• English
  • Login / Register

Mercedes-Benz GLA ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது… விலை ரூ 50.50 லட்சத்தில் இருந்து தொடக்கம்

published on ஜனவரி 31, 2024 04:07 pm by shreyash for மெர்சிடீஸ் ஜிஎல்ஏ

  • 67 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2024 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA காரில் வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் குறைவானவை மற்றும் இந்த மைல்டு ஃபேஸ்லிஃப்ட்டுடன் முக்கியமான சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Mercedes-Benz GLA 2024

  • 2024 GLA மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: 200, 220d 4MATIC மற்றும் 220d 4MATIC AMG லைன்.

  • புதிய GLA ஆனது புதிய ஹெட்லைட் செட்டப், புதிய வடிவிலான முன்பக்க கிரில் மற்றும் புதிய பம்பர் ஆகியவற்றைப் பெறுகிறது.

  • டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவரின் டிஸ்ப்ளே) மற்றும் டச் கன்ட்ரோல்களுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் வீல்களை கொண்டுள்ளது.

  • இது இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமராவை பெறுகிறது.

  • இப்போதுள்ள GLA -யிலிருந்து அதே 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை மெர்சிடிஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் 2023 -ம் ஆண்டின் மத்தியில் உலகளவில் அறிமுகமானது, இப்போது 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 50.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா). 2024 GLA காரில் குறைவாகவே வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வசதியை மேம்படுத்த சில முக்கிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட GLA -க்கான விலை விவரங்களை பார்ப்போம்.

விலை

GLA 200

ரூ.50.50 லட்சம்

GLA 220d 4MATIC

ரூ.54.75 லட்சம்

GLA 220d 4MATIC AMG லைன்

ரூ.56.90 லட்சம்

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான்-இந்தியா) -வுக்கான விலை ஆகும்

நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள்

2024 Mercedes-Benz GLA

மெர்சிடிஸ்-பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்டில் வடிவமைப்பு மாற்றங்கள் குறைவானவை, அதன் தோற்றம் முந்தையைதை போலவே உள்ளது. LED DRL -களுடன் புதுப்பிக்கப்பட்ட LED ஹெட்லைட்கள், வெர்டிகல் லைன்களுடன் புதிய கிரில் மற்றும் புதிய பம்பர் வடிவமைப்பு ஆகியவற்றுடன் முன்பக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன. எஸ்யூவி -யின் AMG லைன் வேரியன்ட், பின் குரோம் இன்செர்ட்களுடன் கூடிய தனித்துவமான முன் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்கவும்: ரூ.67.90 லட்சம் விலையில் அறிமுகமானது ஃபேஸ்லிப்டட் Land Rover Range Rover Evoque கார்

2024 Mercedes-Benz GLA Rear

பக்கவாட்டில், GLA ஃபேஸ்லிஃப்ட்டின் AMG லைன் வேரியன்ட் 19-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது, மேலும் வீல் -களை சுற்றியுள்ள கொடுக்கப்பட்டுள்ள கிளாடிங் இப்போது பாடி கலருடன் பொருந்துகிறது. புதுப்பிக்கப்பட்ட LED டெயில்லேம்ப்களை தவிர பின்புற தோற்ற்றம் மாறாமல் உள்ளது. மெர்சிடிஸ் புதிய ஸ்பெக்ட்ரல் ப்ளூ எக்ஸ்ட்டீரியர் ஷேடை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட GLA உடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

