பிரிமியம் எஸ்யூவிகளின் மறுமலர்ச்சி: எண்டோவர், ஃபார்ச்சூனர் மற்றும் பஜேரோ ஸ்போர்ட்
published on ஆகஸ்ட் 04, 2015 05:35 pm by raunak for போர்டு இண்டோவர் 2015-2020
- 13 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
அடுத்தாண்டின் மத்தியில் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் வரிசையில் பழைய போட்டியாளராக உள்ள போர்டு எண்டோவர் ஆகியவற்றில் புதுமையை பெற்றிருப்போம்.
ஜெய்ப்பூர்: இந்தியாவில் முதன் முதலில் பிரிமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது போர்டு நிறுவனமாகும். தற்போது 12 ஆண்டுகளை கடந்துள்ள இந்நிறுவனத்தின் எண்டோவர், 2003 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தபடியாக 2009 ஆம் ஆண்டு டொயோட்டா, ஃபார்ச்சூனரை அறிமுகப்படுத்தியது. 2010ல் மிட்சுபிஷி, பஜேரோ ஸ்போர்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் கால இடைவெளி இருந்தாலும், மேற்கண்ட இம்மூன்று வாகனங்களின் அடுத்த தலைமுறை தயாரிப்பு, அடுத்தாண்டின் மத்தியிலோ அல்லது அதற்கு முன்னரோ, நமது சாலைகளில் ஓடுவதை காணலாம். இம்மூன்றில் முதலாவதாக போர்டு எண்டோவர், அடுத்த சில மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபார்ச்சூனர் மற்றும் பஜேரோ ஸ்போர்ட் ஆகிய மற்ற இரண்டும், அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
போர்டு எண்டோவர்
தற்போது மிகவும் பழைய அமைப்பை கொண்டுள்ள எண்டோவர், மற்ற இரண்டிற்கும் முன்னதாக வெளிவர உள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் வைத்து புதிய எண்டி-யை ஓட்டி பார்த்தோம். இந்த பண்டிகை காலவாக்கில் அது அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய எண்டி என்பது இப்பிரிவில் ஒரு எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பாகும். அதில் புதிய தரத்துடன் கூடிய டீசல் என்ஜின்கள், டிரெயின் மேனேஜ்மன்ட் சிஸ்டத்துடன் கூடிய நவீன 4டபில்யூடி சிஸ்டம் உள்ளது. இந்த புதிய டீசல் என்ஜின்களில் உள்ள 2.2-லிட்டர் 4-சிலிண்டர் யூனிட் மற்றும் பிரிவில் முதன்மையாக 3.2 லிட்டர் 5-சிலிண்டர் மோட்டார் ஆகியவை குறித்து பேச்சு அடிபடுகிறது. வாகனத்தை செலுத்துவதில், தரமுள்ள 6-ஸ்பீடு மேனுவலாகவும், அதனோடு 6-ஸ்பீடு தானியங்கியாகவும் இயங்கும் வசதிகள் உட்படுத்தப்பட்டுள்ளது.
மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்
புதிய தலைமுறை பஜேரோ ஸ்போர்ட் குறித்து மிட்சுபிஷி தரப்பில் பல நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற இரண்டை போல பல உட்புற-வெளிபுற மாற்றங்களுடன் இதுவும் வெளிவர உள்ளது. முன்பக்கத்தை பொறுத்த வரை, இந்நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட அவுட்லாண்டரில் முதன் முதலாக முன்முக வடிவமைப்பு திட்டத்தில் காணப்பட்ட புதிய “டைனாமிக் ஷில்டு” அமைப்பை, இது தத்தெடுத்துக் கொள்கிறது. எதிர்பார்த்தது போல, மிட்சுபிஷியின் அறிமுக 8-ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் பொறுத்தப்பட்ட புதிய 2.4 லிட்டர் எம்ஐவிஇசி டர்போ டீசல் என்ஜின் மூலம் பஜேரோ ஸ்போர்ட் இயங்கும் என மிட்சுபிஷி தெரிவித்துள்ளது. என்ஜினின் சக்தி விவரங்கள் குறித்து இதுவரை எதுவும் வெளியிடப்படாத நிலையில், ட்ரிடான் பிக்-அப் கொண்ட என்ஜினை அடிப்படையாக கொண்ட பஜேரோ ஸ்போர்ட், 180 ஹெச்பி-க்கும் சற்று அதிகமாகவும், அதிகபட்சமாக 430 என்எம் டார்க்-கும் அளிக்கலாம். மேலும், பஜேரோ ஸ்போர்ட்டில் முதல் முறையாக “ஆப்-ரோடு” வசதியையும் மிட்சுபிஷி அளித்துள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா சமீபத்தில் தனது இரண்டாம் தலைமுறை ஃபார்ச்சூனரை, உலகளவில் ஒரே நேரத்தில் ஆஸ்திரேலியாவிலும், தாய்லாந்திலும் அறிமுகப்படுத்தியது. ஃபார்ச்சூனரின் வடிவமைப்பை பொறுத்த வரை, அஜானுபாகுவான உருவத்தில் மாற்றங்களை செய்து, அலங்காரமாகவும், பளபளப்பாகவும் மாற்றியுள்ளது. மற்ற இரண்டை போல, ஃபார்ச்சூனரிலும் தரமான 2.8 லிட்டர் புதிய டீசல் என்ஜின்கள் மற்றும் 2.4 லிட்டர் ஆயில் பர்னர்கள் ஆகியவை பொறுத்தப்பட்டு, தரமான 6-ஸ்பீடு மேனுவல் உடன் 6-ஸ்பீடு தானியங்கி அளிக்கப்படுகிறது.
0 out of 0 found this helpful