ஜீப் ராங்குலர் ரூபிகான் ரூபாய் 68.94 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
published on மார்ச் 06, 2020 03:43 pm by sonny for ஜீப் வாங்குலர் 2023-2024
- 53 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹார்ட்கோர் ராங்லர் ஐந்து கதவுகளுடைய அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
-
புதிய ராங்லர் ரூபிகான், ராங்லர் அன்லிமிடெட்டைக் காட்டிலும் கரடுமுரடான பகுதிகளில் செல்வதற்கான சிறப்பு திறன்களைக் கொண்டுள்ளது.
-
இது ஒரு சிறந்த 4x4 இயக்கி, பெரிய அணுகுமுறை, மோதும் திறன் மற்றும் புறப்படும் கோணங்களையும் கொண்டுள்ளது.
-
இது 8-வேக ஏடி பொருத்தப்பட்ட 268பிஎஸ் / 400என்எம்-ஐ உருவாக்குகிற அதே 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறதுது.
-
இது அதே செளகரியமான சிறப்பம்சங்களுடன் ராங்லர் அன்லிமிடெட்டைப் போன்ற உட்புற அமைவைக் கொண்டுள்ளது.
ராங்லர் ரூபிகான் என்பது மிகவும் கரடுமுரடான பகுதிகளில் செல்வதற்கான ஜீப் ராங்லரின் பதிப்பாகும், இது தற்போது இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது அறிமுகத்திற்கு முந்தைய ஆர்டரில் ரூபாய் 68.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையுடன் கிடைக்கிறது, அதே நேரத்தில் மார்ச் 15 முதல் விநியோகத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராங்லர் ரூபிகானின் 5-கதவு உடைய அம்சத்தை இந்தியாவுக்காக ஜீப் கொண்டு வந்துள்ளது. காம்பஸ் டிரெயில்ஹாக்கைப் போலவே, ரூபிகானுக்கும் “சோதனை மதிப்பீடு” செய்யப்பட்டது, மேலும் இது அதிலுள்ள ஸ்போர்ட்ஸ் முத்திரையையும் பெறுகிறது. இது ஜீப்பின் ராக் ட்ராக் 4 x 4 இயக்கியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 4:1 4எல்ஓ விகிதம், முழுநேர முறுக்கு திறன் மேலாண்மை மற்றும் அழுத்தங்களைத் தாங்கக் கூடிய வகையிலான டானா 44 முன் மற்றும் பின்புற அச்சுகளுடன் இரு வேகப் பரிமாற்ற நிலையைக் கொண்டுள்ளது. அதே ஆற்றல் இயக்கியைப் பெறுகிறது - 268பிஎஸ் மற்றும் 400என்எம் ஐ உருவாக்குகிற 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்தைக் கொண்டுள்ளது, அதே சமயத்தில் 8-வேகத் தானியங்கி முறையுடன் பொருத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்பட்ட ராங்லர் அன்லிமிடெட்டுடன் ஒப்பிடுகையில், ரூபிகான் தரையிலிருந்து 217 மிமீ உயரம், அதிக அளவு அணுகுமுறை, மோதும் திறன் மற்றும் புறப்படும் கோணங்கள், புதிய கருப்பு பாதுகாப்பு கவசம் மற்றும் முன்பக்க கதவு படங்கள் ஆகிய அம்சங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. பூட்டுகின்ற வேறுபாடுகளுடன் மின்னணு முறையில் இயக்கப்படும் முன் ‘ஸ்வே பார்’ மூலம் அதன் கரடு முரடான பாதைகளில் செல்லக்கூடிய திறன்கள் மேலும் மேம்படுத்தப்படுகின்றன. ஒரு ராங்லராக, சுலபமாக நீக்கி பொருத்தக்கூடிய மேற்புறக்கூரை மற்றும் கதவுகளை கொண்டுள்ளது அதுமட்டும் இல்லாமல் கீழே இறக்கி ஏற்றக்கூடிய கண்ணாடியையும் கொண்டுள்ளது. அன்லிமிடெட் வகையில் உள்ள அனைத்து-நிலப்பகுதியிலும் செல்லக்கூடிய 18-அங்குல டயர்களுடன் ஒப்பிடும்போது ரூபிகான் 255/75 சேறு நிறைந்த நிலப்பகுதியில் எளிதில் செல்லக்கூடிய 17-அங்குல உலோக சக்கரங்களைப் பெறுகிறது.
|
ராங்லர் ரூபிகான் |
ராங்லர் அன்லிமிடெட் |
தரை அனுமதி |
217எம்எம் |
215எம்எம் |
அணுகக்கூடிய கோணம் |
43.9o |
41.8o |
மோதும் கோணம் |
22.6o |
21o |
புறப்படும் கோணம் |
37o |
36.1o |
அன்லிமிடெட் வகையில், கருவித் தொகுப்பில் 7-அங்குல எம்ஐடி, 8.4-அங்குல யுகனெக்ட் தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, இரு மண்டல காலநிலை கட்டுப்பாடு, வேகக் கட்டுப்பாடு மற்றும் தானியங்கி முறையிலான எல்இடி முகப்பு விளக்குகள் காணப்படுகிறது, இந்த அம்சங்கள் அனைத்தும் ராங்குலரின் உட்புற அமைவிலும் காணப்படுகிறது. பாதுகாப்பு சிறப்பம்சங்களில், இரு முன்பக்க காற்றுப்பைகள், பக்கவாட்டு இருக்கை பொருத்தப்பட்ட பயணிகள் பக்கவாட்டு காற்றுப்பைகள், பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் கேமரா, டயர் காற்று அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு, வாகனத்தின் மின்னணு முறையிலான வேக கண்காணிப்பு, ஏபிஎஸ், மலை ஏற்றத்திற்கான உதவி, மலையிலிருந்து இறக்குவதற்கான கட்டுப்பாடு மற்றும் மின்னணு முறை கட்டுப்பாடு ஆகியவை அடங்கும்.
ராங்குலர் ரூபிகானில் கூடுதலாக கரடுமுரடான பாதைகளில் செல்லக்கூடிய திறன்கள் இணைக்கப்பட்டதால், ராங்குலர் அன்லிமிட்டெட்டை காட்டிலும் ரூபாய் 5 லட்சம் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இதற்கு நேரடி போட்டியாளர்கள் கிடையாது.
மேலும் படிக்க: ஜீப் ரேங்லர் தானியங்கி முறை
0 out of 0 found this helpful