புதுப்பிக்கப் பட்ட அடுத்த தலைமுறை போர்ட் எண்டீவர் ஜனவரி 20, 2016ல் அறிமுகமாகிறது
போர்டு இண்டோவர் 2015-2020 க்காக ஜனவரி 08, 2016 12:58 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் எண்டேவர் மாடலை புதுப்பித்து 2016, ஜனவரி 20 ஆம் தேதி அன்று மறுவெளியீடு செய்யவுள்ளது. இதற்கு முந்தைய எண்டோவர் மாடல் சென்ற ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. சமீபமாக இந்த வாகனத்தின் வெளியீடு ஒரு நாள் முன்னதாகவே இருக்கும் அதாவது ஜனவரி 19 ஆம் தேதி அன்று இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் புதிய எண்டோவர், தற்போது உள்ள ஃபார்ச்சூனர், புதுப்பிக்கப்பட்ட மிட்சுபீஷி பஜேரோ ஸ்போர்ட் மற்றும் புதிய செவ்ரோலெட் டிரைல்பிளேஜர் ஆகியவற்றோடு போட்டியிடவுள்ளது. இதற்கு முந்தைய எண்டோவர் மாடலின் விலையை விட இதன் விலை சற்று கூடுதலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில், இதற்கு முந்தைய மாடல்லை போலவே புதிய எண்டோவர் மாடலும் இரண்டு வித இஞ்ஜின் விருப்ப தெரிவுகளில் வருகிறது. அவற்றில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 3.2 லிட்டர் 5-சிலிண்டர் TSCi டீசல் இஞ்ஜின் ஆகியன அடங்கும். 160 PS திறனும், 385 Nm எனும் அதிகபட்ச டார்க் விசையை தரவல்லதாக 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 6- ஸ்பீட் மேனுவல் அல்லது 6- ஸ்பீட் ஆட்டோமேடிக் வசதியுடன் 4WD விருப்ப தெரிவாக வருகிறது. இதன் பெரிய 3.2 லிட்டர் இஞ்ஜின் 200 PS திறனும், 470 Nm எனும் அதிகபட்ச டார்க் விசையை தரவல்லதாக உள்ளது. இந்த இஞ்ஜின் 6- ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4WD வசதியுடன் மட்டுமே ஸ்டாண்டர்ட் மாடலாக வருகிறது. இந்த புதிய எண்டோவர் 800 mm தண்ணீர் அளவில் செல்ல கூடியதாகவும் 225 mm தரை இடைவெளி கொண்டும் வருகிறது.
மற்றொரு சுவாரஸ்யமான செய்தி, 2016 இன் ஃபோர்ட் எண்டோவர் ஆட்டோமேக்கருடைய டெரைன் மானேஜ்மென்ட் சிஸ்டத்தை வழங்கவுள்ளது. கேபின் பகுதியில் உள்ள சுழலும் நாப்பை இயக்குவதன் மூலம் ராக், சாண்ட், ஸ்னோ ஆகிய விருப்பங்களை தேர்வு செய்துகொள்ளமுடியும். இது இந்த பிரிவில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய அம்சமாகும். ஃபோர்ட் டின் 8 அங்குல SYNC 2 டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், இப்பிரிவில் முதன்முறையாக செமி ஆட்டோ பேரலல் பார்க் வசதி, எட்டு விதமாக மாற்றி அமைத்துக்கொள்ளும் விதமான முன்புற இருக்கை, டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், மின்சக்தியால் மடக்க கூடிய மூன்றாவது வரிசை இன்னும் பல முக்கிய அம்சங்களை இந்த புதிய மாடல் கொண்டுள்ளது. லைட்டிங் பற்றி பேசுகையில், ஃபோர்ட் எண்டோவர் பகல் நேரத்தில் பயன்படுத்தும் LED விளக்குடன் இணைந்த ப்ரோஜெக்டர்கள் மற்றும் LED டெய்ல்லாம்ப்கள் ஆகியவற்றுடன் வருகிறது. இதன் வண்ண தெரிவுகளாக ஆறு வகை வண்ணங்களாக – சன்செட் ரெட், டைமண்ட் ஒயிட், கோல்டன் பிரான்ஸ், மூன்டஸ்ட் சில்வர், பாந்தர் பிளாக் மற்றும் ஸிமோக் கிரே ஆகியன உள்ளன. பாதுகாப்பு அடிப்படையில் எண்டோவர் மற்ற அம்ஸங்களோடு சேர்ந்து 7 ஏர் பேக்களுடன் வருகிறது.
மேலும் வாசிக்க