இந்தியாவில் Land Cruiser 300 காரின் 250க்கும் மேற்பட்ட யூனிட்களை ரீகால் செய்யும் டொயோட்டா நிறுவனம்
published on பிப்ரவரி 23, 2024 06:20 pm by rohit for டொயோட்டா லேண்டு க்ரூஸர் 300
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ரீகால் பாதிக்கப்பட்ட எஸ்யூவி -களுக்கு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ECU -வில் ஏற்பட்டுள்ள மென்பொருள் பாதிப்பை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் 269 யூனிட்களை தானாக முன்வந்து ரீகால் செய்துள்ளது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் ECU (மின்னணு கட்டுப்பாட்டு அலகு) மென்பொருளை சரி செய்வதற்காக இது நடத்தப்படவுள்ளது. டொயோட்டோவின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவியான இந்த ரீகால் யூனிட்கள் பிப்ரவரி 12, 2021 மற்றும் பிப்ரவரி 1, 2023 க்கு இடையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவையாக உள்ளன.
ரீகால் பற்றிய கூடுதல் விவரங்கள்
ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த பாதிப்பு தொடர்பான இதுவரை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. டொயோட்டாவின் டீலர்ஷிப்கள், பாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்களை ரீகாலின் ஒரு பகுதியாக, காரில் தேவையான சர்வீஸ் செய்து கொள்வதற்காக தனித்தனியாகத் தொடர்பு கொள்ளும்.
டொயோட்டா இந்தியா -வின் இணையதளத்தில் உள்ள ‘பாதுகாப்பு ரீகால்’ ஆப்ஷனுக்கு சென்று வாகன அடையாள எண் (VIN) அல்லது சேசிஸ் எண் மூலமாக உரிமையாளர்கள் வாகனம் ரீகாலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்கலாம். உங்கள் அருகிலுள்ள டொயோட்டா டீலரையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது அதன் கஸ்டமர கேர் சர்வீஸ் சென்டரை 1800-309-0001 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மேலும் பார்க்க: Mercedes-Maybach GLS 600 காரை வாங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே
காரை தொடர்ந்து இயக்கலாமா ?
எஸ்யூவி -யின் பாதிக்கப்பட்ட யூனிட்களை தற்போதைய நிலையில் இயக்குவது பாதுகாப்பானதாக இருக்குமா என்பதை டொயோட்டா குறிப்பிடவில்லை. என்றாலும், உங்கள் வாகனம் ரீகால் செய்யப்பட்டுள்ளதா என்பதை விரைவில் கண்டறியுமாறு பரிந்துரைக்கிறோம். ஆம் என்றால், உங்கள் காரை சரி செய்வதற்காக உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லவும். கடைசியாக லேண்ட் க்ரூஸர் விலை ரூ. 2.10 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை வாங்க சில வருடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க: புதிய கார்களின் பாதுகாப்புதான் முக்கியம்… பிளாட்பெட் டிரக் டெலிவரி சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் டொயோட்டா
மேலும் படிக்க: டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 டீசல்