ஆட்டோ எக்ஸ்போ மூலம் ஜீப் செரோகீ, செரோகீ SRT ஆகியவை இந்திய அரங்கேற்றம் பெறுகின்றன
ஜீப் கிராண்டு சீரோகி 2016-2020 க்காக பிப்ரவரி 04, 2016 12:53 pm அன்று saad ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்போது நடைபெற்று வரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்காக, அதன் ராங்குலர் கிராண்ட் செரோகீ மற்றும் SRT பதிப்பு ஆகியவற்றை ஜீப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பிராண்டின் அதிகாரபூர்வமான அறிமுகம், 2016 மத்தியில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தயாரிப்புகளின் விலை விவரம் அதன்பிறகு அறிவிக்கப்படும்.
கிராண்ட் செரோகீ-யில், லிமிடேட் மற்றும் சும்மிட் என்ற இரு வகைகள் அளிக்கப்பட உள்ளது. ஆனால் இவ்விரண்டும் ஒரே 3.0-லிட்டர் மூலம் ஆற்றலை பெறும். இது 240 bhp ஆற்றலையும், 570 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்க வல்லது.
இந்த கிராண்ட் செரோகீ SRT என்பது பிரபலமான SUV-யின், ஒரு உயர்-ஆற்றல் (ஹை-ஆக்டேன்) மிகுந்த பதிப்பு ஆகும். இதன் தாய் நிறுவனமான FCA, நீண்டகாலமாக இந்தியாவிற்கு இந்த பிராண்டை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வந்த போதும், கடந்த சில மாதங்களாக தான் அதற்கு பலன் கிடைத்தது. இந்த கார்களின் அறிமுகம் எந்நேரமும் நடைபெறலாம் என்பதால், அவை இந்திய சந்தையின் ஒளியில் விரைவில் மிளிர உள்ளன.
இந்த கிராண்ட் செரோகீ SRT-யின் வெளிபுற அமைப்புகளில் பாக்ஸ் போன்ற அமைப்பை கொண்டு, இது ஒரு சமகால SUV-களின் டிசைனை தழுவியுள்ளது என்பதை தெளிவாக வெளிக் காட்டுகிறது. இதன் ஒரு பாக்ஸ் போன்ற அமைப்பை தவிர, இந்த SUV-யில் காணப்படும் வரிகளும், முனைகளும் மென்மையாக உள்ளன. இதில் உள்ள ஹூட் ஸ்கூப்கள், தாழ்ந்த நிலை (லோவர்டு ஸ்டேன்ஸ்), முன்பக்க மற்றும் பின்பக்க டிஃப்யூசர்கள் உள்ளிட்டவை எல்லாம் சேர்ந்து அதன் மிரட்டும் தோற்றத்திற்கு அழகு சேர்க்கிறது என்பதை மறக்க முடியாது. மேலும் கவர்ச்சிகரமான மற்றும் காரியமாக பார்ப்பது போன்ற ஹெட்லெம்ப் டிசைன் ஆகியவை சேர்ந்து அதற்கு ஒரு அதிகார தோரணையை அளிக்கிறது.
பெரிய உருவத்தை கொண்ட மிருகத்தை போன்ற இந்த SUV வாகனத்தை இழுக்கும் வகையில் சிறப்பான முறையில் டியூன் செய்யப்பட்ட 6.4-லிட்டர் HEMI V8 ஆற்றலை அளிக்கிறது. இதில் 4WD தேவைப்படுவதால், ஆற்றலகம் ஒரு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு, குவாட்ரா-டிராக் ஆக்டிவ் மூலம் ஆற்றலானது 4 வீல்களுக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கப்படுகிறது. ஆட்டிவ் சஸ்பென்ஸன் சிஸ்டத்துடன் இணைந்துள்ள உயர்-செயல்திறன் கொண்ட பிரிம்போ பிரேக்குகளின் உதவியுடன், வாகனத்தை நிறுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
மேலும் வாசிக்க