ஃபேன்டாம் 2.0 நவீனமாக மாற்றியமைக்கப்பட்டது
published on அக்டோபர் 05, 2015 09:37 am by cardekho for ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம்
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் கார், 10 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கத்திற்கு மாறாக ஒரு முழுமையான மறுவடிவத்தில் வெளிவரவுள்ளது என்பது, ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஆட்டோமொபைல் மேகஸின் என்ற பிரபல வாகன பத்திரிக்கையின் செய்தி உண்மை என்றால், ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு மிகவும் நவீனமாகவும், உயரமான கிரில் கம்பி மற்றும் மாறுபட்ட C பில்லர் ஆகியவற்றுடன் நேர்த்தியான தோற்றத்தில் விரைவில் வெளிவரும்.
ஏறத்தாழ சுமார் 10 ஆண்டுகளாக, ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் மாடல் ஒரே விதமாகவே, மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த காரின் முன்புறத்தில் சற்றே அதிக கூராக்கி ஒரு மெல்லிய மாற்றம் செய்யப்பட்டது. எனவே, தற்போது வர இருக்கும் பல விதமான மாற்றங்கள் குறிப்பிடத் தக்கவையாக, அனைவரும் பேசும்படியும் உள்ளன.
இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் காரின் வடிவமைப்பானது, இதன் அடிப்படை மாடல் வடிவத்துடன், சீனாவில் மிகவும் பிரபலமான நீண்ட இடைவெளி கொண்ட சக்கர அமைப்புடன் இணைந்து புதுமையாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஃபேன்டாம் மாடல், இப்போது இருக்கும் பிரபலமான கூபே மற்றும் மாற்றக்கூடிய வசதிகளுடன் கிடைக்காது என்பதே இதன் முதன்மையான, வெளிப்படையான குறைபாடாக உள்ளது. ஆனால், ஏற்கனவே இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான வரெய்த் மற்றும் டான் ஆகிய வகைகள், இந்த குறிப்பிட்ட அம்சங்களின் வாடிக்கையாளர்களை நிறைவாக பூர்த்தி செய்து விட்டதால், இது பெரிய பாதிப்பு தரும் குறைபாடாக இருக்காது என்று நம்பப்படுகிறது.
விரைவில் வரவுள்ள குள்ளினான் க்ராஸ் ஓவர் மாடலில் பயன்படுத்திய அதே அலுமினிய தொழில்நுட்பமே, இதிலும் பயன்படுத்தப்படும் என்றும், BMW நிறுவனத்தின் தயாரிப்பான V12 இஞ்ஜின் கொண்டு புதிய ஃபேன்டாம் சக்தியூட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது பாரம்பரிய வழக்கத்தையே இப்போதும் பின்பற்றுகிறது, அதாவது இவ்வாகனம் தொடர்பான முக்கிய விவரங்களையும் மற்றும் இதன் விலை பற்றிய விவரங்களையும் மிகவும் ரகசியமாகவே வைத்துள்ளது. ஆனால், புதிய ஃபேன்டாமின் நம்பகத்தன்மையையும், உயர்தர அமைப்பையும் பார்க்கும்போது, இதன் பெட்ரோல் வகை மிகவும் ஆடம்பரமாகவும், மிகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும் என்று தெரிகிறது. முழுமையாக வடிவம் மாற்றப்பட்ட இந்த கார், அடுத்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 out of 0 found this helpful