இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஹூண்டாய் க்ரேடா: லெட்டின் NCAP சோதனையில் 4/5 மதிப்பெண் பெற்றது (வீடியோ)
modified on டிசம்பர் 21, 2015 11:15 am by raunak for ஹூண்டாய் கிரெட்டா 2015-2020
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஒரு புதிய ‘ஹைவ்’ கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்த ஹூண்டாய் க்ரேடா, அதிக கட்டுமான உறுதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஆயுள் ஆகியவற்றை பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் நம் நாட்டில் உலக அரங்கேற்றத்தை பெற்ற கச்சிதமான கிராஸ்ஓவர்- SUV ஆன புதிய க்ரேடாவை, உலகமெங்கும் உள்ள பல்வேறு சந்தைகளுக்கு ஹூண்டாய் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஹூண்டாய் க்ரேடா, லெட்டின் NCAP (நியூ கார் அசிஸ்மெண்ட ப்ரோக்ராம்) சோதனையில், மொத்தம் 5-ல் 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. சோதனையில் பயன்படுத்தப்பட்ட மாடலில் இரட்டை-முன்பக்க ஏர்பேக்குகள், முன்பக்க சீட்பெல்ட் ப்ரீடென்ஸனர்கள், சீட்பெல்ட் ரிமையின்டர், ABS (ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்) மற்றும் ISOFIX ஆகியவற்றை பெற்றிருந்தது. பக்கவாட்டு பகுதியின் மோதல் சோதனைகள் ஏஜென்ஸியின் மூலம் நடத்தப்படவில்லை என்றாலும், கிடைத்த தீர்வுகளின் அடிப்படையில், ஹூண்டாய் க்ரேடாவின் பாடிஷெலின் தன்மை, உறுதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல், வளர்ந்த பயணிகளின் பாதுகாப்பில் மொத்தமுள்ள 17.00 புள்ளிகளில் - 15.57 புள்ளிகளையும், குழந்தை பயணிகளின் பாதுகாப்பில் மொத்தம் 49.00 புள்ளிகளில் - 29.87 புள்ளிகளையும் பெற்றது.
க்ரேடாவின் ‘ஹைவ்’ கட்டமைப்பை குறித்த ஹூண்டாயின் விளக்கம்:
- கட்டமைப்பு செழுமை, நிலைப்புத் தன்மை, ஓட்டவும் கையாளுவதற்கும் எளிமை ஆகியவற்றை அதிகரிக்கும் வகையிலான ரிங் கட்டமைப்பு வடிவமைப்புடன் கூடிய உயர்வகை பாடி கடினத்தன்மை.
- பாடி நிலைநிற்கும் தன்மை அதிகரிப்பதோடு, பாதிப்பு கால அளவு (கோரோசன் டியூரபிளிட்டி) மற்றும் லேசான கிரிப் எடை ஆகியவை அதிகரிக்கும் வகையில், மேம்பட்ட அதிக-பலமுள்ள ஸ்டீல் (AHSS) மற்றும் அல்ட்ரா அதிக பலமுள்ள ஸ்டீல் (UHSS) போன்றவற்றை பெற்றுள்ளது.
- ரிஇன்ஃபோர்ஸ்டு ரூஃப் கட்டமைப்பு உடன் பலத்தை அதிகரித்து வகையிலான பல்வேறு கிராஸ் மேம்பர்கள் காணப்படுகின்றன.
- விபத்தில் ஒரு மேம்பட்ட செயல்திறனை காட்டும் வகையில், டேஸ் கிராஸ்-மேம்பர்கள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
- இது குறித்து ஏஜென்சி தரப்பில் கூறியதாவது, “காரின் முன்பகுதியில் ஏற்படும் மோதலில், டிரைவர் மற்றும் பயணி ஆகியோரின் தலை பாதுகாப்பிற்கு, டிரைவர் மற்றும் பயணிக்கான ஏர்பேக்குகள் உள்ளன. இவ்விருவரின் சீட்பெல்ட்களிலும் பிரிடென்ஸனர்கள் மற்றும் லோடு லிமிட்டர்கள் உள்ளன. டிரைவர் மற்றும் பயணி ஆகியோரின் நெஞ்சுப் பகுதிக்கு போதிய அளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் முழங்கால் பகுதிகள் அதிக அளவிலான அபாயங்களை சந்திக்கும் வகையிலான கட்டமைப்பு இல்லை. பாடிஷேல் அதிக நிலைத்தன்மை கொண்டதாக கணக்கிடப்பட்டு, கூடுதலான எடையிலும் நிலைநிற்க திறன் கொண்டதாகும்” என்றனர்
மேலும் வாசிக்க