மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2015 விற்பனை வளர்ச்சி: 32 சதவிகிதம் பதிவு செய்து புதிய சாதனை
published on ஜனவரி 13, 2016 10:05 am by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின், அட்டகாசமான ‘15 இன் 15’ திட்டம் இந்நிறுவனத்திற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. ‘2015 –ஆம் ஆண்டிற்குள், 15 கார்களை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்ற கவர்ச்சிகரமான இலக்கை அடைந்துள்ள இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 32 சதவிகிதம் என்று பதிவாகி உள்ளது. 2015 வருடம் மட்டும் மொத்தம் 13,502 மெர்சிடிஸ் கார்கள் விற்பனையானதை, இந்நிறுவனம் மாபெரும் சாதனையாகக் கொண்டாடுகிறது, ஏனெனில், இந்நிறுவனம் இந்தியாவில் கால் பதித்ததில் இருந்து, இப்போதுதான் முதல் முறையாக இந்த விற்பனை எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் CEO & தலைமை நிர்வாக அதிகாரியான ரோலாண்ட் போல்கர், “இந்திய வாகன சந்தையில் சாதகமற்ற சூழ்நிலை மற்றும் மந்தமான பொருளாதார நிலைமை இருந்த போதிலும், எங்களது முழுமையான சேவை மற்றும் நிதி திட்டங்கள் போன்றவை, புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எங்களது எல்லையற்ற ஆர்வம் மற்றும் விரிவாக்கப்பட்ட எங்களது நெட்வொர்க் ஆகியவற்றிற்கு ஆதாரமாக செயல்பட்டு வந்ததால், எங்களது வளர்ச்சி அதிகமாகியுள்ளது,” என்றார். சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத விற்பனை சரிவையும் மீறி, எங்களது வளர்ச்சி உறுதியாக இருக்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.
திரு. போல்ஜர், “விற்பனை வெற்றி அல்லது வாடிக்கையாளர்களுக்கு அருமையான மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுப்பது போன்றவற்றை மட்டும் நாங்கள் எங்களது இலக்காக எண்ணவில்லை. கடந்த வருடங்களில், இந்த சமூகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு நல்ல மதிப்பு உருவாக்காவும், தொடர்ந்து சீரான பெரிய வளர்ச்சியை எங்கள் நிறுவனத்திற்கு ஏற்படுத்தவும் நாங்கள் அரும்பாடுபட்டோம்,” என்று கூறினார். 2015 வருடத்தின் வெற்றிக்கு ஆதாரமாக உள்ள உறுதியான நம்பிக்கை, 2016 –ஆம் ஆண்டில் தங்களை அதிகமாக உழைக்க ஊக்குவிக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார். மேலும், ‘2016 ஆண்டு பல வகைகளில் எங்களுக்கு புத்துணர்வு ஊட்டும் விதத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையை, இந்த வெற்றி தருகிறது. எங்களது நிலையான கொள்கைகள் மற்றும் சரியான சீர்திருத்தங்கள் மூலம், தற்போதைய வளர்ச்சி வேகம் நிச்சயமாக நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்று கூறினார்.
மெர்சிடிஸ் நிறுவனம், GLE கூபே என்ற புதிய காரை நாளை அறிமுகப்படுத்துகிறது. திரு போல்கர் இந்த நிறுவனத்தின் 2016 –ஆம் ஆண்டிற்கான திட்டங்களைப் பற்றி விவரிக்கும் போது, “2016 – ஆம் ஆண்டில், 12 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதே, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முயற்சிகளில் முக்கியமானதாகும். இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சில மாடல்களின் முந்தைய வெர்ஷன்கள், இந்தியாவில் இது வரை அறிமுகம் ஆகவில்லை. மேலும், ஏற்கனவே உள்ள சந்தைகள் மற்றும் புதிதாக உருவாகவுள்ள சந்தைகள் என பல இடங்களில், தற்போதுள்ள அவுட்லெட்கள் தவிர, மேலும் புதிய 10 அவுட்லெட்கள் ஆரம்பிக்கப்படும்,” என்று கூறினார்.
மேலும் வாசிக்க