சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிடும் MG மோட்டார்; 2024 ஆம் ஆண்டில் 2 புதிய கார்கள் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

published on மார்ச் 20, 2024 04:47 pm by rohit

கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக JSW MG மோட்டார் இந்தியா இந்தியாவில் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

  • ஜேஎஸ்டபிள்யூ (JSW) குழுமம் மற்றும் எம்ஜி (MG) மோட்டர் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இப்போது கூட்டு சேர்ந்துள்ளன. இந்த கூட்டமைப்பு இப்போது ‘ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட்' (JSW MG Motor India Private Limited) என்று அழைக்கப்படும்.

  • தற்போதுள்ள 1 லட்சம்+ யூனிட்களில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் வரை உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

  • செப்டம்பர் 2024 முதல் ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு புதிய காரை அறிமுகப்படுத்த இந்த கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

  • பிளக்-இன் ஹைபிரிட் மற்றும் பியூர் EV -கள் உள்ளிட்ட எலக்ட்ரிக் மாடல்களை கொண்டுவருவதில் கவனம் செலுத்தப்படும்.

  • இந்த காலண்டர் ஆண்டில் இரண்டு புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை MG உறுதிப்படுத்தியது இதில் MPV -யும் இருக்கலாம்.

  • MG சைபர்ஸ்டார் கான்செப்ட் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது; அதன் வெளியீடு பற்றிய விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எம்ஜி மோட்டார் ஆனது 2023 ஆண்டில் பிற்பகுதியில் இந்தியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்த முடிவு செய்து அதற்காக JSW குழுமத்துடன் இணைந்தது. இதன் மூலமாக ஒரு கூட்டு முயற்சியாக (JV) தாய் நிறுவனமான SAIC உருவாக்கப்பட்டது. இப்போது மார்ச் 2024 -ல் JV அதிகாரப்பூர்வமாக 'JSW MG மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய அடையாளத்துடன் MG தனது எதிர்கால இந்தியத் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கான EV -கள் மட்டுமின்றி பிளக்-இன் ஹைபிரிட் கார்களும் அடங்கும்.

ஏராளமான எம்ஜி கார்கள் வெளியாகவுள்ளன

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 3-6 மாதங்களுக்கு ஒரு புதிய காரை அறிமுகப்படுத்த எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த காலண்டர் ஆண்டிலேயே இரண்டு புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஆனால் அவற்றின் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. MG 2.0 திட்டங்களின்படி இந்த புதிய கார்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வேறு சில உலக சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

எம்ஜி சைபர்ஸ்டர் காரின் இந்திய அறிமுகம்

இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக MG சைபர்ஸ்டர் கான்செப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. 2-சீட்டர் ஆல்-எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் வகை காரான இது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் முதன் முதலில் வெளியிடப்பட்டது. ஒரு பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளராக MG -யின் அடையாளமாக அதன் சிறிய மாற்றத்தக்க ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளன. இப்போது சைபர்ஸ்டர் இந்த பிராண்டின் எதிர்கால அடையாளமாக இருக்கும்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிளக்-இன் ஹைபிரிட்களை கொண்டு வர முயற்சி செய்யப்படும்

JSW குழுமத்துடனான கூட்டு முயற்சியானது MG மோட்டார் இந்தியா தனது வரவிருக்கும் மாடல்களை விரிவாக உள்ளூர்மயமாக்க முயற்சி செய்யப்படும். இது அவற்றின் விலையை குறைக்க உதவும். அதனுடன் கூட்டமைப்பு கிளீன் மொபிலிட்டி எனப்படும் மாசு குறைவான கார்களை உருவாக்க அதிக கவனம் செலுத்துகிறது. ஆகவே இந்தியாவில் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களை (PHEVs) அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பத்திற்கு அரசாங்க சலுகைகள் எதுவும் இதுவரை இல்லை. என்றாலும் கூட அதற்குப் பதிலாக பியூர் EV களைத் தவிர்த்து EV சந்தை முதிர்ச்சியடையும் போது PHEV தொழில்நுட்பத்துக்கு பெரும் தேவை இருக்கலாம். குறிப்பாக ஒரு விரிவான சார்ஜிங் உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை. இந்த கூட்டு முயற்சியானது குஜராத்தில் உள்ள எம்ஜி -யின் ஹலோல் ஆலையில் உற்பத்தித் திறனை தற்போதைய 1 லட்சம் கார்களில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் வரை அதிகரிக்க வழிவகுக்கும்.

