மெர்சிடீஸ் பென்ஸ் GLE 450 AMG கூபே கார்களை இன்று அறிமுகம் செய்கிறது.

மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020 க்கு published on ஜனவரி 12, 2016 01:49 pm by abhishek

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

மெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனம்  2015 ஆம் ஆண்டில் ஏராளமான  புதிய மாடல்களை  அறிமுகம் செய்தது.  அந்த வேகம் இன்னும் குறைந்ததாக தெரியவல்லை . 2016 ஆம் ஆண்டில் தங்களது முதல் அறிமுகமாக GLE 450 AMG  கூபே  கார்களை இன்று அறிமுகப்படுத்துகிறது.   இப்பெயர் நமக்கு உணர்த்துவதைப் போல GLE கூபே  கார்கள் நல்ல ஸ்போர்டியான தோற்றம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  நல்ல செயல்திறன் மட்டுமல்ல , நேர்த்தியான தோற்றத்தையும் இந்த கார்கள் பெற்றுள்ளது. 

 இந்த GLE  கூபே  கார்கள் , கூபே ஸ்டைலில் வடிவமைக்கபட்ட ஒரே SUV வாகனமான BMW 6 கார்களுடன் போட்டியிடும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில், 450 AMG மற்றும் மேடர் 63 S AMG என இரண்டு ட்ரிம்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை நாம் முதலில்  சொன்ன 450 AMG ட்ரிம் மட்டும் தான் வெளியிடப்பட உள்ளது. 326 bhp சக்தி மற்றும் அசாதரணமான  520 Nm அளவுக்கு டார்கை வெளியிடும் ஆற்றல் மிக்க என்ஜின் இந்த கூபே கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. இஞ்சின்  9 - வேக கியர் பாக்ஸ் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆகவே நிச்சயம் இந்த கார்கள் தனித்தன்மை கொண்டவை என்பதில் ஐயமில்லை. அதே சமயம் , நீங்கள் X6 வாகனங்களை பிடிக்கிறது என்று சொல்பவரானால் , இந்த GLE கூபே கார்களையும் பிடித்திருக்கிறது என்றே சொல்வீர்கள். கடந்த வருடம் அறிமுகமான GLE SUV யின் ஒரு கூபே வெர்ஷனாக இந்த கார்கள் இருந்தாலும் , இந்த கார்களின் பெரிய எடுப்பான க்ரில் அமைப்பு ,  அழுத்தமான வளைவுகள் மற்றும் பாய்வதைப் போன்ற தோற்றத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் கூரை (ரூப்) பகுதி மற்றும் மிகப்பெரிய 22 -அங்குல அல்லாய் சக்கரங்கள் போன்ற அம்சங்கள் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்க்கும் என்று உறுதியாக சொல்லலாம். 

உட்புற வடிவமைப்பை பொறுத்தவரை ,  மெர்சிடீஸ் -பென்ஸ் நிறுவனத்தின் ஒரு ப்ரீமியம் SUV வாகனத்தில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாமோ அவை அனைத்தும் இந்த GLE கூபே கார்களில் காணப்படுகின்றன. சொகுசாக பார்த்து பார்த்து ரசனையோடு வடிவமைக்கப்பட்டுள்ள  கேபின் மற்றும் உயர்ரக நப்பா தோலினால் போர்த்தப்பட்டுள்ள இருக்கைகள் போன்றவை  இந்த கூபே கார்களின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 

முதலில் CBU வழியில்  இறக்குமதி செய்யப்பட உள்ள இந்த கார்கள் பின்னர் மெதுவாக CKD  யூனிட்டாக இறக்குமதி செய்யப்படும். ரூ. 75 லட்சம் முதல் ஒரு கோடி வரை இந்த கார்களின் விலை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சுவாரசியமான செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் !

மேலும் வாசிக்க 

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா: நடப்பு நிதி ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020

Read Full News

trendingஇவிடே எஸ்யூவி

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience