• English
  • Login / Register

மெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனத்தின் C63  கூபே DTM ரேஸ் கார் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது.

published on செப் 05, 2015 05:42 pm by அபிஜித்

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்:  மெர்சிடீஸ் நிறுவனம் தன்னுடைய DTM (டச் டூரன்வேகன் மாஸ்டர்ஸ்)  பந்தய வரிசை கார்களை காட்சிக்கு வெளியிட்டது. இது மிக அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்பட்ட C63   கூபே கார்களே ஆகும். C63  கூபே கார்களின் முதல் எடிஷன் உடன் இணைந்தே  இந்த ரேஸ் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 

 நாம் முன்பு சொன்னது போல் C63   கூபே கார்கள் தான் வேகம் கூட்டப்பட்டு எடை குறைக்கப்பட்டு தோற்றமும் வெகுவாக மாற்றப்பட்டு அறிமுகமாகின்றன.  காரின் முன்பகுதி சற்று அகலமாக்கப்பட்டு முன்புறத்தில் பந்தய கார்களுக்கான சக்கரங்களை பொருத்த தேவையான பெரிய முன்புற ஸ்ப்லிட்டர்களும், நன்கு அழுத்தமான பென்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன.  முன்புறத்தில்  300 /680R18  என்ற அளவிலான சக்கரங்களும், பின்புறம் 320 /710R18   என்ற அளவிலான சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நிறைய ஸ்பாய்லர்களும், ஸ்ப்லிட்டர்களும் காரின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் காற்றின் வேகத்தை சரியாக பயன்படுத்தி செயலாற்றலை கூட்டுவதற்காக  பொருத்தப்பட்டுள்ளன.

இந்த DTM  வாகனம் மொத்தமே 1120 கிலோ எடை தான் கொண்டுள்ளது. கார்பன் பைபர் கொண்டே பக்கவாட்டு கதவுகள், பக்கவாட்டு பேனல்கள் , ஹூட், இறக்கைகள், டிரைவர்ஷேப்ட், ப்ரேக் மற்றும் கால் பெடல் கொண்டு இயக்கக்கூடிய மூன்று - பிளேட் க்ளட்ச் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளதே இத்தகைய குறைவான  எடைக்கு காரணம்.

7,500 rpm வேகத்தில் 490  PS  என்ற அளவிலான உந்து சக்தியையும் அதிகபட்சமாக 500  nm என்ற அளவிலான முடுக்கு விசையையும் வெளிபடுத்த வல்ல A 4.0 லிட்டர் V8  என்ஜின் இந்த வாகனத்தின்  சக்தி மையமாக திகழ்கிறது.  இந்த இஞ்சின் சக்தி அனைத்தும் 6 வேக  ட்ரேன்ஸ்வெர்ஸ் மவுண்ட்டெட் கியர்  மூலம் பின் சக்கரங்களுக்கு கடத்தப்பட்டு வாகத்தை சீறி பாய வைக்கிறது. ஆகவே இதில் 4மேடிக் கியர் அமைப்பு இல்லை.

இன்னும் இந்த வாகனத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு கூறவேண்டுமெனில் ,  ஸ்டேண்டர்ட் C63 AMG கார்களும் இதே இஞ்சின் மூலமாகத் தான் இயங்குகிறது. ஆனால் இந்த காரில் அதே என்ஜின்  குறைந்த அளவிலான சக்தியைத்தான் ( 464 PS) அளவுக்கு தான் சக்தியை வெளிபடுத்துகிறது. இது பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் இந்த C63 AMG கார்கள் 1730  கிலோ எடை கொண்டுள்ளது. இது DTM  பந்தய கார்களை விட 610  கிலோ கூடுதல் எடையாகும். இந்த கூடுதல் எடைக்கு காரணம் எடை அதிகமுள்ள 4MATIC  அமைப்பு , பலமான ட்ரேன்ஸ்மிஷன். காரின் உட்புறத்தில் வசதிக்காக சேர்க்கப்பட்டுள்ள அம்சங்களே காரணமாகும். இவை அனைத்தும்   
DTM  பந்தய கார்களில் இல்லை. 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mercedes-Benz C6 3 AMG

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience