கியா செல்டோஸ் புதிய மற்றும் கூடுதல் அம்சங்களுடனான GTX + பெட்ரோல் - தானியக்க வகை வாகனங்களை அளிக்கவுள்ளது
published on ஆகஸ்ட் 23, 2019 12:57 pm by dinesh for க்யா Seltos 2019-2023
- 76 Views
- ஒரு கருத்தை எழுதுக
இதுவரை, கியா 1.4 லிட்டர் - DCT மாடல் மட்டுமே உயர்ரக GTX வகைகளில் இரண்டாம் நிலையில் அளித்து வந்தது.
-
புதிய ஜிடிஎக்ஸ்+, 360 டிகிரி கேமரா, நிழற்கூரை, தானியங்கும் முன்னிருக்கைகள் மற்றும் பாஸ் ம்யூசிக் சிஸ்டம் ஆகிய அம்சங்களை ஜிடிஎக்ஸைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்றுள்ளது.
-
புது ஜிடி வகைகள், 1.4 -லிட்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் யூனி்ட் மூலம் இயக்கப்பட்டு 140 பிஎஸ் மற்றும் 242 என்எம் உற்பத்தித் திறனைப் பெற்றுள்ளன.
-
6 ஸ்பீடு எம்டி அல்லது 7 ஸ்பீடு டிஸிடி (இரட்டை க்ளட்ச் ஆட்டோமாடிக்) ஆகிய ரகங்களில் இவற்றைப் பெறலாம்.
- 22 ஆகஸ்ட் 2019 அன்று இந்த செல்டோஸ் விற்பனைக்கு வருகிறது.
செல்டோஸ் எஸ்யூவி மாடலை 22 ஆகஸ்ட் 2019 அன்று இந்தியாவில் கியா அறிமுகம் செய்ய உள்ளது. இரு ரகங்களில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி விற்பனை செய்யப்பட உள்ளது: டெக் ரகம் மற்றும் ஜிடி ரகம். இவை மேலும் வகைக்கு நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜிடி ரகத்தில் ஜிடிஇ, ஜிடிகே, ஜிடிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ்+ வகைகளும், டெக் ரகத்தில் எச்டிஇ, எச்டிகே, எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ்+ வகைகளும் உள்ளன. இதில் ஜிடிஎக்ஸ்+ ரகமானது செல்டோஸ் ரகஙகளில் முதன்மையானது.
-
கியா செல்டோஸ் வி்ற்பனை துவங்குவதற்கு முன் வெளியிடப் பட்ட அதிகாரப்பூர்வ விவரங்கள்
பல புதிய அம்சங்களுடன் கூடிய ஜிடிஎக்ஸ்+ உடன் டிஸிடி ஆட்டாமேடிக் வகையையும் அறிமுகப்படுத்த கியா துவக்கத்தில் திட்டமிட்டு இருக்கவில்லை. எனினும் , முதலிடத்தில் உள்ள ஜிடிஎக்ஸ்+ டிஸிடி ஆட்டோமாடிக் உடன்வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம், 7-டிஸிடி உடன் கூடிய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் வண்டியை வாங்க உத்தேசித்துள்ளவர்கள் ஜிடிஎக்ஸ் ரகத்தைக் காட்டிலும் கூடுதலாக ஜிடிஎக்ஸ்+ ரகத்தில் உள்ள அதிக வசதிகளைத் தவற விடாமாட்டார்கள்.
ஜிடிஎக்ஸ்+ ரகங்கள், பாஸ் சவுண்டு சிஸ்டம்,360 டிகிரி கேமரா, நிழற்கூரை, முன்பகுதி பார்க்கிங் சென்ஸார், ப்ளைண்ட் வ்யூ மானிட்டர் (இண்டிகேட்டர்கள் இயக்கப் படும போது பக்கவாட்டுக் கேமராக்கிலிருந்து காணொளி பெறும் 7 இன்ச் எம்ஐடி), மின்சாரத்தில் இயங்கும் மேற்கூரை, காற்றோட்ட வசதியுடைய இருக்கைகள் மற்றும் 8 வகையில் மாற்றியமைக்கக் கூடிய ஓட்டுனர் இருக்கை ஆகிய அம்சங்களை ஜிடிஎக்ஸ் ரகங்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்றுள்ளது.
செல்டோஸுடைய ஜிடி ரகங்கள் பெட்ரோலால் மட்டும் இயங்கும் 1.4 லிட்டர் டர்போ சாரஜ்ட் என்ஜின்களைக் கொண்டவை. இவை 140 பிஎஸ் மற்றும் 252 என்எம் முறுக்கு திறனையும் உற்பத்தி செய்கின்றன. செல்டோஸ் வரிசையிலேயே அதிவேகமாக இயங்கக் கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின், 9.7 வினாடிகளில் மணிககு 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் பெற்றது. புது 1.4 லிட்டர் செல்டோஸின் எரிபொருள் பயன்பாட்டுத் திறன், டிஸிடியுடன் மணிக்கு 16.5 கி.மீ என்றும் 6 ஸ்பீட் கைமுறை கியர் பெட்டியுடன் மணிக்கு 16.1 கி.மீ என்றும் உறுதி செய்யப்ட்டுள்ளது.
-
கியா செல்டோஸ் மாடல்களின் விலைகள் பிற போட்டி மாடல்களின் விலைகளை ஒப்பிடுகையில் எந்த இடத்தில் உள்ளன?
செல்டோஸ் மாடல்களின் விலையைப் 10 லிருந்து 16 லட்சத்திற்குள் (எக்ஸ் ஷோரூம்) கியா நிறுவனம் நிர்ணயிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி எஸ் க்ராஸ், நிசான் கிக்ஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் ரெனால்ட் கேப்டர் போனற பிற நிறுவன மாடல்களுக்குப் போட்டியாக அமையும். செல்டோஸின் உயர் ரக மாடல்கள் விலையைப் பொறுத்தவரை நடுத்தர எஸ்யூவீக்களான டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவற்றிற்கும் போட்டியாக அமையும்.
0 out of 0 found this helpful