மாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது!
published on பிப்ரவரி 26, 2020 11:05 am by dinesh for மாருதி விட்டாரா பிரீஸ்ஸா
- 57 Views
- ஒரு கருத்தை எழுதுக
டீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது
-
அடிப்படை விலை ரூபாய் 28,000 வரை குறைந்துள்ளது.
-
உயர்-சிறப்பம்சம் பொருந்திய கைமுறை வகையின் விலை 12,000 வரை குறைந்துள்ளது, அதே சமயத்தில் நடுத்தர வகைகளுக்கு ரூபாய் 21,000 வரை அதிகரித்து இருக்கின்றது.
-
தானியங்கி முறை வகைகளின் விலைகள் ரூபாய் 1.11 லட்சம் வரை அதிகரித்து இருக்கின்றது.
-
இது 105பிஎஸ் /138என்எம் அளவை உருவாக்குகிற 1.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது, இது 1.3-லிட்டர் டீசல் அலகை காட்டிலும் 15பிஎஸ் அதிகமாகவும், 62என்எம் குறைவாகவும் உள்ளது.
-
5-வேக எம்டி மற்றும் லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் கூடிய 4-வேக ஏடி உடன் வழங்கப்படுகிறது.
-
மாருதியானது தற்போது விட்டாரா பிரெஸ்ஸாவில் டீசல் இயந்திரத்தை அறிமுகப்படுத்த எவ்வித திட்டமும் வகுக்கவில்லை.
மாருதி சுசுகியானது இந்தியாவில் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ+, இசட்எக்ஸ்ஐ + மற்றும் இசட்எக்ஸ்ஐ+ டூயல் டோன் போன்ற ஐந்து வகைகளில் கிடைக்கிறது, இவைகளின் விலையானது ரூபாய் 7.34 லட்சத்திலிருந்து ரூபாய் 11.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும். டீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய ஃபேஸ்லிஃப்ட் மாதிரியைப் போல் இல்லாமல், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் இயந்திரத்தை மட்டும் உடைய வகையாக மாறியுள்ளது. முகப்பு மாற்றம் செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸாவின் விரிவான விலைப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா |
பழைய(டீசல்) |
புதிய (பெட்ரோல்) |
||
வகை |
எம்டி |
ஏஎம்டி |
எம்டி |
ஏடி |
எல் |
ரூபாய் 7.62 லட்சம் |
- |
ரூபாய் 7.34 லட்சம் (-28000 |
- |
வி |
ரூபாய் 8.14 லட்சம் |
ரூபாய் 8.64 லட்சம் |
ரூபாய் 8.35 லட்சம் (+21000) |
ரூபாய் 9.75 லட்சம் (+1.11 லட்சம்) |
இசட் |
ரூபாய் 8.92 லட்சம் |
ரூபாய் 9.42 லட்சம் |
ரூபாய் 9.10 லட்சம் (+18000) |
Rs 10.50 லட்சம்(+1.08 லட்சம்) |
இசட் + |
ரூபாய் 9.87 லட்சம் |
ரூபாய் 10.37 லட்சம் |
ரூபாய் 9.75 லட்சம் (-12000) |
ரூபாய் 11.15 லட்சம் (+78000) |
இசட் +டிடி |
ரூபாய் 10.03 லட்சம் |
ரூபாய் 10.59 லட்சம் |
ரூபாய் 9.98 லட்சம் (-5000) |
ரூபாய் 11.40 லட்சம் (+81000) |
சியாஸ், எக்ஸ்எல் 6, எர்டிகா மற்றும் 2020 எஸ்-கிராஸ் போன்றவையில் வழங்கப்பட்ட 1.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மூலம் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் இயக்கப்படுகிறது. இது 105பிஎஸ் மற்றும் 138என்எம் ஐ உருவாக்குகிறது, மேலும் இது 5-வேகக் கைமுறை கொண்ட பற்சக்கரப்பெட்டியுடன் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளது. விருப்பமான 4-வேக முறுக்குத்திறன் மாற்றி அலகும் இந்த வகையில் உள்ளது.
முந்தைய ஃபேஸ்லிஃப்ட் மாதிரியில் காணப்பட்ட 1.3-லிட்டர் டீசல் இயந்திரத்திற்கு பதிலாக 1.5-லிட்டர் பெட்ரோல் அலகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது டீசல் இயந்திரத்தைக் காட்டிலும் 15பிஎஸ் அதிகமாகவும் 62என்எம் குறைவாகவும் உருவாக்குகிறது. தற்போது வரை விட்டாரா பிரெஸ்ஸாவில் டீசல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மாருதி வகுக்கவில்லை.
மாருதியின் எரிபொருள் செயல்திறன் அளவானது எம்டிக்கு 17.03 கேஎம்பிஎல் மற்றும் ஏடி வகைகளுக்கு 18.76 கேஎம்பிஎல் வரை வழங்குகிறது. ஒப்பிட்டு பார்க்கும் போது, டீசல் இயந்திரத்தில் இயங்கக் கூடிய விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் அலகை காட்டிலும் 6கேஎம்பிஎல் அதிகமாக 24.3 கேஎம்பிஎல் மைலேஜை தருகிறது.
ஃபேஸ்லிஃப்ட் உடன், சப்-4எம் எஸ்யூவியின் சிறப்பம்ச பட்டியலையும் மாருதி புதுபித்து இருக்கின்றது. இரண்டு முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடனான ஏபிஎஸ், பின்புறமாக வாகனத்தை நிறுத்துவதற்கு உதவக்கூடிய உணர்விகள் போன்ற சிறப்பம்சங்களுடன், இப்போது இரு எல்இடி முகப்பு விளக்குகளுடன் இரட்டை இயக்க எல்இடி டிஆர்எல்கள், மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய எல்இடி விளக்குகள், பின்புற எல்இடி விளக்குகள், தானியங்கி முறை மாறக்கூடிய ஐஆர்விஎம் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கி முறையுடன் புதிய 7-அங்குல ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ ஒளிபரப்பு அமைப்புடன் வருகிறது.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, முகப்பு மாற்றம் செய்யப்பட்ட பிரெஸ்ஸா முன்பு இருக்கக் கூடிய மாதிரியுடன் பெரும்பாலும் ஒத்திருக்கிறது. மாற்றம் செய்யப்பட்ட பாதுகாப்பு சட்டகம் மற்றும் முன்பக்க மோதுகைத் தாங்கி போன்ற புதுப்பிப்புகளில் பெரும்பாலானவை காரின் முன்பக்கம் மட்டுமே உள்ளது. இது ஒரு புதிய உலோக சக்கரம் மற்றும் புதிய பின்புற மோதுகைத் தாங்கியைப் பெறுகிறது.
டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 போன்றவற்றுக்கு 2020 விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து போட்டியாக இருக்கும். க்யாவும் இந்த விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு போட்டியாக அதன் சோனெட்டை கொண்டுவரும், இது விரைவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு கான்செப்ட்டாக அறிமுகமாகும்.
மேலும் படிக்க: க்யா சோனெட் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது; மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூவிற்கும் போட்டியாக இருக்கும்
0 out of 0 found this helpful