லெக்ஸஸ் என்எக்ஸ்300எச்சின் மிகவும் மலிவான வகையை அறிமுகப்படுத்துகிறது
லேக்சஸ் என்எக்ஸ் 2017-2022 க்கு published on மார்ச் 02, 2020 03:02 pm by rohit
- 40 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
இப்போது என்எக்ஸ் 300எச் பிஎஸ்6-இணக்கமான பெட்ரோல் இயந்திரத்துடன் வருகிறது, இந்த இயந்திரம் முன்பு இருந்ததை போல அதே அளவிலான ஆற்றல் மற்றும் முறுக்குத்திறனை அளிக்கும்
-
தற்போது என்எக்ஸ் 300எச் மூன்று வகைகளில் கிடைக்கிறது: எக்ஸ்குய்சிட், லக்ஸரி மற்றும் எஃப் ஸ்போர்ட் மற்றும் எஃப் ஸ்போர்ட்.
-
ஆற்றல் இயக்கியில் பிஎஸ்6 இணக்கமான 2.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மற்றும் மின்சார மோட்டார்கள் போன்ற அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
-
கம்பியில்லா மின்னூட்டம், மின்முறையிலான பின்புற கதவு, மற்றும் சூரிய திறப்பு மேற்கூரை போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது.
-
மெர்சிடெஸ்-பென்ஸ் ஜிஎல்சி மற்றும் ஆடி க்யூ5 போன்றவையுடனான இதன் போட்டியைத் தொடர்கிறது.
லெக்ஸஸ் சமீபத்தில் தான் எல்சி 500எச் என்ற சரிவலான மேற்கூரை உடைய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, கார் தயாரிப்பு நிறுவனம் என்எக்ஸ் 300எச்சின் தயாரிப்பு வரிசையில் 300எச் எக்ஸ்கொய்சிட் என்ற ஒரு புதிய வகையை அறிமுகப்படுத்தியது, தற்போது லெக்ஸஸ் எஸ்யுவி மொத்தமாக மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவைகளுடைய வகைகள் பின்வருமாறு:
வகைகள் |
விலைகள் |
என்எக்ஸ் 300எச் எக்ஸ்கொய்சிட் |
ரூபாய் 54.9 லட்சம் |
என்எக்ஸ் 300எச் லக்ஸரி |
ரூபாய் 59.9 லட்சம் |
என்எக்ஸ் 300எச் எஃப் ஸ்போர்ட் |
ரூபாய் 60.6 லட்சம் |
முன்புற கதவின் கீழ், என்எக்ஸ் 300எச் ஆனது 155பிஎஸ் ஆற்றலையும், 210என்எம் முறுக்குத்திறனையும் உருவாக்குகிற பிஎஸ்6-இணக்கமான 2.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இது இதனுடைய மின்சார மோட்டாருடன் சேர்க்கப்படும் போது, மொத்தமாக 197பிஎஸ் வரை ஆற்றலை வெளியிடுகிறது. இது தானியங்கி செலுத்தல் விருப்பத்துடன் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
என்எக்ஸ் 300எச்சில் சூரிய திறப்பு மேற்கூரை, 10.3-அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, முன்புற சாலையின் காட்சியைக் காட்டும் திரை, மின்முறையிலான பின்புற கதவு போன்ற பல்வேறு வகையான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் கூடுதலாக, தானியங்கி இயக்க முறையுடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள், கம்பியில்லா மின்னூட்டம், 8-விதமாக சரிசெய்யக்கூடிய காற்றோட்டமான முன்புற இருக்கைகளுடன் வருகிறது. முன்புறத்தின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, எட்டு காற்றுப்பைகள், இபிடி உடனான ஏபிஎஸ், வாகன நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு (விஎஸ்சி), மற்றும் மலையேற்ற உதவி ஆகிய அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது இந்தியாவில் ஆடி க்யூ5, பிஎம்டபில்யு எக்ஸ்3, மெர்சிடெஸ்-பென்ஸ் ஜிஎல்சி, மற்றும் வோல்வோ எக்ஸ்சி60 போன்றவையுடனான அதன் போட்டியைத் தொடர்கிறது. அதே சமயம், லெக்ஸஸ் ஆனது இந்தியாவில் இஎஸ் 300எச் செடானின் உற்பத்தியைத் தொடங்கியது. மேலும் செடானின் மிகவும் மலிவான வகையையும் அறிமுகப்படுத்தியது. இஎஸ் 300எச்சின் விலை ரூபாய் 51.9 லட்சம் முதல் ரூபாய் 56.95 லட்சம் வரை உள்ளது.
(அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் இந்தியாவுடையது)
மேலும் படிக்க : லெக்ஸஸ் என்எக்ஸ் தானியங்கி
- Renew Lexus NX 2017-2022 Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Best Health Insurance Plans - Compare & Save Big! - (InsuranceDekho.com)
0 out of 0 found this helpful