மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா: நடப்பு நிதி ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
published on ஜூலை 28, 2015 11:59 am by அபிஜித்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த 2015ம் ஆண்டை, மெர்சிடிஸ் பென்ஸுக்கு மிகவும் சிறந்த ஆண்டாகக் குறிப்பிடலாம், ஏனெனில், இதற்கு முன்பெப்போதுமில்லாத சிறப்பான இரண்டாவது காலாண்டு மற்றும் அரை ஆண்டு விற்பனையைப் பதிவு செய்து உள்ளது. ஜெர்மன் வர்த்தக முத்திரை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ், சொகுசு கார் பிரிவில் மிகுந்த வேகமான வளர்ச்சிப்பாதையில் கடந்த மூன்று வருடமாக தங்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது. இந்த செய்தியை நம்பவில்லையென்றாலும், மெர்சிடிஸின் இலக்கங்களைப் பார்க்கும் போது நிச்சயமாக இந்த அபரித வளர்ச்சியை மெய்யெனக்கொள்வோம்.
தற்பொழுதைய 2015ல் ஜனவரி – ஜூன் மாத விற்பனையைப் கவனிக்கும்போது, மெர்சிடிஸ் பென்ஸ் 41 சதவிகித வளர்ச்சியில் 6659 கார்களை விற்று சாதனை புரிந்துள்ளது. அதுவே, சென்ற 2014ல் ஏப்ரல் – ஜூன் காலத்தில் 2163 கார்கள் மாற்றுமே விற்பனை செய்துள்ளது. இந்த இரண்டு ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது, இந்த 2015 வருடம் 43 சதவிகிதம் வளர்ச்சியைக் காட்டுகிறது. அதாவது, சென்ற வருடத்தை விட, இந்த வருடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் 3093 கார்கள் அதிகமாக விற்றுள்ளது.
இவ்வருடத்தின் வளமையான விற்பனையின் தொகுப்பைப் பார்க்கும் போது, மெர்சிடிஸ் பென்ஸின் C மற்றும் E பிரிவு கார்களே மிகவும் அதிகமாக விற்று முன்னணியில் இருக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸின் SUV மாடல்களான M மற்றும் GL வகை கார்களின் விற்பனையும் கணிசமான அளவில் உயர்ந்து உள்ளன. மேலும், விற்பனை இலக்கங்களை ஒப்பிடும்போது, மெர்சிடிஸ் பென்ஸின் CLA மற்றும் GLA ரக வாகனங்கள் படிப்படியாக பிரபலமாகி வருகின்றன. இத்தகைய வளர்ச்சி உறுதியான வாடிக்கையாளர் ஆதாரத்தை மெர்சிடிஸ் பென்ஸுக்குப் ஈட்டித் தரும் என்று நம்பப்படுகிறது. இது மட்டுமல்லாமல், AMG வகை அருமையான செயல்திறன் கொண்ட கார்களும் மெர்சிடிஸ் பென்ஸின் விற்பனை வெற்றியில் ஒரு அங்கம் வகிக்கின்றன.
எபர்கர்ட் கேர்ன், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மெர்சிடிஸ் பென்ஸ், கூறுகையில், “2015 வருடத்தின் முதல் ஆறு மாதத்தை எடுத்துக்கொண்டால், எங்களது கார் விற்பனை எண்ணிக்கையானது, 2012-ன் முழு வருடத்தின் விற்பனையாகும். முதல் காலாண்டில், ஒரு வலுவான விற்பனை வளர்ச்சி வேகத்தில், தெளிவான முன்னணியில் இருக்கும்படி வாகன சந்தையை எங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டோம். இந்த நட்சத்திர வளர்ச்சிக் கதையை தக்க வைத்துக் கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். மேலும், இந்த விற்பனை உயர்வு, எங்கள் நீண்ட கால நோக்கமான - இந்தியாவில் நீடித்த லாபகரமான வளர்ச்சியைக் கொள்ளவேண்டும் என்ற இலக்கை நோக்கிச் சரியாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்கிறது,” என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த வளர்ச்சியானது, வாடிக்கையாளர்களை மையமாக வைத்து செயல்படும் எங்களது அணுகுமுறையை மீண்டும் பிரதிபலிக்கிறது. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் சொகுசு கார் சந்தையில் மிகச் சிறந்த பிராண்டாகவும், மற்ற பிரபலமான கார்களுடன் போட்டியிடத் தகுந்ததாகவும் இருப்பதை, இந்த விற்பனைவெற்றி வரையறுத்துக் கூறுகிறது. எங்கள் வணிகச் சின்னமானது (பிராண்ட்), வடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய மாடல்களை வழங்குவதிலும்; மிகப்பெரிய சொகுசு கார் உற்பத்தி வசதிகளுடனும்; விரிவான துல்லியாயமான பழுது பார்க்கும் சேவையினாலும்; மற்றும் எங்களது வலுவான விரிவான கூட்டமைப்பால் இந்திய வாகனச் சந்தையில் ஏற்படுத்தும் சுவாடானது, எங்கள் நிறுவனம் தனித்தன்மையுடன் இருக்க உதவுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் வகைகளும், மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT காரும், எஞ்சியுள்ள இரண்டு காலாண்டுகளிலும் எங்களது இன்றியமையாத ஆணித்தரமான வளர்ச்சியை உறுதி செய்கின்றன,” என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் இறுதி 6 மாதங்களில், AMG GT மாடலைத்தவிர மேலும் பற்பல அற்புதமான அறிமுகங்களையும், பரபரப்பான செய்திகளையும் நாம் மெர்சிடிஸிடமிருந்து எதிர்பார்க்கலாம்.