புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக், நாளை அறிமுகம் செய்ய தயார்
published on நவ 18, 2015 04:36 pm by sumit for லேண்டு ரோவர் ரேஞ்ச் rover evoque 2016-2020
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்திய கார் சந்தையில், புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக் காரை நாளை வெளியிட லேண்ட் ரோவர் நிறுவனம் தயாராக உள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலின் உட்புறத்திலும், வெளிபுறத்திலும் பல சிறப்பான அழகியல் தன்மைகளை பெற்றுள்ளது. மறுவடிவமைப்பு பெற்ற பம்பர், பெரிய ஏர்-டெக்கர்கள், புதிய ஸ்டைலில் அமைந்த கிரில், புதியதாக சேர்க்கப்பட்ட அம்சங்களுடன் கூடிய LED அடாப்டிவ் ஹெட்-லெம்ப்கள் ஆகியவற்றை பெற்று, எல்லா ஆட்டோமொபைல் ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் ஒரு பேக்கேஜ் ஆக தோற்றமளிக்கிறது. சீரமைக்கப்பட்ட டெயில்கேட் ஸ்பாயிலர், LED டெயில்-லெம்ப்கள் மற்றும் புதிய அலாய்களின் ஜோடி ஆகியவை இந்த காரில் சேர்க்கப்பட்டு, இதன் முன்னோடியோடு ஒப்பிட்டால் புதியதாகவும், மாறுபட்ட தோற்றத்திலும் காட்சி அளிக்கிறது. உட்புறத்தை பொறுத்த வரை, இந்த SUV-யில் புதிய டோர் கேஸிங் மற்றும் சீட்கள் உடன் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை காணப்படுகிறது. இந்த பிரிட்டிஷ் வாகன தயாரிப்பாளரின் மூலம் இந்த காருக்கான முன்பதிவு கடந்த மாதமே துவக்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பெரிய அளவிலான ரேஞ்ச் ரோவர்களை போன்று, ஆல்-ட்ரெயின் பிரோக்ரஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை, 2016 ரேஞ்ச் ரோவர் இவோக் காரிலும் காண முடிகிறது. இதன் முன்னோடியை விட 20-30 கிலோ வரை எடை குறைவான ஆல்-அலுமினியம் இன்ஜினியம் TD4 டர்போடீசல் என்ஜினை கொண்டு, இந்த வாகனம் இயக்கப்பட உள்ளது. இந்த என்ஜின் மூலம் 150bhp மற்றும் 180bhp ஆகிய இரண்டு மாதிரியான ட்யூன்களை பெற முடிகிறது. இதில் இரண்டாவது மாதிரி, உயர்தர மாடல்களுக்கு உரியது. இதை தவிர இந்த என்ஜின் மூலம் 420 Nm என்ற ஒரு அதிகபட்ச முடுக்குவிசையை அளித்து, 9-ஸ்பீடு ZF டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயலாற்றுகிறது.
இதையும் படியுங்கள்