Mercedes-Benz GLE 300d AMG லைன் டீசல் வேரியன்ட் வெளியிடப்பட்டுள்ளது
மெர்சிடிஸ்-பென்ஸ் இப்போது GLE எஸ்யூவி-யின் மூன்று வேரியன்ட்களுக்கும் ‘AMG லைனை’ வழங்குகிறது: 300d, 450d மற்றும் 450
-
பழைய 300d வேரியன்ட்டை விட புதிய வேரியன்ட்டின் விலை ரூ.1.2 லட்சம் அதிகம்.
-
புதிய GLE 300d புதிய டிஸைன் எலமென்ட்களுடன் AMG-ஸ்பெசிபிக் பாடி ஸ்டைலை பெறுகிறது.
-
டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் லேட்டஸ்ட் மெர்சிடிஸ்-பென்ஸ்-குறிப்பிட்ட யூஸர் இன்டர்ஃபேஸ் (UI) கொடுக்கப்பட்டுள்ளது.
-
இது 269 PS மற்றும் 550 Nm அவுட்புட்டை கொடுக்கும் 48V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் கூடிய அதே 2-லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வரிசையில் 3-லிட்டர் 6-சிலிண்டர் டீசல் (367 PS/750 Nm) மற்றும் 3-லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (381 PS/500 Nm) உள்ளது.
-
இப்போது விலை ரூ.97.85 லட்சம் முதல் ரூ.1.15 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)
மெர்சிடிஸ்-பென்ஸ் GLE கார் இந்தியாவில் மெர்சிடிஸின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் முந்தைய 300d வேரியன்ட்டை நிறுத்திவிட்டு, அதன் லைன்அப்பில் புதிய 300d AMG லைன் வேரியன்ட் அறிமுக செய்துள்ளது மெர்சிடிஸ் நிறுவனம். மாற்றியமைக்கப்பட்ட வேரியன்ட் வரிசையின் விலை விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
எக்ஸ்-ஷோரூம் விலை |
புதிய GLE 300d 4MATIC |
ரூ.97.85 லட்சம் |
GLE 400 4MATIC |
ரூ.1.10 கோடி |
GLE 450d 4MATIC |
ரூ.1.15 கோடி |
நிறுத்தப்பட்ட பழைய GLE 300d 4MATIC -ன் கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை ரூ. 96.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), புதிய 300d பழைய வேரியன்ட்டை விட ரூ. 1.2 லட்சம் அதிகம் ஆகும்.
முன்னதாக AMG லைன் இட்டரேஷன் அதிக சக்தி வாய்ந்த டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. மெர்சிடிஸ்-பென்ஸ் தனது AMG லைனில் அனைத்து வேரியன்ட்களையும் வழங்குவதற்கான முடிவால் இனிமேல் GLE ரேஞ்ச் முழுவதும் ஒரே மாதிரியான ஸ்டைலிங் மற்றும் டெக்னாலஜி வசதிகளை கொண்டிருக்கும். GLE 300d AMG லைன் வேரியன்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.
வெளிப்புறம்
புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் GLE 300d வேரியன்ட் இப்போது AMG-ஸ்பெசிபைடு பாடி டிஸைனை பெறுகிறது. இது ஒரு டைமண்ட் வடிவ சிங்கிள்-ஸ்லாட் கிரில்லை கொண்டுள்ளது. அதில் சிறிய 3-ஸ்டார் எலமென்ட்கள் குரோமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஹெட்லைட்கள் புதியவை மற்றும் மற்ற GLE வேரியன்ட்களை போலவே உள்ளன. முன்பக்க பம்பர் மிகவும் ஆக்ரோஷமான லைன்கள் மற்றும் ஃபோல்டுகளுடன் முழுமையாகத் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது வரிசையிலுள்ள மற்ற AMG லைன் வேரியன்ட்களை போலவே உள்ளது.
300d இப்போது கிரே கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள 20-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. வீல் ஆர்ச்களுக்கு மேல் உள்ள பிளாக் பாடி கிளாடிங் இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் கதவுக்கு அடியில் இன்னும் கிளாடிங் உள்ளது. வெளிப்புற ரியர்-வியூ கண்ணாடிகள் (ORVMs) பிளாக் கலரில் உள்ளன.
டெயில் லைட்ஸ் -க்கு முந்தைய GLE 300d போலவே உள்ளன. ஆனால் பின்புற பம்பரில் ஏர் வென்ட்ஸ் உள்ளன. இப்போது மிகவும் ஆக்ரோஷமாக அது தெரிகிறது. இருப்பினும் முன்பு இருந்த சில்வர் ஸ்கிட் பிளேட் இப்போது தவிர்க்கப்பட்டுள்ளது. இது தவிர எஸ்யூவிக்கு அதே டூயல் டிப் எக்சாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய GLE 300d ஆனது முன்பக்கத்தில் பெரிய டிஸ்க் பிரேக்குகளையும் கொண்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Rs 1.10 கோடி விலையில் இந்தியாவில் மெர்சிடிஸின் GLC 43 Coupe, CLE கேப்ரியோலெட் கார்கள் வெளியாகியுள்ளன
இன்ட்டீரியர்ஸ், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
GLE எஸ்யூவி -யின் உட்புறம் முன்பு போலவே உள்ளது. இருப்பினும் மெர்சிடிஸ்-பென்ஸ் பயனர் அனுபவம்) 12.3-இன்ச் டச் ஸ்கிரீனுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 12.3-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், மெமரி ஃபங்ஷன் (முன் இருக்கைகள்), ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 590-வாட் ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 13- வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் மற்றும் பின்புற சீட்களை கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டிராக்ஷன் கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பவர்டிரெய்ன்
மெர்சிடிஸ்-பென்ஸ் GLE லைன்அப் 3 இன்ஜின் செட்டப்களில் கிடைக்கிறது. விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
புதிய GLE 300d 4MATIC |
GLE 450d 4MATIC |
GLE 450 4MATIC |
இன்ஜின் |
48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 2-லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் |
48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 3-லிட்டர் 6-சிலிண்டர் டீசல் இன்ஜின் |
48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 3-லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
269 PS |
367 PS |
381 PS |
டார்க் |
550 Nm |
750 Nm |
500 Nm |
புதிய வேரியன்ட்டின் அவுட்புட் விவரங்கள் பழைய வேரியன்ட்டிலிருந்து மாறாமல் உள்ளன. அனைத்து வேரியன்ட்களும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறுகின்றன. இது அனைத்து வீல்களுக்கு பவரை கொடுக்கிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மாற்றிமைக்கப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் GLE லைன்அப்பின் விலை ரூ. 97.85 லட்சத்தில் தொடங்கி ரூ. 1.15 கோடி வரை இருக்கும் (விலை விவரங்கள் அனைத்து எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இந்தியாவில் இந்த கார் ஆனது BMW X5, ஆடி Q7, மற்றும் வோல்வோ XC90 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: GLE டீசல்