ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இருக்கக் கூடிய 10 கார்கள் விற்பனைக்கு வருகிறது

published on பிப்ரவரி 03, 2020 05:44 pm by rohit

 • 39 பார்வைகள்
 • ஒரு கருத்தை எழுதுக

ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கார் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்களா? வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்படும் அனைத்து மாதிரிகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

ஆட்டோ எக்ஸ்போ 2020 பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய வரவிருக்கும் மாதிரிகளை நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தும் அல்லது தங்களின் புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்துவதைக் காணலாம். நிகழ்ச்சியானது கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கின்ற அனைத்து கார்களையும் நாம் காணலாம்.

 தயாரிப்பு-அமசங்கள் பொருந்திய டாடா எச்2எக்ஸ்

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

டாடா, 2019 ஜெனீவா மோட்டார் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய எச்2எக்ஸ் கான்செப்ட் அடிப்படையிலான தன்னுடைய புதிய மைக்ரோ-எஸ்யூவியை  சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது. அல்ட்ரோஸுக்கு ஆற்றலை வழங்கக்கூடிய அதே பிஎஸ்6-இணக்கமான 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் இது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு-அம்சம் பொருந்திய எஸ்யூவியானது எச்2எக்ஸ் கான்செப்டின் வடிவ அமைப்பில் குறைந்தது 80 சதவீதம் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது, இது பாக்ஸி வடிவமைப்பு சோதனை ஓட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. டியாகோவிற்கும் அல்ட்ரோஸுக்கும் இடையேவுள்ள இதன் விலையானது ரூபாய் 5.5 லட்சத்திலிருந்து ரூபாய் 8 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மாதிரியான இது, ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ / ஃப்ரீஸ்டைல் மற்றும் மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

 க்யா க்யூ‌ஒய்ஐ

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

க்யூ‌ஒய்‌ஐ என்ற குறியீட்டு பெயருடன், வரவிருக்கும் சப்-4எம் எஸ்யூவி க்யாவின் வடிவமைப்புடன் புலி மூக்கு வடிவ பாதுகாப்பு சட்டகம் மற்றும் மேற்புற காற்றைத் தடுக்கும் ஒருங்கிணைந்த மேற்கூரை வடிவமைப்புடனான  இணைக்கப்பட்ட பின்புற விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. க்யா தன்னுடைய சப்-4 எம் எஸ்யூவியை வென்யூவின் 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் அலகுகளுடன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது செல்டோஸின் 1.5-லிட்டர் டீசல் இயந்திரம் இல்லாத வகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செலுத்துதல் விருப்பத்தேர்வுகளில் 5-வேகக் கைமுறை, 6-வேகக் கைமுறை மற்றும் 7-வேக டிசிடி (1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் வகையில் மட்டுமே) ஆகியவை அடங்கும். இது ஆகஸ்ட் 2020க்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

ஹூண்டாய் வரவிருக்கும் எக்ஸ்போவில் முகப்பு மாற்றப்பட்ட வெர்னாவைக் காட்சிப்படுத்தும். இது செல்டோஸின் பிஎஸ்6-இணக்கமான 1.5-லிட்டர் பெட்ரோல் (115 பிபிஎஸ்/144 என்எம்) மற்றும் டீசல் (115 பிபிஎஸ் / 250 என்எம்) அலகுகளுடன் அளிக்கப்படும், இதன் வாயிலாக இப்போதைய அனைத்து இயந்திரங்களும் மாற்றப்படும். செலுத்துதல் விருப்பத்தேர்வை பொருத்தவரை, 6-வேக கைமுறை நிலையானதாக அளிக்கப்படும், அதே போல் பெட்ரோல் வகை சிவிடி உடனும், டீசல் வகை முறுக்குதிறன் மாற்றி உடனும் அளிக்கப்படும். இது எக்ஸ்போவுக்குப் அடுத்து விரைவில் விற்பனைக்கு வரும், ரூபாய் 8.17 லட்சம் முதல் ரூபாய் 14.07 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும் இதன் தற்போதைய விலை வரம்பை விடச் சற்று அதிகமாக இருக்கும்.

