அதிக சக்திவாய்ந்த டாடா சஃபாரி ஸ்டார்ம், ரூ.13.52 லட்சத்தில் அறிமுகம்
sumit ஆல் நவ 26, 2015 12:59 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஒருவழியாக, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சஃபாரி ஸ்டார்மின் சக்திவாய்ந்த பதிப்பை, ரூ.13.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயத்தில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இயந்திரவியலில், இந்த பதிப்பு வாரிகர் 400 2.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் மூலம் ஆற்றலைப் பெற்று, முந்தைய பதிப்புடன் ஒப்பிட்டால் 25% கூடுதல் முடுக்குவிசையை (அதிகபட்சமாக 400 Nm) அளிக்க வல்லது. மேலும் இதில் ஒரு மேம்பட்ட கியர்பாக்ஸை பெற்று, ஒரு அதிகபட்ச ஆற்றலான 156 PS-யை வெளியிடுகிறது. அதே நேரத்தில் இந்த நவீன மேம்பட்ட பதிப்பு, VX டிரிம் (4×2 கான்ஃபிகரேஷனில்) மட்டுமே கிடைக்கிறது. வரும் நாட்களில் இதே போன்ற 4x4 வகை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனத்தின் செயல்திறனை தீர்மானிக்க, புள்ளிவிபரங்களே சிறந்த அளவுகோலாக செயல்படும் என்ற நிலையில், இந்த புதிய சஃபாரி ஸ்டார்ம் நிச்சயம் கவர்ச்சிகரமான வாகனமாக விளங்கும். இந்த SUV வெறும் 12.8 வினாடிகளில் 0-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டி சேரும் திறனைக் கொண்டு, ஸ்டார்மின் முந்தைய பதிப்பை (வாரிகர் 320 என்ஜின்) விட, ஒரு முழு வினாடி குறைவாகவே எடுத்துக் கொள்கிறது. ஒரு சிறிய அளவிலான ஒப்பீட்டில் (மணிக்கு 0-60 கி.மீ.) கூட, வாரிகர் 320 என்ஜினை விட இந்த மேம்பட்ட பதிப்பு ஏறத்தாழ 0.5 வினாடிகள் வேகமாக செயல்படுவதை காணலாம்.
இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இவ்வாகனத்தின் ஒட்டுமொத்த தன்மைகளையும் மேம்படுத்தும் பணியில் டாடா நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்ட நிலையில், தற்போது ஆற்றல் அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ள ஸ்டார்ம், இதற்கான விலையை காட்டிலும் கூடுதல் மதிப்பு கொண்டதாக மாறியுள்ளது. புதிய மாடலின் விலை ரூ.40,000 (ஏறத்தாழ) அதிகமாக இருந்தாலும், ஒரு அதிக சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் திறன்கொண்ட கியர்பாக்ஸ் ஆகியவை உட்படும் ஒட்டுமொத்த பேக்கேஜ் மூலம், நுகர்வோருக்கு லாபகரமான தயாரிப்பாக உள்ளது.
இதையும் படியுங்கள்