சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாருதி சுசுகி YBA காம்பாக்ட் SUV –யின் உட்புற சிறப்பம்ஸங்கள் பற்றிய தகவல்கள் கசிந்தது

published on நவ 26, 2015 03:58 pm by raunak

புதிய YBA காரில், காம்பாக்ட் SUV பிரிவிலேயே முதல் முறையாக ஏராளமான சிறப்பம்ஸங்களான புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள் மற்றும் 7 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் போன்றவை கச்சிதமாக பொருத்தப்பட்டு, ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் மற்றும் மஹிந்த்ரா TUV 300 போன்ற கார்களுடன் போட்டிக் களத்தில் இறங்கத் தயார் நிலையில் உள்ளது.

மாருதி சுசுகி YBA கார் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் மறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, நமது உளவாளிகளின் கண்களில் தென்பட்டுவிட்டது. தற்போது, இந்த காரின் உட்புற அம்ஸங்களை உள்ளடக்கிய தகவல்கள் முதல் முறையாக அதிகாரபூர்வ வதாக வெளியாகி உள்ளன. அதிகாரபூர்வமாக இதன் பெயரை மாருதி நிறுவனம் அறிவிக்காததால், தற்காலிகமாக இதன் பெயரை YBA என்று வைத்துக் கொள்வோம். அநேகமாக, அடுத்து வரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இதன் அறிமுகம் நடைபெறும் என்று தெரிகிறது. அறிமுகப் படலம் முடிந்தவுடன், தற்போது இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உள்ள சப்-4m SUV பிரிவின் கீழ் வரும் எக்கோ ஸ்போர்ட் மற்றும் சமீபத்தில் அறிமுகமான TUV 300 போன்ற கார்களுடன் போட்டியிடத் தயாராகி விடும்.

YBA –வின் உட்புறத்தில் உள்ள சென்ட்ரல் கன்சோல், S க்ராஸ் காரில் வருவதைப் போலவே உள்ளது. மேலும், இதன் உள்ளே மாருதியின் பிரத்தியேகமான 7 அங்குல ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதையும், உளவாளிகள் பார்த்து விட்டனர். எனவே, இது ஒரு உயர்தர டிரிம்மாக இருக்க வேண்டும். புதிய பலீனோவில் உள்ளதைப் போலவே, இந்த அமைப்போடு ஆப்பிள் CarPlay ஆப்பும் இணைக்கப்படும் என்று நாம் யூகிக்கிறோம். சமீபத்தில் வெளியான கார்களைப் போலவே, YBA காரும் சிக்மா, டெல்டா, ஜேட்டா மற்றும் ஆல்ஃபா போன்ற பல விதமான டிரிம் லெவல்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டியரிங் வீலின் தோற்றம், ஸ்விஃப்ட், சியாஸ், பலீனோ கார்களில் பொருத்தப்பட்டிருப்பதைப் போலவே உள்ளது. எனினும், பலீனோவில் இல்லாத, S க்ராஸ் மாடலில் உள்ள க்ரூயிஸ் கண்ட்ரோல் பட்டன்கள், இந்த பிரிவிலேயே முதல் முறையாக பொருத்தப்பட்டு வரும். இவை மட்டுமல்லாது, சென்ட்ரல் டனலில் ஒரு கப் ஹோல்டரும், ஆட்டோ AC கண்ட்ரோல் சாதனத்துக்கு கீழே பொருட்களை வைத்துக் கொள்ள வசதியாக ஒரு பெரிய இடமும் உள்ளது.

YBA முன்புறத்தில், S க்ராஸ் மற்றும் பலீனோவில் பொருத்தப்பட்டுள்ளதைப் போலவே Bi-Xenon பிரோஜெக்டர்கள் பொருத்தப்பட்ட, சற்றே பின்வாங்கிய ஹெட் லாம்ப்களை நாம் பார்க்கலாம். சைட் ரெபீட்டர் லைட்கள் பனி விளக்குகளுக்கு மிக அருகே பொருத்தப்பட்டுள்ளன. YBA –வின் கிரில், இந்தியாவில் விரைவில் வெளிவரவுள்ள புதிய விட்டாரா மாடலில் உள்ள கிரில்லின் வடிவமைப்பை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. பின்புற பகுதியில் ராப்அரௌண்ட் டெய்ல் லாம்ப்களும்; பம்பரில் ரிப்லெக்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சந்தையில் உள்ள மாடல்களின் இஞ்ஜின்களான, ஹைபிரிட் தொழில்நுட்ப SHVS அமைப்பு இணைந்த 1.3 லிட்டர் DDiS 200 டீசல் இஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் VVT பெட்ரோல் வகை இஞ்ஜினும் பொருத்தப்பட்டு வரும்.

மேலும் வாசிக்க :

r
வெளியிட்டவர்

raunak

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி XA ஆல்பா

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை