டிஸ்கவரி ஸ்போர்ட்டை செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது லேண்டு ரோவர் இந்தியா: முன்பதிவு துவக்கம்
published on ஆகஸ்ட் 11, 2015 12:16 pm by akshit
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லி:ஜாகுவார் லேண்டு ரோவர் இந்தியா லிமிடேட் (JLRIL) மூலம் டிஸ்கவரி குடும்பத்தை சேர்ந்த முதல் வெளியீடான டிஸ்கவரி ஸ்போர்ட்டிற்கான அதிகாரபூர்வ முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த SUV வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் கால்தடம் பதிக்க உள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “புதிய டிஸ்கவரி ஸ்போர்ட்டில், புதிய நிலைகளை கொண்ட மெருகேற்றம், பொறியியல் கச்சிதம் மற்றும் நுகர்வோரை மையமாக கொண்ட வடிவமைப்பு ஆகியவற்றை பெற்று, உட்புற கட்டமைப்பில் அதிக இடவசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் இப்பிரிவை சேர்ந்த வாகனங்களில் முன்னோடியாக திகழ்ந்து சகலகலாவல்லமை கொண்டதாகவும், எல்லா நிலப்பகுதிகளையும் கடக்கும் லேண்டு ரோவரின் பழம்பெரும் திறனையும் கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி ப்ரீலேண்டர்2–வின் இடத்தை நிரப்ப வரும் தி டிஸ்கவரி ஸ்போர்ட், 4,599 மிமி நீளம், 2,173 மிமி அகலம், 1,724 மிமி உயரம் மற்றும் 2,741 மிமி சக்கரமட்டம் (வீல் பேஸ்) என்ற அளவுகளை கொண்டுள்ளது. இப்பிரிவில் முதல் முறையாக இடைநிலை அளவு கொண்ட சொகுசு SUV ஆக அறிமுகமாகும் இது, 5+2 இருக்கை வசதியை அளிக்கிறது.
ஜாகுவார் லேண்டு ரோவர் இந்தியா லிமிடேட் (JLRIL) தலைவரான ரோஷித் சூரி கூறுகையில், ஒரு பிரிமியம் SUV ஆன புதிய டிஸ்கவரி ஸ்போர்ட், எங்கள் நுகர்வோரின் சாகச எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் வெளிபுற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உதவுகிறது. இதற்காக இந்த வாகனத்தில் லேண்டு ரோவரின் மூலம் நான்கு சக்கர ஓட்டும் தொழில்நுட்பம் (ஃபோர் வீல் டிரைவ் டெக்னாலஜி) அளிக்கப்பட்டுள்ளது. ஆராய்தல் மற்றும் கண்டுபிடித்தல் ஆகியவை குறித்து, தடுத்து நிறுத்த முடியாத எண்ணம் மற்றும் ஆர்வம் கொண்ட மக்களுக்கு, இது ஒரு கச்சிதமான வாகனமாக அமையும். செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட்டின் அறிமுகம், இந்தியாவில் அளிக்கப்பட்டு வரும் லேண்டு ரேவார் தயாரிப்புகளின் விரிவாக்கத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும்” என்று கூறினார்.
இந்தியாவில் தற்போது தி லேண்டு ரோவர் ரேன்ஜ்ஜின் கீழ் தி ப்ளாக்ஷிப் ரேன்ஜ் ரோவர், ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட், டிஸ்கவரி 4 மற்றும் உள்ளூர் தயாரிப்பான ரேன்ஜ் ரோவர் ஈவோக் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.