Mercedes-Benz EQE எஸ்யூவி செப்டம்பர் 15 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது
published on ஆகஸ்ட் 28, 2023 06:38 pm by ansh for மெர்சிடீஸ் eqe எஸ்யூவி
- 87 Views
- ஒரு கருத்தை எழுதுக
சர்வதேச சந்தையில், சொகுசு மின்சார எஸ்யூவி ஆனது 450கிமீ வரையிலான ரேஞ்ச் உடன் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் டிரெய்ன்களையும் கொண்டுள்ளது.
-
உலகளாவிய சந்தையில் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: 350+, 350 4MATIC மற்றும் 500 4MATIC.
-
90.6kWh பேட்டரி பேக் மற்றும் மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெற்றுள்ளது.
-
கிளீன் டேஷ்போர்டு வடிவமைப்பிற்காக ஆப்ஷனலான 56-இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீனுடன் வருகிறது.
-
ஏரோடைனமிக் செயல்திறன் மற்றும் வரம்பிற்கு வழக்கமான மெர்சிடிஸ் எஸ்யூவிகளை விட நேர்த்தியான வடிவமைப்பை உருவாக்குகிறது.
-
விலை ரூ.1 கோடி -க்கும் அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (எக்ஸ்-ஷோரூம்).
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி யை இந்தியாவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஜெர்மன் கார் பிராண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி எலக்ட்ரிக் சொகுசு எஸ்யூவியை அறிமுகப்படுத்தவுள்ளது, விரைவில் அதை வெளியிட இருக்கிறது. EQE எஸ்யூவி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
வடிவமைப்பு
பாரம்பரியமான மெர்சிடிஸ் பென்ஸ்-EQ வடிவமைப்பை இது பெறுகிறது, பெரிய மெர்சிடிஸ் த்ரீ-பாயிண்ட் நட்சத்திரத்துடன் கூடிய பெரிய மூடிய கிரில்லைக் கொண்டுள்ளது. இந்த கிரில் பெரிய முகப்பு விளக்குகளுடன் ஒன்றிணைந்து மேலே நேர்த்தியான எல்இடி டேடைம் விளக்குகளுடன் (DRL) இணைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் அலங்காரத்திற்காக குளோஸ்ட்-ஆஃப் ஏர் டேம்ஸ் மற்றும் ஸ்லிம் பம்பர் உள்ளது.
பக்கவாட்டில், ஸ்டைலான அலாய்களை பெறுகிறது, இதன் அளவு 19 முதல் 21 இன்ச் வரை இருக்கலாம். இது ஒரு மென்மையான, ஃபுளோயிங் ஃபுரொபைல், குறைவான கிரீஸ் மற்றும் ஸ்லோப்பிங் ரூஃப்லைன் கூரையுடன் உள்ளது. அந்த கூடுதல் எஸ்யூவி கவர்ச்சியுடன் காட்சியளிக்க, EQE வீல் ஆர்ச்கள் மற்றும் கதவுகளில் கிளாடிங்கை பெறுகிறது.
இதன் பின்புற ஃபுரொபைல் வளைவான தோற்றத்தை கொண்டுள்ளது. சாய்வான ரூஃப்லைன் பின்புற ஸ்பாய்லருடன் இணைகிறது, அதற்குக் கீழே நீங்கள் எளிதாகக் பார்க்கக்கூடியது பெரிய இணைக்கப்பட்ட பின்புற விளக்கு அமைப்பாகும். பக்கவாட்டில் உள்ள ஏர் டேமை தவிர, பின்புற ஃபுரொபைலில் கூர்மையான வெட்டுக்கள் எதுவும் இல்லை, இங்கே நீங்கள் ஒரு பெரிய பின்புற பம்பரை பெறுவீர்கள்.
கேபின்
மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி சிறிய மாற்றங்களுடன் EQS செடானைப் போன்ற ஒரு கேபினை பெறுகிறது. பிரகாசமான தோற்றமுடைய இந்த கேபினில், நீங்கள் முதலில் கண்டறிவது மூன்று டிஸ்பிளேக்களை கொண்ட மிகப்பெரிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் ஆகும். இந்த டிஸ்பிளே ஆனது சென்டர் கன்சோலில் ஒன்றிணைகிறது, அங்கு மரத்தாலான பூச்சு EQS ஐ விட வித்தியாசமான வடிவத்தை பெறுகிறது.
கேபினை சுற்றி ஆம்பியன்ட் லைட்டுகளுடன் கூடிய பிரெளவுன் நிற மெத்தை இடம்பெற்றுள்ளது. EQE இன் ஒட்டுமொத்த கேபின் ஒரு செழுமையான மற்றும் மினிமலிஸ்ட்டிக்கான வடிவமைப்பை கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன்
விவரக்குறிப்புகள் |
EQE 350+ |
EQE 350 4MATIC |
EQE 500 4MATIC |
பேட்டரி |
90.6kWh |
89kWh |
90.6kWh |
டிரைவ்டிரைன் |
RWD |
AWD |
AWD |
ஆற்றல் |
292PS |
292PS |
408PS |
டார்க் |
565Nm |
765Nm |
858Nm |
ரேஞ்ச் (கிளைம்டு) |
450 கிமீ |
407கிமீ |
433கிமீ |
உலகளவில், EQE மூன்று வேரியன்ட்களில் வருகிறது, இவற்றின் பவர்டிரெய்ன் விவரங்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது 450 கிமீ வரையிலான ரேஞ்சை கொடுக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறுகிறது மற்றும் இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது: 240V வால் பாக்ஸ் சார்ஜர், 9.5 மணி நேரத்தில் 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடியது. மேலும் 32 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய 170kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் இதில் இருக்கிறது.
மேலும் படிக்க: புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் V-கிளாஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
இந்தியா-ஸ்பெக் மாடல் 90.6kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் மட்டுமே வரக்கூடும், அதன் விவரங்கள் செப்டம்பர் 15 அன்று வெளியிடப்படும்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
இது ஆப்ஷனலான 56-இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீனை பெறுகிறது, இதில் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, சென்டர் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் முன்பக்க பயணிகள் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். EQE ஆனது 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பவர்டு சீட்கள், பனோரமிக் சன்ரூஃப், டால்பி அட்மோஸ் கொண்ட பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஏர் ஃபியூரிபையர் போன்ற மற்ற வசதிகளையும் வழங்குகிறது.
மேலும் படிக்க: 2023 Mercedes-Benz GLC: அறிமுகம் - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
பாதுகாப்பிற்காக, இது பல ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெறுகிறது. வீடியோ கேமராவை பயன்படுத்தி முன்னால் உள்ள பாதையின் நிலைகளைக் கண்டறியும் லேன் கீப் அசிஸ்ட் அமைப்பு, அட்டானம்ஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற டிரைவர் அசிஸ்ட் அம்சங்களையும் நீங்கள் பெறுவீர்கள்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மெர்சிடிஸ்-மென்ஸ் EQE எஸ்யூவியின் விலை ரூ. 1 கோடிக்கும் அதிகமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அறிமுகப்படுத்தப்பட்டால், இது ஆடி Q8 e-Tron, பிஎம்டபிள்யூ iX, and ஜாகுவார் I-Pace.ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.