கேபினில் உள்ள அப்டேட்கள்

2024 Mercedes-Benz GLA Dashboard

2024 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்ஜ் மற்றும் ஆல் பிளாக் இன்ட்டீரியர் ஆப்ஷன்களுடன் வருகிறது. டாஷ்போர்டு அமைப்பு முன்பு போலவே உள்ளது, ஆனால் இது புதிய வடிவத்துடன் சென்டர் கன்சோலை பெறுகிறது, இது கூடுதல் ஸ்டோரேஜை வழங்குகிறது. GLA ஃபேஸ்லிஃப்ட்டின் வழக்கமான வேரியன்ட், பயணிகள் பக்க டேஷ்போர்டில் ஒளிரும் வகையிலான ஸ்டார் பேட்டர்ன் டிரிம் உள்ளது, அதே சமயம் AMG லைன் வேரியன்ட் ஒரு தனித்துவமான கார்பன் ஸ்ட்ரக்சர் டிரிம்மை  கொண்டுள்ளது, இது ஆம்பியன்ட் லைட்டிங் ஸ்ட்ரிப் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, AMG லைன் வேரியன்ட் சமீபத்திய AMG ஸ்டீயரிங் டச் கன்ட்ரோல்களுடன் வருகிறது, இது நாப்பா லெதரால் கவர் செய்யப்பட்டுள்ளது. 2024 GLA இரண்டு அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களை கொடுக்கின்றது: மாக்கியாட்டோ பெய்ஜ் மற்றும் ஆர்டிக்கோ பிளாக்.

இதையும் பார்க்கவும்: 2024 Mercedes-AMG GLE 53 Coupe அறிமுகப்படுத்தப்பட்டது... விலை ரூ 1.85 கோடி -யாக நிர்ணயம்

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

2024 Mercedes-Benz GLA Infotainment

மெர்சிடிஸ் GLA ஃபேஸ்லிஃப்ட்டில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு ஒன்று மற்றும் டிரைவருக்கு ஒன்று) பொருத்தப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் MBUX - NTG7 இயங்குதளத்தில் இயங்கும் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது . இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. 2024 GLA காரில் மெமரி ஃபங்ஷனுடன் கூடிய மின்சாரம் அட்ஜஸ்ட்டபிள் முன்பக்க பயணிகள் இருக்கைகள், 64-கலர்டு ஆம்பியன்ட் லைட்ஸ், ஜெஸ்டர் கன்ட்ரோல்டு பவர்டு டெயில்கேட் மற்றும் டூ-பார்ட் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆக்டிவ் பிரேக் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

பவர்டிரெய்ன் விவரங்கள்

GLA ஃபேஸ்லிஃப்ட் அதன் முன்-ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் வழங்கப்படும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, மேலும் அவற்றின் விவரங்கள் அட்டவணையில் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

விவரங்கள்

GLA 200

GLA 220d 4MATIC

இன்ஜின்

1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல்

2 லிட்டர் டீசல்

டிரைவ்டிரெய்ன்

2WD

AWD

பவர்

163 PS

190 PS

டார்க்

270 Nm

400 Nm

டிரான்ஸ்மிஷன்

7-ஸ்பீடு DCT

8-ஸ்பீடு DCT

ஆக்ஸலரேஷன் (0-100 கிமீ/மணி)

8.9 வினாடிகள்

7.5 வினாடிகள்

கிளைம்டு மைலேஜ்

17.4 கிமீ/லி

18.9 கிமீ/லி

ஆஃப் ரோடு தொழில்நுட்பங்களின் தொகுப்பு

2024 Mercedes-Benz GLA

மெர்சிடிஸ்-Benz GLA ஃபேஸ்லிஃப்ட்டின் 220d AMG லைன் டீசல் வேரியன்ட் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னை கொண்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் திரையில் காரின் சாய்வு மற்றும் சாய்வு கோணம் போன்ற விவரங்களை கொடுக்கும் ஆஃப்-ரோட் இன்ஜினியரிங் தொகுப்பையும் மெர்சிடிஸ் வழங்குகிறது. கூடுதலாக, ஆஃப்-ரோடு பேக்கேஜ் டவுன்ஹில் ஸ்பீடு ரெகுலேஷன் (டிஎஸ்ஆர்) வசதியை ஒருங்கிணைக்கிறது, இது டவுன்ஹில் கன்ட்ரோல் போலவே செயல்படுகிறது. இருப்பினும், இந்த அமைப்பு 2 கிமீ/மணி முதல் 18 கிமீ/மணி வரையிலான ஸ்பீடு ரேஞ்சை மேனுவலாக தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. இந்த அமைப்பு இறங்கும் போது முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட வேகத்தின் அடிப்படையில் பிரேக்குகளை பயன்படுத்துகிறது.

போட்டியாளர்கள்

2024 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA கார் ஆடி Q3 மற்றும் BMW X1 ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. மேலும் இது மினி கூப்பர் கன்ட்ரிமேன் காருக்கு விலை குறைவான மாற்றாகவும் உள்ளது.

was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz ஜிஎல்ஏ

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience