சீரமைக்கப்பட்ட வோல்க்ஸ்வேகன் குழுமத்தின் புதிய செயல் அதிகாரியாக (CEO) மேதியாஸ் முல்லர் தேர்வு
published on செப் 28, 2015 05:17 pm by cardekho
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மேற்பார்வை குழு தன்னுடய அமைப்பில் ஒரு மாற்றம் செய்யும் விதமாக திரு. மத்தியாஸ் முல்லரை தனது நிறுவனத்தின் புதிய CEO என்று அறிவித்துள்ளது. இந்த பதவியில் இருந்த மார்டின் விண்டர்கோன் எமிஷன் மோசடியில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் சிக்கியதற்கு தார்மீக பொறுப்பேற்று நான்கு நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த புதிய பதவி மத்தியாஸ் முல்லருக்கு வழங்கப்பட்டுள்ளது. போர்ஷ் AG நிறுவனத்தின் சேர்மனாக முன்பு பொறுப்பு வஹித முல்லர் அவருடைய இடத்திற்கு தகுதியான ஒரு மாற்று கிடைக்கும் வரை தொடர்ந்து அந்த பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிகிறது.
“ வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இழந்துள்ள நற்பெயரையும் நம்பிக்கையும் எப்பாடு பட்டாவது மீட்டெடுப்பதே எனது பணிகளில் முதலாவதும் முக்கியமானதும் ஆகும். அதைத் தவிர இந்த கடினமான சூழ்நிலையில் சரியான முடிவுகளை எடுப்பதிலும் நான் முழு கவனம் செலுத்துவேன் " என்று திரு.முல்லர் கூறினார்.
“ என்னுடைய தலைமையின் கீழ் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் வாகன தயாரிப்பில் மிக உயரிய மற்றும் கடினமான தரக் கோட்பாடுகளை வடிவமைத்து அவைகளை உறுதியுடன் செயல்படுத்தும்" என்று மேலும் அவர் கூறினார்.
தன்னுடய பலமான அணி மற்றும் ப்ரேண்டுகளின் உதவியுடன் இந்த நெருக்கடியில் இருந்து வோல்க்ஸ்வேகன் வெற்றிகரமாக வெளிவந்துவிடும் என்று முல்லர் நம்புகிறார். "அவ்வாறு வெளிவந்துவிட்டால் வோல்க்ஸ்வேகன் குழுமம் தன்னுடைய தனித்துவமான பலமாக கருதும் புதுமை மற்றும் சீரிய செயல் நோக்கமுள்ள அணியினரின் உதவியுடன் முன் எப்போதும் இருந்ததை விட தன்னுடைய போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றியுடன் வெளி வர அற்புதமான வாய்ப்புள்ளது " என்றும்தடர்ந்து பேசுகையில் அவர் கூறினார்.
4,82,000 வோல்க்ஸ்வேகன் கார்கள் மற்றும் 2009 ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட அனைத்து ஆடி கார்களும் திரும்பப் பெற்றுக்கொள்ள பட வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ள இந்த இக்கட்டான சூழலில் வோல்க்ஸ் வேகன் நிறுவனத்தில் இந்த பதவி மாற்றம் நடந்தேறியுள்ளது. மேலும் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மிகவும் நம்பிக்கையான நபராக கருதப்படும் திரு. மாத்தியாஸ் முல்லர் பிப்ரவரி மாதம் 2020 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார் என்றும் தெரிகிறது.