வெற்றியடையும் எதிர்பார்ப்போடு தயாரிப்பில் உள்ள ஃபியட் ஏஜியா, இஸ்தான்புல் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைப்பு
published on செப் 24, 2015 01:38 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்போடு தயாரிப்பில் உள்ள ஃபியட் ஏஜியா காரின் தொழில்நுட்பத்தை, இந்த ஆண்டின் இஸ்தான்புல் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. வரும் 2017 ஆம் ஆண்டு இந்திய சாலைகளை அடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார், பெரும்பாலும் லீனியா காருக்கு ஒரு மாற்றாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்த கார் துருக்கியில் லீனியாவிற்கு மாற்றாக அமைய உள்ளது. மேலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள இந்த கார், அங்கே தற்போதுள்ள லீனியா சேடனுக்கு மாற்றாக அமைய உள்ளது.
ஏஜியாவில் உள்ள வடிவமைப்பு அம்சங்களை முழுமையாக ஆராய்ந்தால், அது ஒரு நவீன அணுகுமுறையை தாங்கி இருப்பதை காணலாம். ஒரு குடும்பத்திற்கான துவக்க நிலை சேடனாக உள்ள இந்த இத்தாலி நாட்டு கார், துருக்கியின் புர்சாவில் உள்ள ஃபியட்டின் டொஃபாஸ் தொழிற்சாலையில், உலக அளவிலான காராக தயாரிக்கப்பட உள்ளது.
இந்த காரின் உட்புற அமைப்பில், ஃபியட் நிறுவனத்தின் புதிய யூகனேக்ட் சிஸ்டம் இயக்கும், ஒரு புதிய 5 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே அம்சத்தை காணலாம். இந்த யூகனேக்ட் வசதியின் மூலம் ஒருவரது ஸ்மார்ட்போன் ஆப்பை, காரில் உள்ள பொழுதுபோக்கு சாதனத்துடன் இணைத்து, மெசேஜ்களை படிக்கவும், இசையை இசைக்க செய்யவும், டெலிபோன் பயன்பாடு மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றை இயக்கலாம். டாம்டாம் மூலம் இயக்கப்படும் இந்த காரின் நேவிகேஷன் சிஸ்டத்தின் டிஸ்ப்ளே, பின்புற பார்க்கிங் கேமராவிற்கான ஸ்கிரீனையும் சேர்த்து இரண்டாக உள்ளது.
இந்த காரில் நான்கு வகைகள் வரலாம் என்று தெரிகிறது. இதில் 2 பெட்ரோல் மற்றும் 2 டீசல் வகைகளை கொண்டு, 95bhp இருந்து 120bhp வரையிலான ஆற்றலை வெளியிடும். எரிபொருள் சிக்கனத்தில், இந்த கார் லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ் அளிக்கும் என்று ஃபியட் உறுதியளிக்கிறது. இந்தியாவில் ஏஜியாவின் அறிமுகத்திற்கு பிறகு, ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும். இந்தியாவிற்கு ஏஜியாவை கொண்டு வருவது இன்னும் ஊகங்களின் அடிப்படையிலேயே உள்ள நிலையில், அது உறுதி செய்யப்பட்டால், புனேயின் அருகில் உள்ள ஃபியட்டின் ராஞ்சாகாவுன் தொழிற்சாலையில் இந்த கார் தயாரிக்கப்படும்.