் சமீபகால வடிவமைப்புத் தத்துவத்தின் வரிசையில் சேர்ந்துள்ளது.
தற்போது கசிந்துள்ள இக்காரின் படங்களை பார்த்தால், பின்புற முனை தற்போது அதிக கோணம் கொண்டதாகவும் (ஆங்குலர்), டெயில்கேட்டில் பரவி காணப்படும் விரிந்த டெயில்லெம்ப்கள் ஆகிய மாற்றங்களை பெற்று, இதை பார்க்கும் போது பம்பர்களின் மேல்முனை உடன் இணையும் பூட் லிட்டின் மீது இன்டிகேட்டர்கள் தொங்கிக் கொண்டு இருப்பது போல காட்சியளிக்கிறது. இதை தவிர, பின்பக்க வீல் ஆர்ச்சின் மீது காணப்படும் ஒரு ஹன்ச், தற்போதைய இனோவாவில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது ஆகும். மேலும், ஒரு தாழ்வான லோடிங் லிப் உடன் கூடிய ஒரு சதுர வடிவ பின்புற விண்டுஸ்கிரீன் கூட, தற்போதைய காரை நினைவூட்டுவதாக இருக்கிறது.
http://images.cardekho.com/images/carNewsimages/carnews/Toyota%20Innova/toyota-innova2015_02.jpg
சமீபகால டொயோட்டாவின் அறிமுகம்: புதிய டொயோட்டா லேண்டு க்ரூஷர் 200, ரூ.1.29 கோடியில் அறிமுகம்
முன்புறத்தில் இரட்டை ப்ரோஜக்டர் ஹெட்லெம்ப்களை அமைய பெற்று, ஒரு தலைகீழான அறுங்கோண கிரில் உடன் இரண்டு பெருத்த செங்குத்தான கிரோம் ஸ்லாட்களை பெற்று, ஃபேக்லெம்ப்களுக்கு அடுத்தபடியாக இன்டிகேட்டர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்பக்கம் நுழையும் போது, தற்போதைய உட்புறத்தில் இருந்து, பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. நமக்கு கிடைத்த படங்களை வைத்து பார்க்கும் போது, 2016 ஃபார்ச்யூனர் மற்றும் கொரோலா ஆகியவற்றை தழுவியதாக இதன் உட்புறவியல் அமைக்கப்பட்டிப்பது தெரிகிறது. அவற்றில் தற்போது ஒரு பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சூழ்ந்து காணப்படும் லைட்டிங், ஒரு அதிக மேம்பட்ட டிரைவர் தகவல் கிளெஸ்டர் மற்றும் ஒரு சிலவற்றை கொண்டுள்ளது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும், சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, அடுத்த தலைமுறை இனோவாவில் ஒரு திருத்தி அமைக்கப்பட்ட மோட்டாரான 2.4-லிட்டர் டர்போ டீசல் என்ஜினை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 143 PS@3400rpm ஆற்றலை வெளியிட்டு, 342 Nm என்ற மிஞ்சிய முடுக்குவிசையை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக, இந்தியாவில் முதல் முறையாக, இதில் ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (6-ஸ்பீடு, 360 Nm) உடன் கூடிய ஒரு 6-ஸ்பீடு மேனுவல் பெற்றிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க:
0 out of 0 found this helpful