 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

மாருதியின் சப்-4 எம் எஸ்யூவி ஆனது இந்தியாவில் 2016 ஆம் ஆண்டிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் வடிவமைப்பை மேம்படுத்தப் புதுப்பிப்பு தேவை. முகப்பு மாற்றப்பட்ட எஸ்யூவி வடிவமைப்பு மற்றும் இயந்திர மாற்றங்களுடன் வரும். இது சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவற்றில் காணப்படுவது போலவே லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் பிஎஸ்6-இணக்கமான 1.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் அளிக்கப்படும். செலுத்துதல் விருப்பத்தேர்வுகளில் 5-வேக எம்டி மற்றும் 4-வேக ஏடி ஆகியவை அடங்கும். இந்த எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலைகள் தற்போதுள்ள ரூபாய் 7.63 லட்சத்திலிருந்து ரூபாய் 10.37 லட்சம் வரையிலான விலைக்கு (எக்ஸ்ஷோரூம் டெல்லி) நெருக்கமானதாக இருக்கும். இந்த புதுப்பித்தலுடன் முதல் முறையாக ப்ரெஸ்ஸாவுக்கு பெட்ரோல் இயந்திரம் கிடைக்கும்.

 மாருதி எஸ்-கிராஸ் பெட்ரோல்

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

விட்டாரா ப்ரெஸா ஃபேஸ்லிஃப்டைப் போன்றே, எஸ்-கிராஸும் அதே பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் வரும். செலுத்துதல் விருப்பத்தேர்வுகள் மற்ற இரண்டு மாதிரிகளில் உள்ளதை போன்றே 5-வேகக் கைமுறை மற்றும் 4-வேகத் தானியங்கி அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி எஸ்-கிராஸ் பெட்ரோல் வகையை வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடனும் வரக்கூடும். எஸ்-கிராஸ் இந்தியாவில் பெட்ரோல் இயந்திரத்தையும், தானியங்கி விருப்பத்தேர்வையும் பெறுவது இதுவே முதல் முறை ஆகும். எஸ்-கிராஸின் ஆரம்ப நிலை விலை முன்பு இருக்கக் கூடிய டீசல் வகை மாதிரிகளைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூபாய் 8.80 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடங்குகிறது.

 மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டை காட்சிப்படுத்தி அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்போது எஸ்-பிரஸ்ஸோவில் காணப்படுவது போலவே யு-வடிவ அமைப்புடன் மஞ்சள் வண்ணத்துடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பாதுகாப்பு சட்டகத்தைப் பெறுகிறது. இது முன்பு இருந்த அதே பிஎஸ் 6-இணக்கமான 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மூலம் இயக்கப்படும், இது 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் ஆற்றலை வெளியிடும். செலுத்துதல் விருப்பத்தேர்வுகளும் முன்பு இருந்தே இருக்கக்கூடும்: 5-வேகக் கைமுறை மற்றும் 5-வேக ஏ‌எம்‌டி. தற்போதைய விற்பனை விலையான ரூபாய்.4.83 லட்சம் முதல் ரூ 7.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உடன் ஒப்பிடும்போது இது சிறிது அதிகமாக இருக்கும்.

 ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி மற்றும் டர்போ

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

ரெனால்ட்டின் சப்-4எம் கிராஸ்ஓவர் எம்பிவியான  ட்ரைபர் கூடிய விரைவில் சில புதுப்பிப்புகளைப் பெறும். அதனுடைய 1.0-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் முன்பே பிஎஸ்6-இணக்கமாக இருந்தாலும் கூட, விரைவில் இது ஏஎம்டியின் விருப்பத்தேர்வையும் அதே இயந்திரத்தின் மிகவும் ஆற்றல் மிக்க டர்போசார்ஜ் செய்யப்பட்ட மாதிரியையும் பெறும். டர்போசார்ஜ் இல்லாத நிலையிலும், எக்ஸ்போவில் ட்ரைபரின் ஏஎம்டி மாதிரியை ரெனால்ட் காட்சிப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டியை அறிமுகப்படுத்தும்போது, அதன் தற்போதைய விலை வரம்பான ரூபாய் 4.99 லட்சத்திலிருந்து  ரூபாய் 6.78 லட்சம் வரையிலான தொகையை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) காட்டிலும் ரூபாய் 40,000த்திலிருந்து 50,000 வரை அதிக விலை நிர்ணயிக்கப்படும். எக்ஸ்போவுக்குப் பின்னர் ட்ரைபர் ஏஎம்டி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து டர்போசார்ஜ் மாதிரியை 2020 நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தும்.

