லம்போர்கினி ஹரகேன் வோர்ஸ்டீனர் நோவாரா பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது !
published on நவ 09, 2015 02:45 pm by manish for லாம்போர்கினி ஹூராகான்
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
எப்போதுமே அட்டகாசமான வடிவமைப்டன் தனது கார்களை உருவாக்கும் இத்தாலி நாட்டு கார் தயாரிப்பாளரான லம்போர்கினியின் சிறப்பை உடைக்கும் விதத்தில் மிக சாதரணமான வடிவமைப்பு தத்துவத்தை பின்பற்றி உருவாக்கப்பட்ட லம்போர்கினி ஹரகேன் உலக அளவில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த "ரேஜிங் புல்" ப்ரேன்ட், வோர்ஸ்டீனர் என்ற பிரபல கார்பன் - அடிப்படை ஏரோடைனமிக்ஸ் மற்றும் சொகுசு கார்களுக்கான சக்கரங்கள் வடிவமைப்பு மற்றும் ட்யூநிங் நிறுவனம் லம்போர்கினி ஹரகேன் கார்களுக்காக நோவாரா ஏரோ ப்ரொக்ரேம் ஒன்றை வெளியிட்டுள்ளது. லம்போர்கினியை தவிர ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களான மெக்லாரென், BMW,பென்ட்லி, பெராரி மற்றும் இன்னும் பிற அதீத சொகுசு வாகனங்களின் வடிவமைப்பில் அந்தந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் தற்போது லாஸ்வேகாஸ், நெவேடாவில் நடந்து வரும் 2015 SEMA மோட்டார் ஷோவில் இந்த நோவாரா ஏரோ ப்ரொக்ரேம் காட்சிக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இது ஏதோ அர்த்தமற்ற ஸ்டைல் மட்டும் கொண்ட வடிவமைப்பு என்று சொல்லிவிட முடியாது ! பார்த்தவுடன் உள்ளத்தை கொள்ளைக் கொள்ளும் வடிவமைப்புடன் சேர்ந்து இந்த காரின் ஏரோடைனமிக் தன்மைகளை மேலும் நேர்த்தியாக்கும் ஏராளமான விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கார்பன் பைபர் முன்புற ஸ்ப்ளிட்டர், கார்பன் பைபர் முன்புற பெண்டர்ஸ், கார்பன் பைபர் பக்கவாட்டு ஸ்கர்ட், டிப்யூசர் மற்றும் ஏரோஸ்பேஸ் அலுமினிய தாங்கிகளுடன் கூடிய பின்புற விங்க்ஸ் (இறக்கைகள் ) போன்ற ஏரோடைனமிக் தன்மைகளை மேம்படுத்தும் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளைத் தவிர ஸ்டெய்ன்ன்லஸ் ஸ்டீல் எக்ஸ்ஹாஸ்ட் அமைப்பும் பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான V-FF 105 வீல் பொருத்தப்பட்டு, அதற்கு மேல் பிரேலி பி ஸீரோ டயர்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டயர்களும் நடந்து வரும் SEMA 2015 ல் காட்சிக்கு வைக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த லம்போர்கினி ஹரகேன் கார்களின் விலை ரூ. 3.43 கோடி (எக்ஸ் - ஷோரூம் , டெல்லி).
இதையும் படியுங்கள் :
0 out of 0 found this helpful