மேலும் படிக்க: இந்தியாவில் வேகமெடுக்கும் Tesla-வின் பயணம்: புதிய EV கொள்கையானது விரைவான அறிமுகம் மற்றும் குறைந்த இறக்குமதி கட்டணங்களுக்கு உதவுகின்றது

JSW MG கூட்டு முயற்சியின் சிறப்பம்சங்கள்

JSW இப்போது இந்த கூட்டு முயற்சியில் 35 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. அதே நேரத்தில் SAIC மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளை சப்போர்ட் செய்கின்றது. இந்திய வாகனச் சந்தைக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டு உள்ளூர் ஆதாரங்கள் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உற்பத்தி திறனை விரிவுபடுத்துதல் மற்றும் கிரீன் மொபிலிட்டியை மையமாகக் கொண்டு புதிய வாகனங்களை உருவாக்குதல் மற்றும் அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

SAIC மற்றும் JSW ஆகியவை கனெக்டட் EV-கள் மற்றும் ICE வாகனங்களை தயாரிப்பதற்காக இந்தியாவில் ஸ்மார்ட் மற்றும் நிலையான வாகன சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் நெருக்கமாக பணியாற்ற திட்டமிட்டுள்ளன. JV என்பது புதிய மாடல்களுக்கு SAIC இன் வாகன நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கும் B2B மற்றும் B2C துறைகளில் JSW குழுமத்தின் பங்களிப்பின் மூலமாக வலுவான சப்ளை செயினை உருவாக்கவும் பயன்படும்.

சைபர்ஸ்டர் கான்செப்ட் பற்றிய விவரங்கள்

2021 ஆண்டில் சைபர்ஸ்டர் ரோட்ஸ்டர்-போட்டி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் டெஸ்லா -வுக்கு போட்டியாக கான்செப்ட் வடிவத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை MG 2024 ஆம் ஆண்டிலேயே ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மற்றும் ஏற்கனவே இங்கிலாந்தில் நடக்கும் நிகழ்வுகளில் காரை காட்சிப்படுத்தியிருந்தது.

சைபர்ஸ்டரில் 77 kWh பேட்டரி பேக் மற்றும் இரண்டு மின்சார மோட்டார்கள் (ஒவ்வொரு அச்சிலும் ஒன்று) ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப்பிற்காக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. MG ஆனது சைபர்ஸ்டரின் சிங்கிள்-மோட்டார் ரியர்-வீல்-டிரைவ் (RWD) பதிப்பில் சிறிய பேட்டரி பேக்குடன் மிகவும் அணுகக்கூடிய விருப்பமாக செயல்படுவதற்கான திட்டங்களையும் கொண்டுள்ளது. உற்பத்திக்கு-தயாரான மாடலின் செயல்திறன் மற்றும் ரேஞ்ச் பற்றிய சரியான விவரங்கள் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

MG -யின் உலகளாவிய வரிசையில் எந்த EV அல்லது பிளக்-இன் ஹைப்ரிட் மாடலை நீங்கள் இங்கே பார்க்க விரும்புகிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.

r
வெளியிட்டவர்

rohit

  • 22 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

S
sagarwal
Mar 23, 2024, 4:50:54 PM

Exciting news for more cartopnews

Read Full News

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.74 - 19.99 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.60.95 - 65.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை