மெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது
மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் க்கு published on sep 03, 2015 07:38 pm by nabeel
- 8 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
புதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை நடக்கவிருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இப்போது காரின் மூடுதிரைகளை நீக்கிய படங்களை வெளியிட்டுள்ளது. இந்த காரில் பயன்படுத்தியுள்ள நீளமான மாற்றக்கூடிய மேற்கூரையை (சாஃப்ட் டாப்) ஒப்பிட்டால், இந்நிறுவனத்தின் இதற்கு முன் வந்த வேறெந்த மாடல்களிலும் இவ்வளவு நீளமானதை பயன்படுத்தவில்லை என்று மெர்சிடிஸ் நிறுவனம் உறுதியாக கூறுகிறது. காரின் மேற்கூரையை சாவியின் மூலமே இயக்கும் வசதி உள்ள நிலையில், கார் மணிக்கு 60 கி.மீ வேகத்திற்குள் பயணித்துக் கொண்டிருந்தால் கூட மேற்கூரையை திறக்கவோ அல்லது மடக்கி கொள்ளவோ, 20 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகமான S கிளாஸ் கேப்ரியோலெட், தற்போது மீண்டும் களமிறங்க உள்ளது.
4.7-லிட்டர் ட்வின்-டர்போ V8-யை கொண்டுள்ள இந்த கார், 449bhp மற்றும் 71.38kgm முடுக்குவிசையை வெளியிட்டு, தரமான S 500 வகை கார்களில் இந்த ஆற்றலை பின் சக்கரங்களுக்கு அளிக்கின்றன. அதே நேரத்தில் AMG S 63-ல் 5.5-லிட்டர் ட்வின்-டர்போ V8-யை கொண்டு 577bhp மற்றும் 91.77kgm முடுக்குவிசையை வெளியிட்டு, பின் சக்கரங்களுக்கு அல்லது 4மேட்டிக் ஆல்-வீல்-ட்ரைவ் சிஸ்டம் மூலம் நான்கு சக்கரங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. ஹார்டு டாப் கூபே-யின் அதே எடையை கேப்ரியோலெட் காருக்கும் கொண்டு வரும் வகையில் மெர்சிடிஸ் நிறுவனம், பின்புற பாடி அமைப்பை மெக்னீசியம் மற்றும் அலுமனியம் மூலம் உருவாக்கி உள்ளது. ஆடம்பர கேப்ரியோலெட்டின் நீளம் 5.027 மீட்டர் மற்றும் அகலம் 1.899 மீட்டர், இதே அளவில் தான் தற்போதைய கூபே பதிப்பும் உள்ளது. பின்புறத்தில் உள்ள கேமரா அல்லது தேர்வுக்கு உட்பட்ட 360-டிகிரி கேமராவை மூடிய வண்ணம், மெர்சிடிஸ் லோகோ அமைந்துள்ளது. இந்த லோகோவை, காரின் பொருள் வைப்பு இடத்தை (பூட்) கைகளால் திறக்க உதவும் லிவராகவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
S கிளாஸ் என்ற பெயரில் ஒருவருக்கு ஏற்படும் எதிர்பார்ப்பை போலவே, அந்த கார் பல அம்சங்களால் நிரம்பியுள்ளது. கேப்ரியோலெட் காரில் உள்ள ஏர்கேப் விண்ட் ப்ரோட்டெக்ஷன் சிஸ்டத்தை மெர்சிடிஸ் நிறுவனம் விருப்பத் தேர்வாக அளித்துள்ளது. இதன் மூலம் கேபினின் உட்புறத்தில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், பின்பக்க சீட்டின் பின்னால் உள்ள குவிந்த பேனல்களுடன் சேர்ந்துள்ள மேற்கூரை பிரேம், மின்னூட்டத்தின் மூலம் விரிந்து, காற்றை ஒரு பக்கமாக திருப்பி விடுகிறது. இந்த காரில் உள்ள மற்றொரு அம்சமான மெர்சிடிஸின் புதிய தெர்மோட்ரோனிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், சென்சர்களின் மூலம் காரின் மேற்கூரையின் மேற்புறம் மற்றும் கீழ்புறத்திற்கு தகுந்தாற் போல காருக்குள் தட்பவெப்பநிலையை வைத்துக் கொள்கிறது. காரின் உட்புறத்தில் லேதரின் தேர்வு மற்றும் பல்வேறு நிறங்களை கொண்டுள்ளது. அதனோடு கூடுதலாக, சிறப்பான ஸ்டீயரிங், சென்டர் ஆம்ரெஸ்ட் மற்றும் சீட்களை கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை, ஆட்டோநோமஸ் பிரேக்கிங், பாதசாரிகள் கண்டறிதல் (பீடிஸ்ட்ரியன் ரெக்கனேஷன்), அடாப்டீவ் குரூஸ் கன்ட்ரோல் கொண்ட ஸ்டீயரிங் ஃபங்கஷன், அடாப்டீவ் ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் நைட் விஷன் ஆகியவற்றை S-கிளாஸ் கேப்ரியோலெட் கொண்டுள்ளது. மேலும், S-கிளாஸ் கேப்ரியோலெட்டில் உள்ள ரோல்ஓவர் பாதுகாப்பு சாதனம் மூலம் காருக்குள் இருப்பவர்களை பாதுகாக்கும் வகையில், பின்புற ஹெட்ரேஸ்ட்டில் இருந்து தன்னிச்சையாக ரோல் பார்கள் எழும்பி வரும் அமைப்பு காணப்படுகிறது.
- Renew Mercedes-Benz S-Class Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Best Health Insurance Plans - Compare & Save Big! - (InsuranceDekho.com)
0 out of 0 found this helpful