 ரெனால்ட் எச்பிசி

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

இந்திய சந்தைக்கான பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் சப்-4எம் எஸ்யூவி தான் எச்பிசி (குறியீட்டுப் பெயர்) ஆகும். இது ட்ரைபர் சப்-4 எம் எம்பிவி கிராஸ்ஓவரின் அதே வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது. ரெனால்ட் கைமுறை மற்றும் தானியங்கி உட்செலுத்துதல் அமைப்புடன் கூடிய 1.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரத்துடன் இதை (பெரும்பாலும் சிவிடி உடன்) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச்பிசி 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும், இது அறிமுகம் செய்யப்படும் போது இதன் விலை ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 கிரேட் வால் மோட்டார்ஸ் ஓரா ஆர் 1

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

கிரேட் வால் மோட்டார்ஸ் வழங்கக் கூடிய இந்த வகை உலகின் மிகவும் மலிவான மின்சார கார் ஆகும். இது 30.7 கிலோவாட் மின்கல தொகுப்பைக் கொண்டுள்ளது, இது ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 351 கிமீ வரை செல்லக்கூடும். ஓரா ஆர் 1 ஒரு சலுகையளிக்கப்பட்ட விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது, ஓரா ஆர்1 இன் விலை ரூபாய். 6.24 லட்சம் ($ 8,680இலிருந்து மாற்றம் செய்யப்பட்டது) முதல் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை ($ 11,293இலிருந்து மாற்றம் செய்யப்பட்டது) இருக்கும். எங்களுடைய சந்தையில் கிரேட் வால் மோட்டார்ஸ் இவியை எப்போது அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, ஏனெனில் நிறுவனம் அதனுடைய இந்தியச் செயல்பாட்டை அதன் ஹவல் எஸ்யூவி வகையோடு 2021 முதல் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சீன கார் தயாரிப்பு நிறுவனம் எங்கள் சந்தையிலும் இவிக்களை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் 1.0 லிட்டர் டர்போ

10 Cars Priced Under Rs 10 Lakh Coming To Auto Expo 2020

ஹூண்டாய் சமீபத்தில் தன்னுடைய புதிய சப்-4எம் செடானான அவுராவை அறிமுகப்படுத்தியது, இது வென்யூவின் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் அலகுகள் நீக்கப்பட்ட அமைப்புடன் மூன்று இன்ஜின் விருப்பத்தேர்வுகளுடன் வருகிறது. இப்போது, அதே இயந்திரம் கிராண்ட் ஐ10 நியோஸில் செல்ல தயாராக உள்ளது, இது ஒரு பாக்கெட் ராக்கெட்டை உருவாக்கலாம்! 100 பிஎஸ் மற்றும் 172 என்எம் கொண்ட அவுராவின் அமைப்பில் இருப்பது போன்றே 5-வேக கைமுறையிலான பற்சக்கரபெட்டியுடன் கூடிய டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரம் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிட்டதட்ட 7.5 லட்சம் ரூபாய் எதிர்பார்க்கக்கூடிய விலையுடன் விலையுயர்ந்த பெட்ரோல் வகையாக இருக்கும். டர்போ-பெட்ரோல் நியோஸ் ஆட்டோ எக்ஸ்போ 2020 அறிமுகத்திற்குப் பின்னர் மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பாப்புலர்
 • Mahindra Scorpio-N
  Mahindra Scorpio-N
  Rs.12.00 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2022
 • மாருதி Brezza 2022
  மாருதி Brezza 2022
  Rs.8.00 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2022
 • எம்ஜி 3
  எம்ஜி 3
  Rs.6.00 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: jul 2022
 • வோல்வோ xc40 recharge
  வோல்வோ எக்ஸ்சி40 recharge
  Rs.65.00 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: jul 2022
 • க்யா ஸ்போர்டேஜ்
  க்யா ஸ்போர்டேஜ்
  Rs.25.00 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: jul 2022
×
We need your சிட்டி to customize your experience