ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வர்டிபிள் வெளியிடப்பட்டது
published on நவ 16, 2015 10:00 am by manish for லேண்டு ரோவர் ரேஞ்ச் rover evoque 2016-2020
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
வாகன சந்தையில் அறிமுகமாவதற்கு முன்பே, ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வர்டிபிள் கார் வெளியிடப்பட்டது. புதிய ரேஞ்ச் ரோவர் இவோக்கை, உலகத்திலேயே மிகவும் ஆடம்பரமான SUV கார் என்று கூறினால் அது மிகை ஆகாது. முதல் முதலில், இந்த காரின் வயர் ஸ்கல்ப்ச்சர் லண்டனில் வெளியிடப்பட்டது. இப்போது, அறிமுகத்திற்கு முன்னரே வெளியிடப்பட்டுள்ள இந்த காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள், கார் பிரியர்களுக்கு கிளர்ச்சியூட்டும் விதத்தில் உள்ளது. வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில், மேல் விதானம் திறந்த நிலையில் ஓபன்-டாப்புடன் கம்பீரமாக இந்த கார் ஓடிக் கொண்டிருப்பதும் நின்று கொண்டிருப்பதும், மனதை கவரும் விதத்தில் உள்ளது. தற்போது, சந்தையில் உள்ள திறந்து மூடக் கூடிய மேல் விதானத்தைக் கொண்ட, மிகவும் நீளமான கன்வர்டிபிள் SUV கார் என்ற பெருமை ரேஞ்ச் ரோவர் இவோக்கையே சாரும்.
மடக்கும் விதத்தில் அமைந்த இதன் மேற்கூரை கலையுணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது பார்ப்பதற்கு 5 டோர் ஹார்ட் டாப் மாடலைப் போலவே உள்ளது. வெறும் 18 வினாடிகளில் இதன் மேற்கூரையை ரிட்ராக்ட் செய்ய முடியும். மணிக்கு 30 மீட்டர் வேகத்தில், அதாவது மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்திற்கும் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் போது, வெறும் 21 வினாடிகளில் இதனை லாட்ச் செய்ய முடியும். பொதுவாக கன்வர்டிபிள் மாடல் கார்களில், பூட் பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்கும். மேலும், உறுதியான கட்டமைப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்படும். ஆனால், ரேஞ்ச் ரோவர் இவோக்கைப் பொறுத்தவரை கன்வர்டிபிள் மாடலில் வந்தாலும், 251 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் பகுதி இதில் இடம்பெற்றுள்ளது. அது மட்டுமல்லாது, ஏனைய கார்களை ஒப்பீடும் போது, மிகவும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய உறுதியான மற்றும் அம்சமான கட்டமைப்புடன் வருகிறது.
பராமரிக்கப்படாத சாலைகளிலும் திறம்பட செயல்படுவதில் ரேஞ்ச் ரோவர் இவோக் மாடல் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இத்தகைய மதிப்பு வாய்ந்த தனிச்சிறப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்களை, இந்த ரேஞ்ச் ரோவர் இவோக் காரில் பொறுத்தியுள்ளனர். விபத்து நேரப்போகிறது என்று சுதாரித்த 90 மில்லி வினாடிகளில், உடனடியாக ரோல் ஓவர் பாதுகாப்பு கருவி இயங்க ஆரம்பித்து, பாதுகாப்பு பார்கள் மேலெழுந்து பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. ரேஞ்ச் ரோவர் இவோக் காரின் உள்ளே சென்று பார்த்தால், InControl 10.2 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் பார்க்கும் போது, இந்த கன்வர்டிபிள் மாடல் மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. விரைவில் இந்த கார் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என்ற செய்தி, அனைவருக்கும் உற்சாகத்தை அள்ளித் தருகிறது.
இதையும் படியுங்கள்
ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டபிள் நவம்பரில் அறிமுகமாகிறது
புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக்: முன்பதிவு துவக்கம்
0 out of 0 found this helpful