அடுத ்த தலைமுறை டொயோட்டா இனோவா: ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் காட்சிக்கு வைக்கப்படுகிறது
published on ஜனவரி 13, 2016 03:49 pm by saad for டொயோட்டா இனோவா
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தோனேஷியா சந்தையில் புதிய டொயோட்டா இனோவா, அதன் சர்வதேச அரங்கேற்றத்தை சமீபத்தில் பெற்றது. இந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாடல், பார்வைக்கு அருமையாகவும், ஒரு முழமையான புத்தம் புதிய வெளிபுற மற்றும் உட்புற வடிவமைப்பை பெற்றதாகவும், அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆராய்ந்து பார்க்கும் போது, ஒரு புதிய என்ஜின் தேர்வையும் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனம் காலாவதியானது போல தெரிவதால், புதிய மாடலுக்காக மக்கள் ஆவலோடு காத்திருக்க துவங்கிவிட்டனர். அதே நேரத்தில் 2016 இனோவா MPV-வை வரும் ஆட்டோ எக்ஸ்போ 2016-வின் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரத் தேவையான ஆயத்தப் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் அறிமுகம் இந்தாண்டின் 4வது காலாண்டில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்புற அமைப்பியல் குறித்து பார்க்கும் போது, இக்காரில் ஸ்போர்ட்ஸ் டயல் ஸ்லாட் கிரோம் கிரில் உடன் LED பிராஜக்டர் டைப் ஹெட்லெம்ப்கள் மற்றும் பெரியளவிலான அறுங்கோண வடிவ ஏர் டிரம் ஆகியவை உள்ளன. முன்பகுதியின் தோற்ற விவரங்களை கொண்டு அதிக கவர்ச்சிகரமாக காட்சி அளிக்கும் இது, இந்தியாவில் தற்போதுள்ள மாடலின் தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. மற்ற அழகியல் மேம்பாடுகளில், 16-17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் விழுங்கப்பட்டது (பூமெராக்) போன்ற அமைப்பிலான பின்புறத்தில் உள்ள டெயில்லெம்ப்கள் ஆகியவை உட்படுகின்றன.
உட்புற அமைப்பியலுக்கு வரும் போது, 2016 டொயோட்டா இனோவா-வில், இதுவரை நாம் பெற்று வந்ததை விட, அதிகளவிலான ஒரு பிரிமியம் உணர்வு நமக்கு கிடைப்பது, இதன் ஒரு கூடுதல் மேம்பட்ட தன்மை ஆகும். டேஸ்போர்டு மரத்தினால் முழுமை பெற்றதாக இருக்க, இதில் ஒரு புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் மற்றும் மேம்பட்ட 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்டை பெற்று, ஸ்மார்ட்போன், மிராகேஸ்ட், DLNA மற்றும் HDMI தொடர்பு, ஏர் கெஸ்ச்சர் மற்றும் வெப் பிரவ்ஸர் உள்ளிட்ட அம்சங்களை இயக்குகிறது. மற்றபடி, ஆட்டோமேட்டிக் பவர் விண்டோக்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் இலுமினேஷன் லெம்ப்கள் ஆகிய வசதிகளையும் உட்கொண்டுள்ளது.
டொயோட்டா இனோவாவின் பேனட்டிற்கு கீழே பார்க்கும் போது, அதில் ஒரு புதிய 2.4 லிட்டர் 2GD FTV 4-சிலிண்டர் இன்-லைன் என்ஜினை கொண்டு, 149PS ஆற்றலையும், 342Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்த என்ஜின் டிரிம்மிற்கு ஏற்ப, ஒரு 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு கிடைக்கிறது.
இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளரின் நிலையில், சிறப்பாக விற்பனையாகும் கார்களில் டொயோட்டா இனோவா-வும் ஒன்றாகும். எனவே இந்த புதிய பதிப்பின் அறிமுகம் நடைபெற்றால் மட்டுமே, இந்திய சந்தையில் அதற்கு ஒரு உறுதியான நிலையை அளிக்க முடியும். அடுத்து வரவுள்ள டொயோட்டா இனோவா-வின் விலை ரூ.13 லட்சம் முதல் 16 லட்சத்திற்குள் உட்பட்டதாக நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.