ஜீப் ரெனகேட் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்த வேலைகள் நடைபெறுகிறதா ?
ஜீப் கிராண்டு சீரோகி க்கு published on dec 11, 2015 12:48 pm by manish
- 8 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : பியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் தங்களது உலக புகழ்பெற்ற ' ஜீப் ' ப்ரேன்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்த வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக , தனது கச்சிதமான SUV பிரிவைச் சேர்ந்த ரெனகேட் வாகனங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு உதவிகரமாக இருக்கும் பொருட்டே இந்த ரெனகேட் SUV இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்த வருட பிப்ரவரி மாதம் ஜீப் இந்தியாவில் தனது செயல்பாடுகளை ஷெரோகி SUV வாகனங்களுடன் துவுக்கும் என்றும் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ரேங்க்லர் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அமெரிக்காவில் இருந்த நேரிடையாக நான்கு ரெனகேட் SUV மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவைகளில் இரண்டு மாடல்களில் 4X2 கட்டமைப்பும் , மற்ற இரு மாடல்களில் 4X4 டிரைவ் வகையும் காணப்படுகின்றன. மும்பை நகரத்திற்கு வந்து சேர்ந்துள்ள இந்த வாகனங்கள் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் பியட் நிறுவனமும் கூட்டு உரிமையாளராக உள்ள அவர்களது ரஞ்சன்காவுன் தொழிற்சாலைக்கும் பயணப்பட்டுக் கொண்டிருக்கலாம் என்று யூகிகிகப்படுகிறது. சௌபாவின் இறக்குமதி புள்ளி விவரங்களின் படி இந்த ஒவ்வொரு மாடலின் விலையும் ரூ. 17.49 லட்சங்களை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெரோகி மற்றும் ரேங்க்ளர் SUV வாகனங்களைத் தவிர ஜீப் ரெனகேட் வாகனங்களும் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதற்கான ஒரு வலுவான சாத்தியக்கூறாகவே இதை நாம் பார்க்கிறோம். ரெனகேட் CKD யாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஒன்றிணைக்க (அஸ்ஸம்ப்ளிங்) செய்யப்படலாம் என்றும் தெரியவருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உற்பத்தி செலவை வெகுவாக குறித்து ஹயுண்டாய் க்ரேடா , ரெனால்ட் டஸ்டர் மற்றும் கச்சிதமான SUV பிரிவைச் சேர்ந்த மற்ற வாகனங்களுடன் கடுமையாக போட்டியிட முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது.
மேலும் வாசிக்க
- 2016 –ஆம் ஆண்டு ஜீப் இந்தியாவிற்கு வருகிறது – அநேகமாக இது இறுதியான முடிவாக இருக்கும்
- ஜீப்பிற்கு பின் இணைய திருடர்களின் அடுத்த இலக்கு - டெஸ்லா மாடல் S
- Renew Jeep Grand Cherokee Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful